டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கொரோனா பரவுவதை தடுக்க.. நாடு முழுக்க மார்ச் 31 வரை ரயில் சேவை ரத்து.. அதிரடி முடிவு

Google Oneindia Tamil News

டெல்லி: நாடு முழுக்க, மார்ச் 31ம் தேதிவரை, அனைத்து வகை பயணிகள் ரயில் சேவை, மெட்ரோ ரயில் சேவைகள், ரத்து செய்யப்படுவதாக, ரயில்வே அறிவித்துள்ளது.

Recommended Video

    சுய ஊரடங்கு பற்றி மக்கள் கருத்து | #JANATACURFEW | ONEINDIA TAMIL

    அனைத்து பயணிகள் ரயில்களும் மார்ச் 25 வரை நிறுத்தப்படும். தற்போது வரை 400 மெயில் / எக்ஸ்பிரஸ் ரயில்கள் பயணத்தில் உள்ளன, அவை அந்தந்த நகரங்களை அடைந்ததும், வேறு எந்த ரயில் நிலையத்திலும், எந்த ரயிலும், பயணத்தைத் தொடங்காது.

    Nationwide Trains Shutdown Till March 25

    பயணிகள் ஒன்றுகூடுவதைத் தவிர்ப்பதற்காக இந்த நடவடிக்கை. இதனால், அனைத்து முக்கிய ரயில் நிலையங்களும் காலியாகிவிடும். ரயில்வே தொடர்ந்து, பணிநிறுத்தத்தை நீடிக்க வேண்டுமா இல்லையா என்பதை தீர்மானிக்க மார்ச் 25 ம் தேதி ரயில்வே வாரியம் கூடும் என்று ரயில்வே அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்திருந்தன.

    Nationwide Trains Shutdown Till March 25

    ஆனால், இன்று மதியம், ரயில்வே துறை மற்றொரு வீடியோவை வெளியிட்டுள்ளது. ரயில்வே வெளியிட்டுள்ள புதிய உத்தரவின்படி, சரக்கு ரயில்கள் மட்டுமே மார்ச் 22 நள்ளிரவு முதல் மார்ச் 31 நள்ளிரவு வரை இயக்கப்படும். மற்ற அனைத்து வகை மெட்ரோ, பயணிகள் மற்றும் எக்ஸ்பிரஸ் என அனைத்து வகை ரயில்களும் ரத்து செய்யப்படுகின்றன. இருப்பினும், குறைந்தபட்ச புறநகர் ரயில் சேவைகள் மற்றும் கொல்கத்தா மெட்ரோ ரயில் சேவை மார்ச் 22 நள்ளிரவு வரை தொடரும். அதன்பிறகு மார்ச் 31 நள்ளிரவு வரை இந்த சேவைகளும் கூட நிறுத்தப்படும் என்று இந்திய ரயில்வே செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

    Nationwide Trains Shutdown Till March 25

    அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், அனைத்து மாநிலங்களும் அத்தியாவசியமற்ற பயணிகள் இயக்கத்தை நிறுத்தி வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன. இந்த முடிவை அனைத்து மாநிலங்களின் தலைமை செயலாளர்களுக்கும் அமைச்சரவை செயலாளர் மற்றும் பிரதமரின் முதன்மை செயலாளருக்கு தெரிவித்துள்ளோம் என்று கூறப்பட்டுள்ளது.

    48 மணி நேரத்தில் கொரோனா பரவுவது 100% ஆக அதிகரிப்பு.. மக்கள் ஊரடங்கு ஒரு வாரம் கட்டாயம் ஆகுமா?48 மணி நேரத்தில் கொரோனா பரவுவது 100% ஆக அதிகரிப்பு.. மக்கள் ஊரடங்கு ஒரு வாரம் கட்டாயம் ஆகுமா?

    இதேபோல பஸ்கள் இயக்கத்தையும் முழுமையாக ரத்து செய்ய தேவை எழுந்துள்ளது. அவரவர் அவரவர் ஊர்களில் இருப்பதே நல்ல முடிவாக இருக்க முடியும். இதுதான் கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டத்திற்கு உதவும் என்பதே எதிர்பார்ப்பாக உள்ளது. அதேநேரம், சரக்கு ரயில் போக்குவரத்தில் பாதிப்பு இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    English summary
    All passenger trains will stop plying till March 25. Till now 400 mail/express trains are on thier journey, once they reach destination, no other train will commence journey from any railway station.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X