டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எல்லாம் முடிஞ்சி போச்சு.. இனி பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை இல்லை.. ஆக்ஷன்தான்.. பிரதமர் மோடி அதிரடி

Google Oneindia Tamil News

Recommended Video

    பாகிஸ்தான் ராணுவ வாகனம் மீது தற்கொலைப்படை தாக்குதல்- வீடியோ

    டெல்லி: பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான காலம் முடிந்து விட்டது என பிரதமர் நரேந்திர மோடி அதிரடியாக தெரிவித்தார்.

    ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த வியாழக்கிழமை 70-க்கும் மேற்பட்ட வாகனங்களில் 2500 சிஆர்பிஎஃப் வீரர்கள் சென்று கொண்டிருந்தனர். அப்போது தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த 19 வயது இளைஞர் 350 கிலோ வெடிப்பொருட்களுடன் காரில் வந்து அப்படியே ராணுவ வீரர்களின் வாகனத்தில் மோதினார்.

    Narendra Modi says that hereafter no talks with Pakistan

    இதில் கார் வெடித்து சிதறியதில் 40 வீரர்கள் வீரமரணமடைந்தனர். இதனால் இந்தியாவே கொதித்து போய் உள்ளது. இதனிடையே சம்பவம் நடந்த நாள் அன்று பிரதமர் மோடி கூறுகையில் அவர்களுக்கு உரிய பதிலடியை கொடுங்கள் என்று தெரிவித்துள்ளார்.

    இந்த நிலையில் ராஜஸ்தான் அருகே உள்ள இந்திய- பாகிஸ்தான் எல்லையில் போர் விமானங்கள் ஒத்திகை நிகழ்ச்சியில் ஈடுபட்டன. இதனால் இந்தியா போருக்கு தயாராகி வருகிறதாகவே கருதப்படுகிறது.

    இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி கூறுகையில் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான காலம் முடிந்துவிட்டது. பயங்கரவாதத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டுவது அதை ஊக்குவிப்பதாக அமையும்.

    புல்வாமாவில் நடந்த கொடூர தாக்குதல் பேச்சுக்கான காலம் முடிந்துவிட்டதையே காட்டுகிறது. உலக நாடுகள் ஒன்றிணைந்து பயங்கரவாதத்துக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

    English summary
    PM Narendra Modi says that hereafter no talks with Pakistan. World Nation has to take action against Terrorism.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X