டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஃபனிக்கு முன்பு ஜெகஜோதி.. ஃபனிக்கு பின்னர் அலங்கோலம்.. செயற்கைகோள் புகைப்படத்தை வெளியிட்டது நாசா

Google Oneindia Tamil News

Recommended Video

    ஃபனி புயலுக்கு முன்னர் மற்றும் பின்னர் எப்படி இருந்தது?.. நாசா வெளியிட்ட புகைப்படம்

    டெல்லி: புயலின்போதும் புயலுக்கு பின்னும் இரட்டை நகரங்களான புவனேஸ்வரம் மற்றும் கட்டாக் எப்படியிருந்தது என்பது குறித்த புகைப்படங்களை நாசா வெளியிட்டுள்ளது.

    வங்கக் கடலில் உருவான ஃபனி புயல் கடந்த மே 5-ஆம் தேதி ஒடிஸா அருகே பூரி கடற்கரை அருகே கரையை கடந்தது. கடந்த 1999-ஆம் ஆண்டுக்கு பிறகு ஏற்பட்ட சக்தி வாய்ந்த புயலாக ஃபனி கருதப்படுகிறது.

    இந்த ஃபனி புயலால் 40 பேர் பலியாகிவிட்டனர். இதில் ஏராளமான டிரான்ஸ்பார்மர்கள் சாய்ந்தன. 1,56,000 மின்கம்பங்கள் சாய்ந்தன.

    மின்சாரம் சீரமைப்பு

    மின்சாரம் சீரமைப்பு

    இந்த புயலால் பூரி, புவனேஸ்வரம், கட்டாக், கூர்தா ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதுகுறித்து உள்துறை அமைச்சகம் நேற்று கூறுகையில் மாநிலத்தில் 9 மாவட்டங்களில் மின்சாரம் சீரடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

    கணிசம்

    கணிசம்

    அதுபோல் புயலால் மிகவும் பாதிக்கப்பட்ட பூரி மற்றும் புவனேஸ்வரத்தில் தொலைத்தொடர்பு இணைப்புகளும் கணிசமாக சரி செய்யப்பட்டுவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பிரிட்டன் இளவரசர் ஹாரியின் மகனுக்கு பெயர் சூட்டியது அரச குடும்பம்.. என்ன பெயர் தெரியுமா?பிரிட்டன் இளவரசர் ஹாரியின் மகனுக்கு பெயர் சூட்டியது அரச குடும்பம்.. என்ன பெயர் தெரியுமா?

    புயலுக்கு பின்னர்

    இந்த நிலையில் புயலுக்கு முன்னர் இரட்டை நகரங்களான புவனேஸ்வரம் மற்றும் கட்டாக் ஆகிய இரு நகரங்களில் மின்விளக்கு வெளிச்சம் எப்படி இருந்தது என்பது குறித்தும் அந்த நகரங்களில் புயலுக்கு பின்னர் மின் இணைப்பு தடைப்பட்டு இருட்டாக உள்ளது குறித்தும் நாசா செயற்கைகோள் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.

    புகைப்படங்கள் உணர்த்துவது என்ன

    புகைப்படங்கள் உணர்த்துவது என்ன

    இதுகுறித்து நாசா விண்வெளி மையம் கூறுகையில் ஒடிஸாவில் புயலின் போது மோசமாக பாதிக்கப்பட்ட இடங்களில் வெளிச்சம் எப்படியிருந்தது என்பது குறித்து இந்த புகைப்படங்கள் உணர்த்துகின்றன.

    புகைப்படங்கள்

    புகைப்படங்கள்

    புயலுக்கு முன்னர் அதாவது ஏப்ரல் 30-ஆம் தேதி ஒடிஸாவில் உள்ள பிஜூ விமான நிலையம் எப்படி இருந்தது என்பது குறித்து மே 5-ஆம் தேதி புயலுக்கு பின்னர் மின் விளக்குகள் இல்லாமல் பிஜூ விமான நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகள் எப்படி இருந்தது என்பது குறித்தும் அந்த புகைப்படங்கள் விவரிப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

    English summary
    Nasa shares power outages in Bhuvaneswar and Cuttack after Fani Cyclone.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X