டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஏழ்மை, வேலைவாய்ப்பின்மை, வறட்சியை எதிர்த்து போராட வேண்டிய தருணம் இது- பிரதமர் மோடி பேச்சு

Google Oneindia Tamil News

டெல்லி: ஏழ்மை, வேலைவாய்ப்பின்மை, வறட்சியை எதிர்த்து போராட வேண்டிய தருணம் இது என பிரதமர் நரேந்திர மோடி நிதி ஆயோக் கூட்டத்தில் பேசினார்.

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் 5-ஆவது நிதி ஆயோக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள் பங்கேற்றனர். எனினும் மம்தா பானர்ஜி, சந்திரசேகர ராவ், அமரீந்தர் சிங் ஆகியோர் பங்கேற்கவில்லை.

Narendra Modi says that Its the time to eradicate povery, joblessness, drought

இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில் 2022-ஆம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க திட்டமிடப்பட்டுள்ளது. மத்திய அரசின் விவசாய நலத்திட்டங்கள் குறிப்பிட்ட நேரத்தில் விவசாயிகளை சென்று சேர வேண்டும்.

ஏழ்மை, வேலைவாய்ப்பின்மை, வறட்சி ஆகியவற்றை எதிர்த்து போராட வேண்டிய தருணம் இது. 2024-ஆம் ஆண்டுக்குள் 5 டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு பொருளாதார நாடாக இந்தியாவை மாற்றுவதே லட்சியம்.

இந்த சவாலை மாநிலங்களின் முயற்சியால் மட்டுமே எட்டமுடியும். புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஜலசக்தி துறை அமைச்சகம் தண்ணீர் தட்டுப்பாடு பிரச்சினையில் உதவும். 2025-ஆம் ஆண்டுக்குள் காசநோயை ஒழிக்க வேண்டும்.

2024-ஆம் ஆண்டுக்குள் குழாய்கள் மூலம் தண்ணீர் விநியோகம் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என பிரதமர் மோடி தெரிவித்தார்.

English summary
PM Narendra Modi says in Nidi aayog meeting that it's the time to eradicate Poverty, joblessness and drought.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X