டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

காலையிலேயே வீட்டுக்கு சென்ற மோடி, அமித் ஷா.. அத்வானிக்கு ஹேப்பி பர்த்டே சொல்லி வாழ்த்து

Google Oneindia Tamil News

Recommended Video

    காலையிலேயே வீட்டுக்கு சென்று வாழ்த்து கூறிய மோடி, அமித்ஷா

    டெல்லி: பாஜக மூத்த தலைவரான அத்வானிக்கு, பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, உள்ளிட்டோர் நேரில் சென்று பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

    பாஜகவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்படுபவர் எல்.கே.அத்வானி. இருப்பினும் நரேந்திர மோடி, அமித் ஷா ஆகியோர் பாஜகவில் பலமிக்க தலைவர்களாக உருவான பிறகு தீவிர அரசியலில் இருந்து, அத்வானி, விலகி இருக்கிறார்.

    Narendra Modi meets senior BJP leader LK Advani on his 92nd birthday

    பாஜகவின் அறிவுரை குழு உறுப்பினராக அத்வானி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அன்றாட அரசியலில் இருந்து அவர்கள் விலகியே இருக்கிறார்கள்.

    இந்தநிலையில் அத்வானியின் 92வது பிறந்தநாளை முன்னிட்டு, டெல்லியில் உள்ள அவரது இல்லத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா, ஆகியோர் நேரில் சென்று பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.

    இதன்பிறகு, துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடுவும், அத்வானி இல்லத்திற்கு வந்து வாழ்த்து தெரிவித்தார்.

    பாபர் மசூதி இடிப்பு வழக்கில் வழக்கை எதிர்கொண்டு வருபவர் அத்வானி. ராமர் கோவில் கட்டவேண்டும் என்று நாடு முழுக்க, ரத யாத்திரை நடத்தி, பாஜகவுக்கு ஆதரவு திரட்டியவர் அத்வானி.

    பெண் போலீஸ் அதிகாரியை சரமாரியாக தாக்கிய வக்கீல்கள்.. ஷாக் வீடியோ வெளியானதுபெண் போலீஸ் அதிகாரியை சரமாரியாக தாக்கிய வக்கீல்கள்.. ஷாக் வீடியோ வெளியானது

    அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பை விரைவில் வழங்க உள்ள நிலையில், அத்வானி மீண்டும் லைம் லைட்டுக்கு வந்துள்ளார். வருடா வருடம் அவரது பிறந்த நாள் தினத்தன்று அத்வானியின் வீட்டுக்கே சென்று பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவிப்பது வழக்கம், என்றாலும் இப்போதைய பரபரப்பான சூழலில் இந்த சந்திப்பு இன்னும் அதிக முக்கியத்துவம் பெறுகிறது.

    English summary
    Delhi: PM Narendra Modi meets senior BJP leader LK Advani at the latter's residence on his 92nd birthday. Vice President Venkaiah Naidu, BJP President Amit Shah and BJP working President JP Nadda also present.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X