டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு மூடுவிழா.. தேசிய மருத்துவ ஆணைய மசோதா மக்களவையில் நிறைவேறியது!

கடும் எதிர்ப்புகளுக்கு இடையில் தேசிய மருத்துவ ஆணைய மசோதா மக்களவையில் நிறைவேறியது.

Google Oneindia Tamil News

டெல்லி: கடும் எதிர்ப்புகளுக்கு இடையில் தேசிய மருத்துவ ஆணைய மசோதா மக்களவையில் நிறைவேறியது.

தேசிய மருத்துவ ஆணைய மசோதாவை மக்களவையில் கடந்த வாரம் தாக்கல் செய்யப்பட்டது. பல்வேறு துறைகளை மொத்தமாக மாற்றி வரும் மத்திய அரசு தற்போது மருத்துவ துறையிலும் நிறைய மாற்றங்களை கொண்டு வருகிறது.

National Medical Commission bill passed in Lok Sabha

ஏற்கனவே மருத்துவ தேர்வுக்கு நீட் தேர்வு மற்றும் நெக்ஸ்ட தேர்வுகளை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்த நிலையில்தான் தற்போது தேசிய மருத்துவ ஆணைய மசோதாவை மக்களவையில் பாஜக நிறைவேற்றி உள்ளது.

உமா மகேஸ்வரியை கொன்றது கார்த்திகேயன்தான்.. தீவிர விசாரணையில் அம்பலம்.. போலீஸ் வெளியிட்ட ரகசியம்! உமா மகேஸ்வரியை கொன்றது கார்த்திகேயன்தான்.. தீவிர விசாரணையில் அம்பலம்.. போலீஸ் வெளியிட்ட ரகசியம்!

இந்திய மருத்துவ கவுன்சில்தான் தற்போது மருத்துவத்துறையை இந்தியாவில் கவனித்து வருகிறது. மருத்துவ கல்லூரி தொடங்கி மருத்துவமனைகள் வரை அனைத்திற்கும் இதுதான் அனுமதி வழங்கி வந்தது. தற்போது இந்த இந்திய மருத்துவ கவுன்சிலை மொத்தமாக கலைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

அதற்கு பதிலாக தேசிய மருத்துவ ஆணையம் கொண்டு வரப்பட்டுள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தாக்கல் செய்த இந்த மசோதா இன்று வெற்றிகரமாக நிறைவேறியது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

திரிணாமுல் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், திமுக, காங்கிரஸ் எதிர்ப்பை மீறி இந்த மசோதா மக்களவையில் நிறைவேறியது. தேசிய மருத்துவ ஆணைய மசோதா ஏழை மக்களுக்கு எதிரானது என்று திமுக எம்.பி. ஆ.ராசா தெரிவித்தார். மருத்துவ துறையை இது மேலும் சிக்கலாக்க போகிறது என்று திமுக கட்சி தெரிவித்துள்ளது.

இந்த தேசிய மருத்துவ ஆணையத்திற்கு ஆலோசனை வழங்க ஆலோசனை குழு ஒன்று தனியாக அமைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது .

English summary
National Medical Commission bill passed in Lok Sabha successfully.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X