டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

எய்ம்ஸ் தீவிர சிகிச்சை பிரிவில் அருண் ஜெட்லி.. மோடி, அமித்ஷா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் குவிந்தனர்

Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி சேர்க்கப் பட்டுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் நேரில் சென்று நலம் விசாரித்து சென்றுள்ளனர்.

சமீபத்தில் கிட்னி மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர் அருண்ஜெட்லி. உடல்நலக் குறைவு காரணமாக தற்போதைய மோடி அரசு அமைச்சரவையில் சேராமல் தவிர்த்து இருந்தார்.

Narendra Modi visit Arun Jaitley in Aiims

இந்த நிலையில் மூச்சுத்திணறல் காரணமாக இன்று காலை அருண் ஜேட்லி டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அதுகுறித்த தகவலை ஊடகங்களுக்கு இன்று இரவு தான் தெரியவந்தது.

இதயம் மற்றும் நரம்பியல் சிகிச்சை பிரிவின் ஐசியு பகுதியில் அருண் ஜேட்லிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று இரவு சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்த்தன் எய்ம்ஸ் மருத்துவமனை சென்று அருண் ஜேட்லி அளிக்கப்படும் சிகிச்சை குறித்து டாக்டர்களிடம் விளக்கம் கேட்டு அறிந்தார்.

இதன் பிறகு சற்று நேரத்திலேயே உள்துறை அமைச்சர் அமித் ஷா, லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா ஆகியோரும் சென்றனர், இதை தொடர்ந்து இரவு 8.30 மணி அளவில் பிரதமர் நரேந்திர மோடியும் எய்ம்ஸ் மருத்துவமனை சென்று அருண் ஜெட்லி உடல்நிலை குறித்து விசாரித்தார்.

பின்னர் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சென்றார். இவ்வாறு பெரிய தலைவர்கள் அடுத்தடுத்து எய்ம்ஸ் மருத்துவமனை சென்று கொண்டிருப்பதால் பெரும் பரபரப்பு நிலவுகிறது.

English summary
Delhi: Prime Minister Narendra Modi arrives at All India Institute of Medical Sciences (AIIMS) where Former Finance Minister Arun Jaitley has been admitted.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X