டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நாடு முழுவதும் நீட் தேர்வு முடிவுகள் வெளியாகின... எப்படி அறிந்து கொள்ளலாம்..?

Google Oneindia Tamil News

டெல்லி: மருத்துவப் படிப்புக்காக நடத்தப்பட்ட நீட் தேர்வின் முடிவுகள் இன்று மாலை வெளியிடப்பட்டுள்ளது. இதை தேசிய தேர்வு முகமையின் இணையதளமான http://ntaneet.nic.in/ இல் பார்த்து முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.

கொரோனா கால கட்டுப்பாடுகள் மற்றும் மத்திய அரசின் வழிகாட்டுதல்களுடன் கடந்த மாதம் 13ம் தேதி நீட் தேர்வு நடைபெற்றது. நாடு முழுவதும் 14 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் இத்தேர்வை எழுதினார்கள். இதனிடையே கொரோனாவால் பாதிக்கப்பட்ட மற்றும் நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளைச் சேர்ந்த பல மாணவர்களுக்கு நீட் தேர்வை எழுத முடியாத நிலை இருந்தது.

NEET Result 2020 : Results declared on today. how to see the results, denials here

இதையடுத்து , கொரோனாவால் நீட் தேர்வை தவறவிட்ட மாணவர்களுக்கு கடந்த 14ம் தேதி தேர்வு நடைபெற்றது. இரண்டு கட்டமாக நடந்த நீட் தேர்வுகளுக்கான முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன.தேசிய தேர்வு முகமையின் இணைய தளமான https://www.nta.ac.in/ மற்றும், http://ntaneet.nic.in/ ஆகிய இணையதளங்களில் மாணவர்கள் தங்கள் தேர்வு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்து தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.

நீட் தேர்வு 2020ல் வெற்றி பெற, பொது பிரிவின் கீழ் உள்ளவர்கள் குறைந்தபட்சம் 50 சதவிகிதம் மதிப்பெண் எடுத்திருக்க வேண்டும். பிற்படுத்தப்பட்ட பிரிவுகளின் கீழ் உள்ளவர்கள் குறைந்தபட்சம் 40 சதவீதம் மதிப்பெண் எடுத்திருக்க வேண்டும். நீட் தேர்வில் மாணவர்கள் எடுக்கும் மதிப்பெண்களின் அடிப்படையில், அகில இந்திய தரவரிசை (ஏ.ஐ.ஆர்) பட்டியலையும் என்.டி.ஏ வெளியிடும்.

English summary
NTA had conducted the NEET 2020 Phase 1 and Phase 2 like september 13, and October 14, 2020. The results for both the exams would be released on ntaneet.nic.in on today - Friday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X