டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மத்தியில் ஆட்சியமைக்க நரேந்திர மோடிக்கு குடியரசு தலைவர் அழைப்பு! 30ம் தேதி பதவியேற்பு விழா

Google Oneindia Tamil News

டெல்லி: பாஜகவின் நாடாளுமன்ற குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட, நரேந்திர மோடியை ஆட்சியமைக்க அழைப்புவிடுத்தார், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்.

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தனித்து 303 இடங்களிலும் கூட்டணி கட்சிகளுடன் 350 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.

NDA alliance MPs meeting will conducted today in Delhi

இதைத்தொடர்ந்து அக்கட்சியின் பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடி வரும் 30 ஆம் தேதி மீண்டும் பிரதமராக பதவியேற்கிறார். இந்த நிலையில், டெல்லியில் நரேந்திர மோடி நேற்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்தார்.

அப்போது குடியரசுத் தலைவரிடம் மோடி பிரதமர் பதவிக்கான ராஜினாமா கடிதத்தை வழங்கினார். அத்துடன் 16-வது மக்களவையை கலைத்து மத்திய அமைச்சரவை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தையும் வழங்கினார்.

இந்நிலையில் இன்று தேசிய ஜனநாயக கூட்டணி எம்பி.க்கள் கூட்டம் டெல்லியில் இன்று மாலை கூடியது. இதில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி, மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் எம்பிக்கள் பங்கேற்றனர்.

நரேந்திர மோடியை நாடாளுமன்ற குழு கூட்டத் தலைவராக, பாஜக தலைவர் அமித்ஷா, மூத்த தலைவர்கள் ராஜ்நாத்சிங், நிதின் கட்கரி மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் முன் மொழிந்தனர். இதையடுத்து நாடாளுமன்ற குழு தலைவராக நரேந்திர மோடி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மேலும் இந்த கூட்டத்தில் யாருக்கு என்ன அமைச்சரவை துறை வழங்கலாம் என்றும் ஆலோசிக்கப்பட்டது. இம்முறை அமைச்சரவையில் பல்வேறு புதிய முகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட உள்ளதாகவும், அமித் ஷா, ஸ்மிருதி இரானிக்கு முக்கிய இலாகா வழங்கப்பட இருப்பதாகவும் தகவல் வெளியாகின.

கூட்டத்தில் நன்றியுரையாற்றிய மோடி பிறகு, குடியரசு தலைவரை சந்தித்து, ஆட்சிக்கு ஆதரவு அளிக்கும் எம்பிக்கள் கையெழுத்திட்ட கடிதத்தை வழங்கினார். இதை ஏற்றுக் கொண்ட குடியரசு தலைவர், நரேந்திர மோடியை, பிரதமராக பொறுப்பேற்க முறைப்படி அழைப்புவிடுத்தார்.

English summary
NDA alliance MPs meeting will conducted today in Delhi. Narendra Modi will be elected as PM today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X