டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொடுப்பதற்காக நாம் படைக்கப்பட்டுள்ளோம்.. எடுப்பதற்கு அல்ல.. கேதார்நாத்தில் மோடி திடீர் பிரஸ்மீட்!

Google Oneindia Tamil News

Recommended Video

    கேதார்நாத்தில் பிரதமர் நரேந்திர மோடி திடீர் பிரஸ்மீட்!

    டெல்லி: கேதார்நாத்தில் புனித பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, கொடுப்பதற்காக நாம் படைக்கப்பட்டுள்ளோம். எடுப்பதற்காக அல்ல என தெரிவித்துள்ளார்.

    இறுதி கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வரும் நிலையில் உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள ருத்ரபிரயாக்கில் உள்ளது கேதார்நாத். இங்குள்ள கோயிலுக்கு நேற்றுமுன்தினம் ஹெலிகாப்டரில் புறப்பட்டு சென்றார் பிரதமர் நரேந்திர மோடி.

    அதிகாலை அங்குள்ள கோயிலை சுற்றி பார்த்த மோடி அங்கு நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளையும் பார்வையிட்டார். பின்னர் மலை பகுதியை சுற்றி பார்த்தார்.

    தடி

    தடி

    இடுப்பில் காவி துண்டுடன் கையில் தடியை எடுத்துக் கொண்டு 2 கி.மீ. தூரம் உள்ள சிறிய பனிகுகையினுள் நேற்று தியானத்தில் அமர்ந்தார். இதையடுத்து விடிய விடிய அவர் தியானம் செய்தார். இந்த குகைக்கு அருகில் செய்தியாளர்களோ தனிப்பட்ட நபர்களுக்கோ அனுமதி கிடையாது.

    தேர்தலுக்கு ஒரு நாளுக்கு முன்பே வாக்காளர்களுக்கு மை, பணம்.. பாஜக மீது கிராமத்தினர் புகார் தேர்தலுக்கு ஒரு நாளுக்கு முன்பே வாக்காளர்களுக்கு மை, பணம்.. பாஜக மீது கிராமத்தினர் புகார்

    வெளியே வந்த மோடி

    வெளியே வந்த மோடி

    இந்த நிலையில் இன்று தியானத்தை முடித்துக் கொண்டு மோடி வெளியே வந்தார். அப்போது அங்கிருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறுகையில் கேதார்நாத்தில் வழிபட்டதால் நான் அதிர்ஷ்டசாலி.

    காணொலி காட்சி

    காணொலி காட்சி

    நாட்டில் நடப்பதிலிருந்து விலகி ஆன்மீக பயணமாக கேதார்நாத்துக்கு வந்துள்ளேன். கேதார்நாத்துக்கும் எனக்கும் ஒரு உணர்வுப்பூர்வமான உறவு உள்ளது. காணொலி காட்சி மூலம் எனக்கான தகவல்களை நான் சேகரித்து வருகிறேன்.

    அமித்ஷா

    அமித்ஷா

    எனக்காக எதையும் கேட்டு நான் கோயிலுக்கு செல்வது இல்லை. கொடுப்பதற்காக நாம் படைக்கப்பட்டுள்ளோம். எடுப்பதற்காக அல்ல என்று பிரதமர் மோடி தெரிவித்தார். சுமார் 5 ஆண்டுகளாக இதுவரை செய்தியாளர்களை சந்திக்காத மோடி கடந்த வெள்ளிக்கிழமை அமித்ஷாவுடன் செய்தியாளர்களை சந்தித்தார்.

    பத்ரிநாத் பயணம்

    பத்ரிநாத் பயணம்

    இதைத் தொடர்ந்து இன்றுதான் முதல் முறையாக தனியாக செய்தியாளர்களை சந்தித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து அவர் பத்ரிநாத்துக்கும் புனிதப்பயணம் மேற்கொள்கிறார். மன அமைதிக்காக கேதார்நாத்துக்கு மக்கள் புனிதப்பயணம் மேற்கொள்ள வேண்டும் என மோடி வேண்டுகோள் விடுத்தார்.

    English summary
    PM Narendra Modi says that he offer prayers in Kedarnath only for interest of the people not for him.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X