டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தேசிய கல்விக்கொள்கை.. கல்வித்துறையில் புதிய புரட்சி.. மகிழ்ச்சி தருகிறது.. பிரதமர் மோடி பெருமிதம்!

Google Oneindia Tamil News

டெல்லி: தேசிய கல்விக்கொள்கை 2020க்கு அனுமதி கிடைத்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது, கல்வித்துறையில் பல வருடங்களாக எதிர்பார்க்கப்பட்ட மாற்றம் இது என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

தேசிய அளவில் புதிய கல்விக்கொள்கை கொண்டு வரப்பட்டுள்ளது.மும்மொழிக்கொள்கை தொடங்கி எம்பில் படிப்புகள் நீக்கம் வரை முக்கியமான நடைமுறைகள், அறிவிப்புகள் இதில் வெளியாகி உள்ளது.

இதற்கான அனுமதியை மத்திய அமைச்சரவை இன்று வெளியிட்டது. மத்திய அரசின் முக்கியமான சாதனையாக இது பார்க்கப்படுகிறது .

ரபேல் கொள்முதல்.. ரூ.526 கோடி விமானத்தை ரூ. 1670 கோடிக்கு வாங்கியது ஏன்?.. ராகுல் காந்தி கேள்வி!ரபேல் கொள்முதல்.. ரூ.526 கோடி விமானத்தை ரூ. 1670 கோடிக்கு வாங்கியது ஏன்?.. ராகுல் காந்தி கேள்வி!

மோடி டிவிட்

இது தொடர்பாக டிவிட் செய்துள்ள பிரதமர் மோடி, தேசிய கல்விக்கொள்கை 2020க்கு அனுமதி கிடைத்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. கல்வித்துறையில் பல வருடங்களாக எதிர்பார்க்கப்பட்ட மாற்றம் இது. வரும் நாட்களில் மக்களின் வாழக்கையை இது மாற்ற போகிறது. புதிய கல்விக்கொள்கை என்பது கல்வி பெறுதல், அணுகல், சமத்துவம், தரம், மலிவான கட்டணம், பொறுப்பான முறை ஆகிவற்றை உள்ளடக்கியதாக இருக்கும்.

முக்கிய ஆராய்ச்சி

இந்த உலகில் கற்பதும், ஆராய்ச்சி செய்வதும் மிக முக்கியம். இந்தியாவை இந்த தேசிய கல்விக்கொள்கை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும். உலக தரத்தில் கல்வியை கொடுக்க தேசிய கல்விக்கொள்கை உதவியானதாக இருக்கும். தரமான கல்வி மற்றும் பாடத்திட்டங்கள் இதனால் மாணவர்களுக்கு கிடைக்கும். 10, +2 பாடங்களுக்கு பதில் 5+3+3+4 பாடங்களை கொண்டு வருவதும் சிறந்த மாற்றமாக இருக்கும்.

முக்கியம்

இதனால் இளம் சிறுவர்கள் அதிக பயன் அடைவார்கள். உலக அளவில் இருப்பதை போல இனி நம் குழந்தைகளும் படிக்கலாம். பாடத்திட்டத்தில் மாற்றங்களை கொண்டு வருகிறோம். இணைய வழி கல்விகள் இதன் மூலம் ஊக்குவிக்கப்படும். அதேபோல் கல்லூரியில் இடை நிற்றலை இதன் மூலம் தடுக்க முடியும். மும்மொழி கொள்கை மூலம் மாணவர்கள் சமஸ்கிருதம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளை கற்க முடியும்.

பல மொழி

அதேபோல் மாணவர்கள் சைகை மொழியையும் கற்க முடியும். மத்திய அரசு செய்த சாதனங்களில் ஒன்றாக இந்த தேசிய கல்விக்கொள்கை இருக்க போகிறது. இதை உருவாக்க பாடுபட்ட அனைவருக்கும் எனது நன்றியை நான் இங்கு தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியாவின் வளர்ச்சிக்கு கண்டிப்பாக இந்த தேசிய கல்விக்கொள்கை உதவும் என்று நம்புகிறேன் என்று பிரதமர் மோடி பெருமிதம் அடைந்துள்ளார்.

English summary
National Educational Policy is an achievement says PM Modi in his tweets after cabinet approval.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X