டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பெண்கள் தினம்: மோடியின் சமூகவலைதள கணக்குகளை நிர்வகிக்கும் சென்னை பெண் உள்பட 7 சிங்கப் பெண்கள்

Google Oneindia Tamil News

டெல்லி: பெண்கள் தினத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோடியின் சமூகவலைதளக் கணக்குகளை சென்னை பெண் உள்பட 7 பெண்கள் நிர்வகிக்கும் பொறுப்பை ஏற்றுள்ளனர்.

Recommended Video

    #SheInspiresUs: Pm modi announcement for women | எனது சமூக வலைதள பக்கங்களை... பெண்களே நிர்வகிக்கலாம் - மோடி

    கடந்த 5 நாட்களுக்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடி திடீரென ஒரு ட்வீட் போட்டார். அதில் வரும் ஞாயிற்றுக்கிழமை எனது சமூகவலைதள கணக்குகளிலிருந்து விலகியிருக்க முடிவு செய்துள்ளேன் என்றார்.

    ட்விட்டரில் பிரதமர் மோடியை 53 மில்லியன் பேர் பின்தொடர்ந்து வருகின்றனர். இவரது ட்வீட் அவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மேலும் #NoSir, #NoModiNoTwitter என்ற ஹேஷ்டேக்குகளை டிரென்ட் செய்தனர்.

    சமூகவலைதளம்

    சமூகவலைதளம்

    இதையடுத்து அடுத்த நாளே மோடி இந்த ட்வீட்டின் சஸ்பென்ஸை உடைத்தெறிந்தார். ஆம் வரும் ஞாயிற்றுக்கிழமை மகளிர் தினத்தையொட்டி எனது சமூகவலைதள கணக்குகளை அன்று ஒரு நாள் பெண்களிடம் ஒப்படைக்க தயாராக உள்ளதாக தெரிவித்தார். வாழ்வில் சாதிக்கும் உத்வேகம் கொண்ட பெண்களுக்கு என் சமூகவலைதள கணக்குகளை நிர்வகிக்கும் வாய்ப்பு கொடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

    சாதனை

    சாதனை

    இதையடுத்து நெட்டிசன்கள் நிம்மதி பெருமூச்சுவிட்டனர். இன்றைய தினம் நாடு முழுவதும் பெண்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இன்றைய தினத்தில் பிரதமர் மோடி தனது ட்விட்டரில் வாழ்த்துகளை தெரிவித்துவிட்டு விலகினார். அவர் தன் பதிவில் சர்வதேச பெண்கள் தின வாழ்த்துகள். பெண்களின் மனநிலை மற்றும் சாதனைகளுக்கு தலை வணங்குவோம்.

    சாதனை பெண்கள்

    சாதனை பெண்கள்

    நான் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கூறியது போல்,பெண்கள் தினமான இன்று சமூகவலைதளங்களிலிருந்து விலகுகிறேன். இந்த நாள் முழுவதும் எனது ட்விட்டர் கணக்கை 7 பெண்கள் நிர்வகிப்பர். அவர்கள் வாழ்க்கை பயணத்தில் சாதித்த தருணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வர். இந்தியாவில் அனைத்து பகுதிகளிலும் சாதனை பெண்கள் ஏராளமானோர் உள்ளனர்.

    7 பெண்கள்

    பல்வேறு துறைகளில் இவர்களது பணிகள் அளப்பரியது. அவர்களின் போராட்டங்கள், ஆசைகள், ஆர்வங்கள், லட்சியம் ஆகியவை லட்சக்கணக்கானோரை ஊக்குவிக்க உதவும். பெண்களிடம் இருந்து நிறைய கற்போம். பெண்களின் சாதனைகளை கொண்டாடுவோம் என மோடி தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இந்த 7 பெண்களில் சென்னையை சேர்ந்த பெண்ணும் ஒருவர்.

    English summary
    PM Narendra Modi in his tweet greets on International Women's day and he is signing off from Social Media accounts.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X