டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஸ்லீவ்லெஸ்தான் போடனும்.. தேர்வு எழுத போன பெண் ஆடையை வெட்டிய வாட்ச்மேன்.. தேசிய மகளிர் ஆணையம் விசாரணை

Google Oneindia Tamil News

டெல்லி: தேர்வு எழுத சென்ற மாணவி தோள்பட்டைக்கு மேல் நீளமாக ஆடை அணிந்திருந்ததற்காக, அந்த ஆடையை கத்திரிகோலால் ஆண் ஊழியர் ஒருவர் வெட்டிய சம்பவம் ராஜஸ்தானில் நடந்த நிலையில் அதுகுறித்து தேசிய மகளிர் ஆணையம் விசாரணையை துவங்கியுள்ளது.

ராஜஸ்தான் நிர்வாக சேவைகள் தேர்வு சமீபத்தில் நடந்தபோதுதான் இதுபோன்ற அத்துமீறல் அரங்கேறியுள்ளது.

பிகானீர் மாவட்டத்திலுள்ள ஒரு தேர்வு மையத்திற்குள் தேர்வு எழுத சென்ற மாணவியின் தோள்பட்டைக்கு கீழே இருந்த சுடிதார் ஆடை பகுதியை ஆண் ஊழியர் கத்திரிக்கோலால் வெட்டிய அந்த புகைப்படம் பிரபல நாளிதழில் வெளியானது. ஸ்லீவ்லெஸ்தான் போட வேண்டும். தோள்பட்டைக்கு கீழே துணி இருக்க கூடாது என்பது ராஜஸ்தான் அரசின் உத்தரவு என அந்த நாளிதழ் குறிப்பிட்டது. இது நாடு முழுக்க அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக இருந்தது.

இலங்கை தமிழர் நலன் ஆலோசனை குழு... கனிமொழி இடத்தில் கலாநிதி... ஈழத்தமிழர்கள் அப்செட்?இலங்கை தமிழர் நலன் ஆலோசனை குழு... கனிமொழி இடத்தில் கலாநிதி... ஈழத்தமிழர்கள் அப்செட்?

வானதி சீனிவாசன் கண்டனம்

வானதி சீனிவாசன் கண்டனம்

ஆடையை வெட்டியது ஒரு தவறு என்றால், பெண் ஆடையை, ஆண் ஊழியர் வெட்டியது இன்னொரு தவறாகும் என்பதால் நாடு முழுக்க கண்டன குரல்கள் எழுந்தன. பாஜக மகளிர் பிரிவு தலைவர் வானதி சீனிவாசனும் ட்விட்டரில் இதை கண்டித்திருந்தார்.

வெட்கக்கேடு

வெட்கக்கேடு

இந்த நிலையில்தான், தேசிய மகளிர் கமிஷன் இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மகளிர் கமிஷனர் கூறியிருப்பதாவது- இந்த சம்பவத்தால் தேசிய மகளிர் ஆணையம் அதிர்ச்சி அடைந்துள்ளது. பெண்களை இதுபோன்ற துன்புறுத்தலுக்கு ஆளாக்குவது முற்றிலும் அவமானகரமானது மற்றும் வெட்கக்கேடான சம்பவம். இதை NCW வன்மையாகக் கண்டிக்கிறது. இந்த விவகாரத்தில் ஆணையம் தானாக முன்வந்து விசாரணை நடத்தும்.

பெண்கள் இல்லையா

பெண்கள் இல்லையா

தேர்வு மையத்தில் தேர்வு எழுத வந்த பெண்ணிடம் சோதனையிடுவதற்கு, பெண் காவலர் ஏன் நியமிக்கப்படவில்லை என்பது குறித்தும் ஆணையம் விளக்கம் கேட்டுள்ளது. இந்த விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து விரைவில் ஆணையத்திடம் தெரிவிக்க வேண்டும் இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 நீட் தேர்வு

நீட் தேர்வு

ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் அரசு நடைபெற்று வருவதால் இந்த விவகாரம் தொடர்பாக தேசிய அளவில் பாஜக தலைவர்கள் பலரும் குரல்களை எழுப்பி வருகின்றனர். அதேநேரம் தமிழகத்தில் மருத்துவக் கல்வி நுழைவுத் தேர்வு நீட் நடைபெற்றபோது மாணவிகள் தாலி, கம்மல், செயின் போன்றவற்றை கழற்றி வைத்துவிட்டு தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டதை சுட்டிக்காட்டி வானதி சீனிவாசன் பின்னூட்டத்தில் விமர்சனம் செய்து வருகிறார்கள்.

English summary
National Commission for Women (NCW) takes cognisance of the incident where a male security guard was reportedly seen cutting the sleeves of a top worn by a female candidate outside an exam centre for RAS 2021 in Bikaner district, Rajasthan.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X