டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நியூட்ரினோவிற்கு பச்சை கொடி காட்டிய பசுமை தீர்ப்பாயம்.. திட்டம் விரைவில் தொடங்குகிறது?!

தேனியில் அமையவிருக்கும் நியூட்ரினோ ஆய்வகம் திட்டம் எப்போது வேண்டுமானாலும் தொடங்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வருகிறது.

Google Oneindia Tamil News

டெல்லி: தேனியில் அமையவிருக்கும் நியூட்ரினோ ஆய்வகம் திட்டம் எப்போது வேண்டுமானாலும் தொடங்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வருகிறது.

தேனியில் அமைய இருக்கும் நியூட்ரினோ திட்டத்திற்கு இடைக்கால தடை விதித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. பூவுலகின் நண்பர்கள் தொடுத்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வெளிப்படையாக பார்த்தால் இந்த உத்தரவு நியூட்ரினோவிற்கு எதிராக இருக்கலாம். ஆனால் இதில் நியூட்ரினோவிற்கு ஆதரவாகத்தான் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

ஆர்எஸ்எஸ் தலைவருடன் அமித்ஷா திடீர் சந்திப்பு.. அயோத்தியில் ராமர் கோயில் கட்ட சட்டம் வருகிறதா? ஆர்எஸ்எஸ் தலைவருடன் அமித்ஷா திடீர் சந்திப்பு.. அயோத்தியில் ராமர் கோயில் கட்ட சட்டம் வருகிறதா?

என்ன உத்தரவு

என்ன உத்தரவு

சில வாரங்களுக்கு முன் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் நியூட்ரினோ திட்டத்திற்கு அனுமதி வழங்கி சில வாரங்களுக்கு முன் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் நியூட்ரினோ திட்டத்திற்கு அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்தது. பூவுலகின் நண்பர்கள் இந்த சுற்றுசூழல் அனுமதிக்கு எதிராக வழக்கு தொடுத்தனர். அந்த வழக்கில் தான் இன்று முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி நியூட்ரினோ ஆய்வகம் அமைக்க சுற்றுசூழல் அமைச்சகம் வழங்கிய அனுமதிக்கு இப்போது தடை விதிக்க முடியாது என்றும் கூறியுள்ளது. மத்திய அரசின் சுற்றுசூழல் அனுமதியில் தலையிட முடியாது என்று கூறியுள்ளது. இது அந்த திட்டத்திற்கு ஆதரவான தீர்ப்பு ஆகும். பிறப்பித்தது. பூவுலகின் நண்பர்கள் இந்த சுற்றுசூழல் அனுமதிக்கு எதிராக வழக்கு தொடுத்தனர். அந்த வழக்கில் தான் இன்று முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி நியூட்ரினோ ஆய்வகம் அமைக்க சுற்றுசூழல் அமைச்சகம் வழங்கிய அனுமதிக்கு இப்போது தடை விதிக்க முடியாது என்றும் கூறியுள்ளது. மத்திய அரசின் சுற்றுசுழல் அனுமதியில் தலையிட முடியாது என்று கூறியுள்ளது. இது அந்த திட்டத்திற்கு ஆதரவான தீர்ப்பு ஆகும்.

பிறகு தடை ஏன்?

பிறகு தடை ஏன்?

இந்த திட்டத்திற்கு இடைக்கால தடை மட்டுமே விதிக்கப்பட்டு இருக்கிறது. இந்த வழக்கு விசாரணை இரண்டு மாதங்களுக்குள் முடிந்துவிட வாய்ப்புள்ளது. அதுவரை மட்டுமே திட்டத்தை தொடங்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.

என்ன பிரச்சனை

என்ன பிரச்சனை

இன்று வழங்கிய உத்தரவு தேசிய பசுமை தீர்ப்பாயம் ஒரு விஷயத்தை குறிப்பிட்டுள்ளது, அதன்படி தேசிய வனவிலங்கு பாதுகாப்பு அமைச்சகத்திடம் நியூட்ரினோ திட்டத்திற்கு அனுமதி வாங்க வேண்டும், வனவிலங்கு பாதிக்குமா என்று ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்று தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவு பிறப்பித்துள்ளது.

எல்லாம் சரியாகும்

எல்லாம் சரியாகும்

இப்போது நியூட்ரினோ திட்டத்திற்கு இருக்கும் ஒரே முட்டுக்கட்டை இந்த தேசிய வனவிலங்கு பாதுகாப்பு அமைச்சகத்தின் அனுமதி மட்டும்தான். அந்த அனுமதியை பெற்றுவிட்டால் இந்த திட்டத்தை எளிதாக செயல்படுத்த முடியும். அந்த அனுமதியை பெற வேண்டும் என்றுதான் தற்போது நியூட்ரினோ திட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. அதை பெற்றுவிட்டு பணியை தொடங்க வாய்ப்புள்ளது.

நடக்கும் என்கிறார்கள்

நடக்கும் என்கிறார்கள்

தேசிய வனவிலங்கு பாதுகாப்பு அமைச்சகம் மத்திய அரசுடையது என்பதால் 100 சதவிகிதம் இந்த திட்டத்திற்கு தேசிய வனவிலங்கு பாதுகாப்பு அமைச்சகம் அனுமதி வழங்கும் என்று கூறப்படுகிறது. இந்த இரண்டு மாதங்களுக்குள் அனுமதி கிடைக்கும் பட்சத்தில் இந்த இடைக்கால தடை நீக்கப்படும் என்று கூறப்படுகிறது. இதனால் நியூட்ரினோ திட்டம் பெரும்பாலும் செயல்படுத்தப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வருகிறது.

மேல்முறையீடு

மேல்முறையீடு

இதனால்தான் உச்ச நீதிமன்றம் செல்ல பூவுலகின் நண்பர்கள் அமைப்பு முடிவெடுத்துள்ளது. நியூட்ரினோ திட்டத்திற்கு மத்திய சுற்றுசூழல் அமைச்சகம் வழங்கிய அனுமதிக்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றம் செல்ல பூவுலகின் நண்பர்கள் அமைப்பு முடிவெடுத்துள்ளது. விரைவில் இதற்காக அந்த அமைப்பு மனுதாக்கல் செய்ய உள்ளது.

English summary
National Green Tribunal gives Green signal to Neutrino Project Theni.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X