டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பீகாரில் ஜேடியூ-பாஜக கூட்டணிக்கு 147 இடங்கள் கிடைக்க வாய்ப்பு: டைம்ஸ் நவ்- சிவோட்டர் கருத்து கணிப்பு

Google Oneindia Tamil News

டெல்லி: பீகார் சட்டசபை தேர்தலில் ஜேடியூ-பாஜக கூட்டணிக்கு 147 இடங்கள் கிடைக்கும் என்று டைம்ஸ் நவ் சி வோட்டர் கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜக தனிப்பெரும் கட்சியாக 77 இடங்களை கைப்பற்றவும் வாய்ப்புள்ளதாம்.

பீகார் சட்டசபை தேர்தல் அக்டோபர் 28-ந் தேதி தொடங்கி நவம்பர் 7 வரை 3 கட்டங்களாக நடைபெறுகிறது. நவம்பர் 10-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

பீகார் தேர்தல் தொடர்பான அனைத்து கருத்து கணிப்புகளும் ஜேடியூ-பாஜக கூட்டணியே வெல்லும் என தெரிவித்திருக்கின்றன. மேலும் பாஜகதான் தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைக் கைப்பற்றும் எனவும் கூறியுள்ளன. இந்த நிலையில் டைம்ஸ் நவ்- சி வோட்டர் புதிய கருத்து கணிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

எல்ஜேபி மட்டும் ஆட்சிக்கு வந்தா... நிதிஷ்குமாருக்கு ஜெயிலுதான்.. எச்சரிக்கும் சிராக் பாஸ்வான்எல்ஜேபி மட்டும் ஆட்சிக்கு வந்தா... நிதிஷ்குமாருக்கு ஜெயிலுதான்.. எச்சரிக்கும் சிராக் பாஸ்வான்

பாஜக-ஜேடியூ வெல்லும்

பாஜக-ஜேடியூ வெல்லும்

அக்டோபர் 1-ந் தேதி முதல் அக்டோபர் 23-ந் தேதி வரை 243 தொகுதிகளிலும் 30,678 பேரிடம் நடத்தப்பட்ட இந்த கருத்து கணிப்பின் முடிவுகள்: பாஜக- ஜேடியூ கூட்டணிக்கு 147 இடங்கள் கிடைக்கும்; பாஜகவுக்கு மட்டும் 77; ஜேடியூவுக்கு 66 தொகுதிகள் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

ஆர்ஜேடி-காங். கூட்டணி

ஆர்ஜேடி-காங். கூட்டணி

ஆர்ஜேடி-காங்கிரஸ்-இடதுசாரிகள் கூட்டணிக்கு மொத்தம் 87 இடங்கள் கிடைக்குமாம். இதில் ஆர்ஜேடிக்கு 60; காங்கிரஸுக்கு 16; இடதுசாரிகளுக்கு 11 தொகுதிகள் கிடைக்கலாம் என கூறப்பட்டுள்ளது. சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி 3 இடங்களில் வெல்லக் கூடுமாம்.

ஆர்ஜேடிக்கு கூடுதல் வாக்கு சதவீதம்

ஆர்ஜேடிக்கு கூடுதல் வாக்கு சதவீதம்

2015 சட்டசபை தேர்தலை ஒப்பிடுகையில் ஆர்ஜேடியின் வாக்குசதவீதம் அதிகரிக்கக் கூடுமாம். ஆர்ஜேடிக்கு 2015-ல் 18.8% வாக்குகள் கிடைத்தன. இம்முறை ஆர்ஜேடிக்கு 24.1% வாக்குகள் கிடைக்க வாய்ப்பிருக்கிறதாம்.

பாஜகவின் வாக்கு சதவீத சரிவு

பாஜகவின் வாக்கு சதவீத சரிவு

அதேபோல் பாஜகவுக்கான வாக்கு சதவீதம் குறையலாம் என்கின்றன கருத்து கணிப்புகள். 2015-ல் பாஜகவுக்கு 25% வாக்குகள் கிடைத்தன. இம்முறை இது 21.6% ஆக குறையக் கூடுமாம். ஜேடியூவுக்கு 2015-ல் 17.3% வாக்குகள் கிடைத்தன. தற்போது சற்று கூடுதலாக 18.3% வாக்குகள் கிடைக்குமாம்.

English summary
According to the Times Now-CVoter Opinion Poll, NDA will win Bihar Assembly Election.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X