டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இந்தியா- சீனா எல்லை பிரச்சினை.. 19ம் தேதி அனைத்து கட்சி கூட்டம்.. பிரதமர் மோடி முக்கிய அழைப்பு

Google Oneindia Tamil News

டெல்லி : இந்தியா சீனா எல்லை பிரச்சினை குறித்து விவாதிக்க 19ம் தேதி மோடி தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று ஒரு பக்கம் படுவேகமாக பரவி உயரிழப்பு கடுமையாக அதிகரித்துள்ள நிலையில், மறுபக்கம் எல்லைகளில் பதற்றம் அதிகரித்துள்ளது. ஒருபக்கம் பாகிஸ்தான், மறு பக்கம் சீனா, இன்னொறு பக்கம் நேபாளம் என மூன்று நாடுகளும் இந்தியாவுக்கு எதிராக திரும்பி உள்ளன.

குறிப்பாக சீனா, ஜம்மு காஷ்மீரின் லடாக் எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்திய ராணுவ வீரர்கள் மீது திங்கள்கிழமை அத்துமீறி தாக்குதல் நடத்தியது.

மோதலை நாங்கள் விரும்பவில்லை.. பேச்சுவார்த்தை மூலம் தீர்வு.. சீன வெளியுறவு அமைச்சகம் திடீர் அறிவிப்புமோதலை நாங்கள் விரும்பவில்லை.. பேச்சுவார்த்தை மூலம் தீர்வு.. சீன வெளியுறவு அமைச்சகம் திடீர் அறிவிப்பு

20 பேர் மரணம்

20 பேர் மரணம்

கற்கள் மற்றும் இரும்பு ராடுகளால் தாக்குதல் நடத்தியது. இதற்கு இந்திய வீரர்களும் பதிலடி கொடுத்தனர். இரு தரப்பும் இரவு தொடங்கி செவ்வாய் அதிகாலை வரை பயங்கரமாக மோதிக்கொண்டனர். இந்த மோதலில் சீன வீரர்கள் தாக்கியதில் 20க்கும் மேற்பட்ட வீரர்கள் படுகாயம் அடைந்தனர். இதில் 20 பேர் வீரமரணம் அடைந்து விட்டதாக இந்திய ராணுவம் நேற்று இரவு அறிவித்தது.

 சீனா தரப்பில் பலி அதிகம்

சீனா தரப்பில் பலி அதிகம்

4 பேர் உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறியுள்ளது. இதனிடையே சீனா தரப்பில் குறைந்தது 35 பேர் உயிரிழந்திருக்கலாம் என அமெரிக்க உளவுத்துறை கூறியுள்ளது. எனினும் சீனா உயிரிழப்பு விவகாரம் குறித்து இதுவரை வாய் திறக்கவில்லை.

தொடர்ந்து அத்துமீறல்

தொடர்ந்து அத்துமீறல்

அதேநேரம் சீனா, தொடர்ந்து இந்தியாதான் அத்துமீறி முதலில் தாக்கியதாக பழி போட்டு வருகிறது. எல்லையில் அடவாடியாக நடந்து வரும் சீனா தற்போது சண்டையை விரும்பவில்லை என்று வெளியுறவுத்துறை மூலம் பேச்சுவார்த்தை நடத்தலாம் என அழைததுள்ளது.

முப்படைகளுக்கு அலார்ட்

முப்படைகளுக்கு அலார்ட்

இதனிடையே எல்லையில் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட விவகாரம் குறித்து ராணுவ அமைச்சசர் ராஜ்நாத் சிங், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து நேற்று விளக்கம் அளித்தார். மேலும ராணுவ வீரர்கள் உயிரிழந்தது குறித்து கவலையும் தெரிவித்தார். அத்துடன் எல்லையில் முப்படைகளையும் தயார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.

Recommended Video

    India-வை சீண்டினால் பதிலடி கொடுப்போம்.. மோடி எச்சரிக்கை
    பிரதமர் அனைத்து கட்சி கூட்டம்

    பிரதமர் அனைத்து கட்சி கூட்டம்

    இதற்கிடையே பிரதமர் நரேந்திர மோடி சீன ராணுவத்தின் அத்துமீறி தாக்குதல் குறித்தும், அதற்கு பதிலடியாக எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்தும் விவாதித்த அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். வரும் 19ம் தேதி மாலை 5 மணிக்கு அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். காணொலி காட்சி வழியாக கூட்டம் நடைபெற உள்ளது. .இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு, காங்கிரஸ், திமுக, அதிமுக, உள்ளிட்ட நாடாளுமன்றத்தில் எம்பிக்கள் வைத்துள்ள கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்படும் என தெரிகிறது.

    English summary
    Prime Minister Narendra Modi Wednesday called for an all-party meeting at 5 pm on Friday, June 19 to discuss the situation along the India-China border. Presidents of various political parties are expected to take part in the virtual meeting.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X