டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அவசரமா டெல்லி வாங்க.. ஆலோசிக்கனும்.. அமைச்சர்களுக்கு மோடி திடீர் அழைப்பு.. ஏன், என்னாச்சு?

Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லியில் நாளை மாலை தனது அமைச்சரவை சகாக்களுடன் அவசர ஆலோசனை நடத்த உள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.

லோக்சபா தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அதிக இடங்களை பிடிக்க வாய்ப்பு உள்ளதாக எக்ஸிட் போல் முடிவுகள் கூறுகின்றன. இந்த நிலையில், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் பொதுச்செயலர் பையாஜி ஜோஷியை இன்று திடீரென நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.

Narendra Modi summons union ministers

ஒருவேளை பாஜக சார்பில் நிதின் கட்கரி புதிய பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்படுவாரோ என்ற அச்சம் மோடி ஆதரவாளர்கள் இடையே ஏற்பட்டுள்ளது. இப்படியான பரபரப்பு சூழலில், மத்திய அமைச்சர்களுடன் மோடி நாளை திடீர் ஆலோசனை நடத்த உள்ளார்.

மாலை 4 மணிக்கு, அமைச்சர்கள் அனைவரும், பாஜக தலைமை அலுவலகம் வருமாறு பிரதமர் சார்பில் அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது. கூட்டணி கட்சி தலைவர்களுக்கு நாளை இரவு அமித்ஷா டின்னர் கொடுத்து உபசரிக்க உள்ள நிலையில், முன்னதாக அமைச்சர்களுடன் மோடி அவசர ஆலோசனை நடத்த உள்ளது டெல்லி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பானை சின்னத்தில் போட்டியிட்ட திருமாவளவன் 2 ஆவது முறை எம்பியாகிறாரா? பானை சின்னத்தில் போட்டியிட்ட திருமாவளவன் 2 ஆவது முறை எம்பியாகிறாரா?

இந்த கூட்டத்தில் நிதின் கட்கரி பங்கேற்பாரா அல்லது புறக்கணிப்பாரா, எத்தனை அமைச்சர்கள் மோடிக்கு ஆதரவாக உள்ளனர் என்பதுகுறித்து அறிய எதிர்க்கட்சிகளும் ஆவலோடு காத்திருக்கிறார்கள்.

English summary
PM Narendra Modi summons union ministers, to meet in Delhi on Tuesday, says bjP sources.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X