டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

73-வது சுதந்திர தினம்... Live: முப்படைக்கும் இனி ஒரே தலைவர்.. பிரதமர் மோடி அறிவிப்பு

Google Oneindia Tamil News

டெல்லி: நாட்டின் 73-வது சுதந்திர தினம் இன்று தேசம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று தேசிய கொடி ஏற்றி வைத்து சிறப்புரையாற்றுகிறார். இதனையடுத்து செங்கோட்டையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன

Newest First Oldest First
10:33 AM, 15 Aug

லடாக் அருகே உள்ள பகுதிகளில் சுதந்திர தின கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகிறது. ஜம்மு காஷ்மீரில் லடாக் அருகே உள்ள பகுதிகளில் சுதந்திர தின கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகிறது.
10:26 AM, 15 Aug

ஸ்ரீநகரில் தேசியக் கொடியை ஏற்றினார் ஆளுநர் சத்யபால் மாலிக். ஜம்மு- காஷ்மீர் யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டதை அடுத்து ஸ்ரீநகரில் மூவர்ணக் கொடி ஏற்றம்.
9:21 AM, 15 Aug

வேலூர் மாவட்டம் மூன்றாக பிரிப்பு. திருப்பத்தூர், ராணிப்பேட்டையை தலைமையிடங்களாகக் கொண்டு வேலூர் 3 மாவட்டங்களாக பிரிப்பு. சுதந்திர தின உரையில் தமிழக முதல்வர் பழனிச்சாமி அறிவிப்பு
9:08 AM, 15 Aug

வங்கதேசம், சீனா , ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் கூட தீவிரவாத தாக்குதல் நடந்தது. நாம் அதை எல்லாம் கண்டித்து இருக்கிறோம் - பிரதமர் மோடி
9:08 AM, 15 Aug

தீவிரவாதத்திற்கு ஆதரவு அளிப்பவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். தீவிரவாதத்திற்கு எதிராக நாம் இனியும் அமைதியாக இருக்க முடியாது. - பிரதமர் மோடி
9:08 AM, 15 Aug

தீவிரவாதத்திற்கு எதிராக நாம் கடுமையாக செயல்பட்டு வருகிறோம். நாட்டின் பாதுகாப்பு தற்போது முக்கிய பிரச்சனையாகி உள்ளது. - பிரதமர் மோடி
8:57 AM, 15 Aug

முப்படைக்கும் இனி ஒரே தலைவர் இருப்பார். தரைப்படை, விமானப்படை, கடற்படை மூன்றுக்கும் இனி ஒரே தலைமை இருக்கும் . தலைமை பாதுகாப்பு அதிகாரி நியமனம் செய்யப்படுவார் - பிரதமர் மோடி
8:54 AM, 15 Aug

முப்படைக்கும் இனி ஒரே தலைவர் - பிரதமர் மோடி அறிவிப்பு
8:54 AM, 15 Aug

மூன்று டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கு நிர்ணயம் செய்து இருக்கிறோம். இந்த இலக்கை நாம் கண்டிப்பாக அடைய முடியும். - பிரதமர் மோடி
8:48 AM, 15 Aug

கட்டமைப்பு பணிகளுக்காக ரூபாய் 100 லட்சம் கோடி செலவு செய்யப்படும். ரயில்வே, விமானத்துறை, சாலைகள், தேசிய நெடுஞ்சாலைகள் மொத்தமாக புதுப்பிக்கப்படும் - பிரதமர் மோடி
8:42 AM, 15 Aug

கடந்த 5 வருடத்தில் 1,450 சட்டங்களை நீக்கியுள்ளோம். மக்களின் சுதந்திரத்தை கருத்தில் கொண்டு இந்த சட்டங்களை நீக்கி இருக்கிறோம்.- பிரதமர் மோடி
8:42 AM, 15 Aug

மக்களுக்கு மத்திய அரசு முழு சுதந்திரம் அளிக்க போகிறது. அவர்களின் வாழ்க்கையில் நாங்கள் இனி தலையிட மாட்டோம். மக்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் அரசு தலையிட கூடாது - பிரதமர் மோடி
8:37 AM, 15 Aug

ஒரே நாடு ஒரே தேர்தலும் இப்படித்தான். மக்களின் வரிப்பணம் இதன் மூலம் சேமிக்கப்படும். இதுகுறித்த விவாதங்கள் நடந்து வருகிறது. இந்த விவாதங்கள் நல்ல முறையில் நடக்க வேண்டும். இதில் விரைவில் நல்ல முடிவுகள் எடுக்கப்படும் - பிரதமர் மோடி
8:37 AM, 15 Aug

ஜிஎஸ்டி மூலம் நாடு முழுக்க ஒரே வரி விதிப்பு முறை அமலுக்கு வந்து இருக்கிறது. இதன் மக்கள் சரியாக வரி கட்ட முடிகிறது. நாட்டிற்கு இதனால் அதிக வருவாய் கிடைத்துள்ளது - பிரதமர் மோடி
8:27 AM, 15 Aug

முதலில் நாம் வறுமையை ஒழிக்க வேண்டும். அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதால் இது சாத்தியமாகும். இதற்காக நிறைய திட்டங்களை கொண்டு வந்துள்ளோம் - பிரதமர் மோடி
8:23 AM, 15 Aug

அதிகரித்து வரும் மக்கள் தொகை குறித்து நாம் கவலை அடைய வேண்டும். நாட்டில் ஊழல் பெரிய வியாதி போல வளர்ந்து இருக்கிறது - பிரதமர் மோடி
8:23 AM, 15 Aug

நீர் தேவையை பூர்த்தி செய்து, தண்ணீர் பஞ்சத்தை போக்குவோம். நீர் திட்டங்களுக்காக ரூபாய் 3.50 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கி இருக்கிறோம். இதற்காக திட்டங்களை கொண்டு வருவோம் - பிரதமர் மோடி
8:23 AM, 15 Aug

ஒரே நாடு, ஒரே அரசமைப்பு சட்டத்தை செயல்படுத்தியதில் பெருமிதம் கொள்கிறோம்.- பிரதமர் மோடி
8:17 AM, 15 Aug

சுதந்திர தின உரையில் திருக்குறளை எடுத்துக்காட்டி கூறிய பிரதமர் மோடி. தண்ணீரின் முக்கியத்துவம் குறித்து விளக்கும்போது நீரின்றி அமையாது உலகு என தமிழில் பேசினார் மோடி.
8:13 AM, 15 Aug

இந்தியா முழுக்க தலித் மக்களுக்கு நிறைய நலத்திட்டங்கள் உள்ளது. ஆனால் காஷ்மீரில் அப்படி இல்லை - பிரதமர் மோடி
8:13 AM, 15 Aug

காஷ்மீர் பெண்கள் சரியான அளவில் சுதந்திரம் அடைய வேண்டும். அவர்களுக்கான திட்டங்கள் அவர்களுக்கு கிடைக்க வேண்டும். காஷ்மீரும் இந்தியாவில்தான் இருக்கிறது. - பிரதமர் மோடி
8:10 AM, 15 Aug

காஷ்மீரை முன்னேற்ற 130 கோடி மக்கள் கரம் கோர்த்து இருக்கிறார்கள். லடாக் மக்கள் பெரும் மகிழ்ச்சியியல் உள்ளனர். நாம் நமது மிகப்பெரிய கடமையை நிறைவேற்றி விட்டோம். இது என்னுடைய தனிப்பட்ட சாதனை அல்ல. - பிரதமர் மோடி
8:09 AM, 15 Aug

இரண்டு அவையிலும் எங்களுக்கு எம்பிக்கள் ஆதரவு உள்ளது. இதன் மூலம் நாங்கள் வேகமாக சட்டங்களை இயற்றி வருகிறோம். - பிரதமர் மோடி
8:08 AM, 15 Aug

70 வருடத்தில் செய்ய முடியாததை 70 நாளில் செய்து இருக்கிறோம். காஷ்மீரில் கொண்டு வந்த சீர்திருத்தம் நாங்கள் செய்த சாதனை. - பிரதமர் மோடி
8:01 AM, 15 Aug

நாம் யோசிக்க தொடங்கிவிட்டோம். 130 கோடி மக்களும் சேர்ந்து செயல்பட தொடங்கிவிட்டோம். மக்கள் தங்கள் கனவுகளுக்காக தீமைகளை எதிர்த்து போராடி வருகிறார்கள். - பிரதமர் மோடி
7:59 AM, 15 Aug

எங்களுடைய பணிகள் நாட்டில் நிறைய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. மக்கள் எங்களை முழுதாக நம்புகிறார்கள். இந்தியா மாற முடியும் என்று நம்புகிறார்கள்
7:57 AM, 15 Aug

சிறுபான்மையினரை முன்னேற்ற நிறைய திட்டம் இருக்கிறது. ஆதிவாசிகளை முன்னேற்ற திட்டமிட்டுள்ளோம். வரும் நாட்களில் செயல்படுத்துவோம் - பிரதமர் மோடி
7:57 AM, 15 Aug

கடந்த ஐந்து வருடங்களில் மருத்துவ துறை பெரிதாக வளர்ந்துள்ளது. குழந்தைகளுக்கு எதிரான அநீதிகள் தடுக்கப்பட்டு உள்ளது. - பிரதமர் மோடி
7:57 AM, 15 Aug

நீர் மேலாண்மைக்காக நலத்திட்டங்கள் நிறைய கொண்டு வரப்பட்டுள்ளது. விவசாயிகள் நாட்டில் மகிழ்ச்சியாக உள்ளனர். - பிரதமர் மோடி
7:52 AM, 15 Aug

நாட்டில் பெண்கள் முன்னேற்றம் அடைந்து வருகிறார்கள். முத்தலாக் தடை சட்டம் மூலம் இஸ்லாமிய பெண்கள் விடுதலை அடைந்துள்ளனர் - பிரதமர் மோடி
READ MORE

Nation celebrates 73rd Independence Day
English summary
Nation today Celebrated our 73rd Independence day.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X