டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மோடிக்கு 66.2% மக்களின் ஆதரவு- ஒடிஷாவில் அமோகம்- தமிழகத்தில்தான் ரொம்ப குறைவு: சி வோட்டர் சர்வே

Google Oneindia Tamil News

டெல்லி: பிரதமர் மோடிக்கு நாடு முழுவதும் 66.2% பேர் ஆதரவு உள்ளதாக சி வோட்டர் கருத்து கணிப்பு முடிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended Video

    Unlock 1 க்கு பின் பொருளாதாரம் பற்றி முதல்முறையாக மோடி முக்கிய பேச்சு

    பிரதமர் மோடி, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி ஆகியோருக்கான செல்வாக்கு, மாநிலங்களில் சிறந்த முதல்வர் யார்? என்பது தொடர்பாக நாடு முழுவதிலுமிருந்து 3,000 பேரிடம் சி வோட்டர் கருத்து கணிப்பு நடத்தியது. இந்த கருத்து கணிப்பு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன.

    முதல்வர்களில் ஒடிஷாவின் நவீன் பட்நாயக் டாப் 82.96% பேர் ஆதரவு..அப்ப எடப்பாடிக்கு எவ்வளவு செல்வாக்கு?முதல்வர்களில் ஒடிஷாவின் நவீன் பட்நாயக் டாப் 82.96% பேர் ஆதரவு..அப்ப எடப்பாடிக்கு எவ்வளவு செல்வாக்கு?

    பட்நாயக்குக்கு அமோக ஆதரவு

    பட்நாயக்குக்கு அமோக ஆதரவு

    சிறந்த மாநில முதல்வர்களில் ஒடிஷாவின் முதல்வர் நவீன் பட்நாயக் முதலிடம் பிடித்திருக்கிறார். மக்களின் அதிருப்தியைப் பெற்ற மாநில முதல்வர்களில் 5 வது இடத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இருக்கிறார்.

    மோடிக்கு 66.26% பேர் ஆதரவு

    மோடிக்கு 66.26% பேர் ஆதரவு

    நாடு முழுவதும் பிரதமர் நரேந்திர மோடிக்கு மொத்தம் 66.2% பேர் ஆதரவு அளித்திருக்கின்றனர். காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு மொத்தம் 23.21% ஆதரவுதான் கிடைத்திருக்கிறது. பிரதமர் மோடியின் செயல்பாடுகளுக்கு ஒடிஷாதான் அமோக ஆதரவு கொடுத்திருக்கிறது. ஒடிஷாவில் 95.6% மக்கள் மோடி மீது திருப்தி தெரிவித்துள்ளனர்.

    மோடி ஆதரவு மாநிலங்கள்

    மோடி ஆதரவு மாநிலங்கள்

    மோடிக்கு அமோக ஆதரவு தெரிவித்த மாநிலங்களில் இமாச்சல் பிரதேசம், சத்தீஸ்கர், ஆந்திரா, ஜார்க்கண்ட், கர்நாடகா, குஜராத், அஸ்ஸாம், தெலுங்கானா மகாராஷ்டிரா ஆகியவை முக்கியமானவை. இந்த மாநிலங்களில் 71.48% முதல் 93.95% வரை மோடியின் செயல்பாடுகளுக்கு திருப்தி தெரிவித்துள்ளனர். ஆனால் தென்னிந்திய மாநிலங்களில் நிலவரம் வேறாக இருக்கிறது.

    மோடிக்கு எதிராக தமிழகம், கேரளா

    மோடிக்கு எதிராக தமிழகம், கேரளா

    நாட்டிலேயே மோடிக்கு மிக குறைவான ஆதரவு தெரிவித்திருக்கும் இரு மாநிலங்கள் தமிழகமும் கேரளாவும்தான். இருப்பினும் தமிழகத்தில் 32.15% பேரும் கேரளாவில் 32.89% பேரும் மோடி அரசு மீது திருப்தி தெரிவித்திருக்கிறார்களாம். மேற்கு வங்கம், உ.பி. டெல்லி மாநிலங்களில் 64% முதல் 60% பேர் வரை மோடி அரசு மீது திருப்தி தெரிவித்திருக்கின்றனர். பீகார், உத்தர்காண்ட், கோவா, ஹரியானா, ஜம்மு காஷ்மீரில் இது 60%க்கு கீழ் 50% வரை உள்ளது. இவ்வாறு சிவோட்டர் சர்வே தெரிவித்துள்ளது.,

    English summary
    Prime Minister Narendra Modi enjoys over 65 per cent support a survey by CVoter.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X