டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆஹா.. இதை கவனிச்சீங்களா.. பெயரை மாற்றி விட்டார் மோடி.. டிவிட்டரில்!

Google Oneindia Tamil News

டெல்லி: தேர்தல் நெருங்க நெருங்க என்னவெல்லாம் நடக்குமோ.. பிரதமர் நரேந்திர மோடி தனது டிவிட்டரில் பெயரை மாற்றி விட்டார்.

டிவிட்டர் அரசியல் என்றதுமே நம்மூரில் நமக்கு நினைவுக்கு வரும் அரசியல்வாதி ம.நீ.ம கமல். ஆனால் உலக அளவில் டிவிட்டரில் அதிக பாலோயர்சை கொண்டிருக்கும் பிரபலங்களுள் ஒருவர் நமது பிரதமர் மோடி. Go Back Modi யிலும் அவர்தான் உலக அளவில் டிரென்ட் என்பது வேறு கதை. மோடி இப்போது பிரபல சமூக வலைத்தளமான டிவிட்டரில் அவரது கணக்கு நரேந்திர மோடி என்ற பெயரிலேயே இருந்து வந்தது. தற்போது அது சவ்கிதார் நரேந்திர மோடி என்று மாற்றப்பட்டுள்ளது.

கடந்த 2014 ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலின்போது நாங்கள் ஆட்சிக்கு வந்தால் என்று அனைத்துக் கட்சிகளும் நீட்டி முழக்கியபோது பாஜகவும் மோடியும் மக்களையும் அவர்களின் பணத்தையும் பாதுகாக்கும் பாதுகாவலர்களாக இருப்போம் என்று கூறியிருந்தார்கள். இது அப்போது அனைத்து சமூக வலை தளங்களிலும் பெரிய வெற்றியை பெற வைக்கப்பட்டது.

நோட்டா கூட போட்டி.. முடி கொட்டிப் போச்சி.. முடிவு தெரிஞ்சி போச்சி.. கடுமையாக விளாசிய தினகரன் நோட்டா கூட போட்டி.. முடி கொட்டிப் போச்சி.. முடிவு தெரிஞ்சி போச்சி.. கடுமையாக விளாசிய தினகரன்

ராகுலின் விமர்சனம்

ராகுலின் விமர்சனம்

இந்த நிலையில் ரஃபேல் போர் விமான பிரச்சனையில் இந்நாட்டின் பாதுகாவலரே பெரிய திருடனாக உள்ளார் என்று ராகுல் குறிப்பிட்டார். ரஃபேல் ஊழல் குறித்து விமர்சித்த ராகுல் தேசத்தின் பாதுகாவலர் ஒரு திருடன் என்று குறிப்பிட்டார். இந்த ஹேஷ்டேக் உலகம் முழுவதும் டிரென்ட் ஆனது. இது பாஜகவுக்கு கடும் கோபத்தை கிளப்பியது.

பிரச்சார உத்தி

பிரச்சார உத்தி

இதனையடுத்து இதையே இந்த தேர்தலின் பிரச்சாரமாக முன்னெடுக்க பாஜக திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள மோடி உங்களுடைய பாதுகாவலனாகிய நான் உறுதியாக நின்று நாட்டுக்கு சேவை புரிந்து வருகிறேன். ஆனால் ஊழலுக்கு எதிராகவும், தீய செயல்களுக்கு எதிராக போராடும் நாட்டு மக்கள் அனைவருமே இந்த நாட்டின் பாதுகாவலர்கள்தான் என்று பதிவிட்டுள்ளார்.

மக்களுக்கு வேண்டுகோள்

மக்களுக்கு வேண்டுகோள்

இதன் மூலம் தேசத்தின் பாதுகாவலர் தான் மட்டுமல்ல இந்நாட்டில் அனைவருமே என்று உணர்த்துகிறார் மோடி அதாவது ராகுலின் விமர்சனம் தன்னை மட்டும் குறிப்பிட்டபோது அதை புத்திசாலித்தனமாக இந்நாட்டின் அனைவருமே பாதுகாவலர்கள் என்று அனைவரையும் இந்த வட்டத்திற்குள் இழுத்து விட்டுள்ளார் மோடி. அதோடு மேற்கண்ட பதிவின் முடிவில் நானும் தேசத்தின் பாதுகாவலனே என்ற உறுதி மொழியையும் எடுக்குமாறு மோடி மக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

சவ்கிதார் மோடி

சவ்கிதார் மோடி

இந்த நிலையில்தான் தனது டிவிட்டர் அக்கவுண்டின் பெயரை சவ்கிதார் நரேந்திர மோடி என்று பெயர் மாற்றம் செய்துள்ளார். சவ்கிதார் என்ற ஹிந்தி சொல்லுக்கு பாதுகாவலர் என்பது பொருள். மோடி தனது கணக்கின் பெயரை மாற்றியதை அடுத்து பாஜக தலைவர்களான அமித்ஷா, பியுஸ் கோயல் உள்ளிட்ட பலரும் தங்களது டிவிட்டர் கணக்கின் பெயரை சவ்கிதார் என்ற அடைமொழியோடு மாற்றம் செய்து வருகின்றனர்.

காவலர்கலுக்கு போய்ச் சேருமா

காவலர்கலுக்கு போய்ச் சேருமா

இப்படி டிவிட்டரில் மட்டுமல்லாது கஜா புயல், ஒகி புயல் போன்ற இயற்கை பேரிடர்கள் வரும்போதும் நாட்டின் பாதுகாவலர்கள் அதை முன் கூட்டி கணித்து நாட்டு மக்களை பாதுகாப்பதோடு, மனித மற்றும் தொழில்நுட்ப சக்திகளை மீறி இயற்கை நம்மை தாக்கும்போது குறைந்த பட்சம் இந்த தேசத்தின் பாதுகாவலர்கள் மக்களுக்கு ஆறுதல் சொல்லி தேற்றவாவது வர வேண்டும் என்று இந்த நாட்டின் குடிமக்களாகிய, வாக்காள பெருங்குடி மக்கள் வேண்டுகோள் விடுக்கிறார்கள். இந்த அபலக் குரல்கள் தேசத்தின் பாதுகாவலர்களின் காதுகளுக்கு போய் சேருமா அல்லது வழக்கம்போல காற்றில் கரைந்து விடுமா என்பதே வாக்காள பெருங்குடி மக்களின் கேள்வி?

English summary
Prime Minister Narendra Modi has changed his name as Chowkidar Narendra Modi in Twitter.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X