டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நீட் தேர்வு.. தமிழகத்தில் 48.57 சதவீதம் பேர் தேர்ச்சி.. முதலிடம் பிடித்தார் ஸ்ருதி!

Google Oneindia Tamil News

Recommended Video

    நீட் தேர்வு தோல்வி.. அடுத்தடுத்து தற்கொலை செய்து கொள்ளும் மாணவிகள்- வீடியோ

    டெல்லி: நீட் தேர்வு எழுதியவர்களில் தமிழகத்தில் 48.57 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டை காட்டிலும் 9.01 சதவீதம் அதிகமாகும்.

    2019-2020-ஆம் கல்வியாண்டுக்கான மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவு தேர்வு கடந்த மாதம் 5-ஆம் தேதி நடத்தப்பட்டது. கடும் கட்டுப்பாடுகள், சோதனை என மாணவர்கள் அலைக்கழிக்கப்பட்டனர்.

    எனினும் லட்சியத்தை நோக்கி பயணம் செய்த மாணவர்கள் இதை பொருட்டாக கருதாமல் தேர்வு எழுதினர். இதில் கேள்விகள் சுலபமாக இருந்ததாக கூறியிருந்தனர். ஃபனி புயலால் பாதிக்கப்பட்ட ஒடிஸா மாநிலத்துக்கு அன்றைய தினம் தேர்வு நடத்தப்படவில்லை. அதற்கு மாறாக அவர்களுக்கு 20-ஆம் தேதி தேர்வு நடத்தப்பட்டது.

    நீட்டுக்கு செட்டான தமிழக மாணவர்கள்.. கடந்த ஆண்டைக்காட்டிலும் 9.1% அதிகம் தேர்ச்சியடைந்து அசத்தல்! நீட்டுக்கு செட்டான தமிழக மாணவர்கள்.. கடந்த ஆண்டைக்காட்டிலும் 9.1% அதிகம் தேர்ச்சியடைந்து அசத்தல்!

    இணையதளங்கள்

    இணையதளங்கள்

    இதில் தேர்வுக்கு 15.19 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். ஆனால் அவர்களுள் 14.10 லட்சம் பேர் மட்டுமே தேர்வு எழுதினர். இந்த நிலையில் நீட் தேர்வு முடிவுகள் இன்று www.nta.ac.in, www.ntaneet.nic ஆகிய இணையதளங்களில் இன்று மாலை 4 மணிக்கு வெளியிடுவதாக இருந்தது.

    டெல்லியில் தேர்ச்சி

    டெல்லியில் தேர்ச்சி

    ஆனால் முன்கூட்டியே, அதாவது 2 மணி நேரத்துக்கு முன்பாக நீட் தேர்வு முடிவுகள் வெளியானது. இதையடுத்து தரவரிசை பட்டியல் வெளியிடப்படப்பட்டது. இதில் அதிகபட்சமாக டெல்லியில் 74.92 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    9.01 சதவீதம்

    9.01 சதவீதம்

    தமிழகத்தை பார்த்தோமேயானால் முதல் முறையாக 48.57 சதவீதம் அளவுக்கு தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டை காட்டிலும் 9.01 சதவீதம் அதிகமாகும். கடந்த ஆண்டு 39.56 சதவீதம் மட்டுமே தேர்ச்சி பெற்றிருந்தனர்.

    இரண்டாவது இடம்

    இரண்டாவது இடம்

    மாநில அளவில் ராஜஸ்தான் மாணவர் முதலிடத்தையும், டெல்லி, உத்தரப்பிரதேச மாணவர்கள் இருவர் இரண்டாவது இடத்தையும் பெற்றுள்ளனர். ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த நலின் கந்தேல்வால் 701 மதிப்பெண்கள் பெற்று தேசிய அளவில் முதலிடம் பெற்றுள்ளார். டெல்லி, உ.பி. மாணவர்கள் இருவர் இரண்டாவது இடம் பிடித்தனர்.

    தமிழக மாணவி

    தமிழக மாணவி

    தமிழகத்தை பொருத்தவரையில் மொத்தம் 1.40 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர். இதில் 59,785 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். முதல் 50 இடங்களில் தமிழக மாணவர்கள் யாரும் இல்லை. தேசிய அளவில் 57-ஆவது இடம் பிடித்த ஸ்ருதி என்ற மாணவி தமிழகத்தில் முதலிடம் பிடித்துள்ளார்.

    மாற்றுத்திறனாளி

    மாற்றுத்திறனாளி

    இவர் 720 மதிப்பெண்ணுக்கு 685 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். மாற்றுத் திறனாளி பிரிவில் தமிழக மாணவர் கார்வண்ணபிரபு 575 மதிப்பெண்கள் பெற்று 5-ஆவது இடத்தை பெற்றுள்ளார்.மாணவிகள் பிரிவில் தமிழக மாணவி ஸ்ருதி 10-ஆவது இடத்தை பிடித்துள்ளார். மாணவர்களில் நீட் தேர்வில் தேசிய அளவில் 56.50 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    English summary
    Neet Exam results are going to be announced today.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X