டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணி இமாலய வெற்றி பெறும்.. இந்தியா டிவி சர்வே

Google Oneindia Tamil News

Recommended Video

    தமிழ்நாட்டில் யார் ஜெயிப்பா?.. இதாங்க இந்தியா டிவி கருத்து கணிப்பு!- வீடியோ

    டெல்லி: லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணி இமாலய வெற்றி பெறும் என இந்தியா டிவி- சிஎன்எக்ஸ் சர்வே வெளியிட்டுள்ளது.

    லோக்சபா தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக, சிவசேனா, அகாலி தளம், அதிமுக, ஐக்கிய ஜனதா தளம், லோக் ஜன சக்தி, பாமக உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

    அதுபோல் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ், திமுக, தெலுங்கு தேசம் கட்சி, ஜேடிஎஸ், ஆர்ஜேடி, ஜேஎம்எம், தேசியவாத காங்கிரஸ், தேசிய மாநாட்டு கட்சி, இந்திய முஸ்லிம் லீக் கட்சி ஆகியன இடம்பெற்றுள்ளன.

    நோ நோ.. 21 தொகுதியில் போட்டியில்லை.. லோக்சபா தேர்தலில் ஆதரவு இல்லை.. ரஜினி அறிவிப்பு! நோ நோ.. 21 தொகுதியில் போட்டியில்லை.. லோக்சபா தேர்தலில் ஆதரவு இல்லை.. ரஜினி அறிவிப்பு!

    முடிவுகள்

    முடிவுகள்

    இந்த தேர்தல் முடிவுகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்தியா டிவியும் சிஎன்எக்ஸும் இணைந்து 38600 பேரிடம் 193 லோக்சபா தொகுதிகளில் கருத்துக் கணிப்பை எடுத்துள்ளன. இவை கடந்த மார்ச் 1 முதல் 7-ஆம் தேதி வரை நடத்தப்பட்டன. இதன் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

    கூட்டணி

    கூட்டணி

    அதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 285 இடங்களில் வெற்றி பெறும். இந்த தேர்தலில் பாஜக மிகப் பெரிய கட்சியாக உருவெடுக்கும். கடந்த 2014-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் 355 இடங்களில் வெற்றி பெற்ற இந்த கூட்டணி 70 தொகுதிகள் குறைந்து 285 தொகுதிகளில் வெற்றி பெறும்.

    126 இடங்களில்

    126 இடங்களில்

    அதுபோல் கடந்த முறை 282 தொகுதிகளில் வெற்றி பெற்ற பாஜக இந்த முறை 44 தொகுதிகள் குறைந்து 238 தொகுதிகளில் வெற்றி பெறும். அது போல் கடந்த தேர்தலில் 80 இடங்களில் வெற்றி பெற்ற ஐக்கிய முற்போக்கு கூட்டணி இந்த முறை 126 இடங்களில் வெற்றி பெறும்.

    அகிலேஷ் யாதவ்

    அகிலேஷ் யாதவ்

    காங்கிரஸ் கட்சி 82 இடங்களில் வெற்றி பெறும். இந்த முறை மாயாவதி கட்சிக்கு கணிசமான வாக்குகள் கிடைக்கும். இந்த முறை உ.பி.யில் 16 இடங்களில் வெற்றி பெறும். அதே நேரத்தில் அதன் கூட்டணி கட்சியான சமாஜ்வாதி கட்சி 18 இடங்களில் வெற்றி பெறும்.

    வெற்றி வாய்ப்பு

    வெற்றி வாய்ப்பு

    மொத்தம் 543 தொகுதிகளில் பாஜக 238 தொகுதிகளிலும், காங்கிரஸ் 82 தொகுதிகளிலும், திரிணமூல் காங்கிரஸ் 30 இடங்களிலும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 22 இடங்களிலும், சமாஜ்வாதி கட்சி 18 இடங்களிலும் பகுஜன் சமாஜ் கட்சி 16 இடங்களிலும் திமுக 16 இடங்களிலும், அதிமுக 12 இடங்களிலும் தெலுங்கு தேசம் கட்சி 14 இடங்களிலும் இடதுசாரிகள் 6 இடங்களிலும், ஜேடியு 12 இடங்களிலும், என்சிபி 7 இடங்களிலும், ஆர்ஜேடி 8 இடங்களிலும் சிவசேனா 10 இடங்களிலும், பிஜேடி 14 இடங்களிலும் சிறிய மற்றும் சுயேச்சைகள் 38 இடங்களிலும் வெற்றி பெறுவர்.

    பாஜக செல்வாக்கு

    பாஜக செல்வாக்கு

    உத்தரப்பிரதேசத்தில் உள்ள 80 மக்களவை தொகுதிகளில் 41 தொகுதிகளில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும். மாயாவதியின் பிஎஸ்பி, சமாஜ்வாதி, அஜித் சிங்கின் ஆர்எல்டி ஆகியன 35 இடங்களில் மட்டுமே வெற்றி பெறும். புல்வாமா தாக்குதலுக்கு முன்பு நடத்தப்பட்ட கணிப்புகளில் மகா கூட்டணி 49 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று பாஜக கூட்டணி 29 இடங்களில் வெற்றி பெறும் என கூறப்பட்டிருந்தது. ஆனால் இந்த முறை விங் கமாண்டர் அபிநந்தனை பாகிஸ்தானிடம் இருந்து 2 நாட்களில் மீட்கப்பட்டது இந்தியாவுக்கு கிடைத்த ராஜாங்க ரீதியிலான வெற்றி என 91 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். இதனால் இந்த முறை நடத்தப்பட்ட கருத்து கணிப்புகளில் பாஜகவின் செல்வாக்கு கூடியுள்ளது.

    English summary
    The Narendra Modi-led BJP is likely to emerge as the single largest party with 238 seats, just 13 short of the magical mark, in Lok Sabha 2019 elections.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X