டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நீட் தேர்வு முடிவில் எந்த குளறுபடியும் இல்லை.. விடைத்தாள்கள் போலியானவை.. தேசிய தேர்வு முகமை விளக்கம்

Google Oneindia Tamil News

டெல்லி: நீட் தேர்வு முடிவில் எந்த குளறுபடியும் இல்லை என தேசிய தேர்வு முகமை விளக்கம் அளித்துள்ளது.

மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த அக்டோபர் 16-ஆம் தேதி நடத்தப்பட்டது. இதில் ஏராளமான குளறுபடிகள் இருந்ததாக கூறப்படுகிறது.

National Testing Agency says that there is nothing wrong in NEET exam results

பெரும்பாலான மாணவ, மாணவர்களின் பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகள் எழுதிய தேர்வு தாளே இல்லை என ஒரு ஓஎம்ஆர் தாள்கள் வெளியிட்டியிருந்தனர். அது போல் அது வேறொருவரின் தாள் என்றும் அவர்கள் குறிப்பிட்டிருந்தார்கள்.

நீட்டில் நீதிக்கு இடம் உண்டா?.. கவர்னர் மாளிகையாவது கண் திறக்குமா.. 7.5% உள்ஒதுக்கீடு குறித்து கமல்நீட்டில் நீதிக்கு இடம் உண்டா?.. கவர்னர் மாளிகையாவது கண் திறக்குமா.. 7.5% உள்ஒதுக்கீடு குறித்து கமல்

பலர் ஒரு மார்க் கூட எடுக்கவில்லை. அப்படியானால் எங்கள் பிள்ளைகள் தேர்வு மையத்திற்கு எதற்கு சென்றார்கள். தூங்குவதற்காகவா என கேள்வி எழுப்பினார்கள். மேலும் எங்கள் பிள்ளைகள் எழுதிய விடைத்தாள்கள் வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து தேசிய தேர்வு முகமை நீட் தேர்வு முடிவில் எந்த குளறுபடியும் நடக்கவில்லை. வெளியான ஓஎம்ஆர் தாள்கள் அனைத்தும் போலியானவை. அதை வெளியிட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க பரிசீலனை செய்துள்ளோம் என தெரிவித்துள்ளது.

English summary
National Testing Agency says that there is nothing wrong in NEET exam results 2020. OMR sheets released are fake.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X