டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பிரபலங்கள் வீட்டில் ஐடி ரெய்டு... பாஜக ஒரு நாஜி அரசு... விளாசி தள்ளும் தேஜாஷ்வி யாதவ்

Google Oneindia Tamil News

டெல்லி: இயக்குநர் அனுராக் காஷ்யப் மற்றும் நடிகை டாப்ஸி வீடுகளில் நடத்தப்பட்டுள்ள வருமானவரி சோதனையைக் கண்டித்துள்ள தேஜாஷ்வி யாதவ், பாஜகவை பாசிச அரசு என்றும் விமர்சித்துள்ளார்.

பிரபல பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் மற்றும் நடிகை டாப்ஸி வீடுகளில் இன்று வருமான வரி சோதனைகள் நடத்தப்பட்டன. அனுராக் காஷ்யப்க்கு சொந்தமான 'Phantom Films' என்ற தயாரிப்பு நிறுவனம் முறையாக வருமான வரி செலுத்தவில்லை என்றும் இதன் காரணமாகவே சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியானது.

Nazi Government Tejashwi Yadav slams BJP government

இருப்பினும், இவர்கள் இருவரும் விவசாயிகள் போராட்டம் உள்ளிட்டவற்றில் மத்திய அரசுக்கு எதிராகக் கருத்துகளைக் கூறி வருகின்றனர். இதன் காரணமாகவே அவர்களைக் குறிவைத்து வருமான வரி சோதனை நடத்தப்படுவதாகக் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டினர்.

இந்நிலையில் பிகாரின் எதிர்க்கட்சி தலைவரும் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான தேஜாஷ்வி யாதவ் பாஜக அரசைக் கடுமையாக விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டரில், "முதலில் அவர்கள் வருமான வரி துறை, சிபிஐ, அமலாக்க துறை ஆகியவற்றைப் பயன்படுத்தி, நேர்மையான அரசியல் போட்டியாளர்கள் பற்றி அவதூறு பரப்பினர்.

நடிகை டாப்ஸி, அனுராக் காஷ்யப் வீடுகளில் 'திடீர்' ரெய்டு - பின்னணி என்ன?நடிகை டாப்ஸி, அனுராக் காஷ்யப் வீடுகளில் 'திடீர்' ரெய்டு - பின்னணி என்ன?

இப்போது இந்த நாஜி அரசு சமூக ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் கலைஞர்களையும் துரத்துகிறது. இது மிகவும் கண்டிக்கத்தக்க நடவடிக்கை" என்று பதிவிட்டுள்ளார்.

மும்பை மற்றும் புனேவில் உள்ள இயக்குநர் அனுராக் காஷ்யப் மற்றும் நடிகை டாப்ஸி ஆகியோருக்கு சொந்தமான வீடுகள், சொத்துகள் என மொத்தம் 30க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்றது.

English summary
Bihar politician Tejashwi Yadav about Income Tax Department's raids on director Anurag Kashyap and actor Taapsee Pannu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X