டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மிக அருகில் வந்துவிட்டது.. பூமியை நெருங்கிய ராட்சச வால்நட்சத்திரம்.. ஸ்பேஸ் ஸ்டேஷன் வெளியிட்ட வீடியோ

Google Oneindia Tamil News

டெல்லி: உலக விஞ்ஞானிகள் எல்லோரும் எதிர்பார்த்த நியோவைஸ் (NEOWISE) வால் நட்சத்திரம் தற்போது பூமிக்கு மிக அருகில் வந்து இருக்கிறது.

நியோவைஸ் (NEOWISE) வால் நட்சத்திரம் கடந்த இரண்டு மாதமாக சூரியன் அருகே சுற்றி வந்துவிட்டு, சூரிய ஒளியில், வெப்பத்தில் இருந்து தப்பித்து அசாத்திய பயணம் மேற்கொண்டது. தனது பயணத்தை அங்கேயே முடித்துக் கொள்ளாமல், நியோவைஸ் (NEOWISE) வால் நட்சத்திரம் அதன்பின் புதன் கிரகத்தை நோக்கி சென்றது.

இடையில் வெள்ளி கிரகத்தின் சுற்று பாதையை கடந்த நியோவைஸ் (NEOWISE) வால் நட்சத்திரம் தற்போது பூமியை நோக்கி வந்துள்ளது. இதன் அசாத்திய பயணத்தை நாமே இனி கண்கூடாக பார்க்க முடியும் என்கிறார்கள்.

ஒரு பக்கம் கொரோனா.. மறு பக்கம் ஆம்புலன்ஸ் ஒரு பக்கம் கொரோனா.. மறு பக்கம் ஆம்புலன்ஸ் "வெயிட்டிங்".. கடைக்கு போய் பக்கோடா வாங்கிய தாத்தா!

பூமியை நெருங்கிவிட்டது

பூமியை நெருங்கிவிட்டது

கடந்த 13 அல்லது 14ம் தேதிகளில் இந்த நியோவைஸ் (NEOWISE) வால் நட்சத்திரம் பூமியை நெருங்கும் என்று கணிக்கப்பட்டது. இந்த நிலையில் மிக சரியாக நேற்று காலை இந்த நியோவைஸ் (NEOWISE) வால் நட்சத்திரம் பூமியை நெருங்கியது. பூமிக்கு மிக அருகில் இது தற்போது கடந்து சென்று கொண்டு இருக்கிறது. இதை நம்முடைய வெறும் கண்களால் பார்க்க முடியும்.

ஆகஸ்ட் மாதம்

ஆகஸ்ட் மாதம்

ஆகஸ்ட் மாதம் இறுதி வரை இதை காண முடியும். இரவு நேரங்களில் இது எளிதாக பார்க்கப்படுகிறது. தினமும் மாலை நேரத்தில் 7 மணிக்கு பிறகு 20 நிமிடங்கள் வரை பார்க்க முடியும். சில இடங்களில் பைனாகுலர் வைத்து இதை பார்க்க முடியும். இந்தியாவில் இருந்தும் கூட இதை பார்க்க முடியும்.

பூமியில் விழாது

பூமியில் விழாது

இந்த நியோவைஸ் (NEOWISE) வால் நட்சத்திரம் பூமியில் விழ வாய்ப்பு இல்லை. பூமியை கடந்து இந்த நியோவைஸ் (NEOWISE) வால் நட்சத்திரம் செல்லும். செவ்வாய் கிரகத்தை நோக்கி இந்த நியோவைஸ் (NEOWISE) வால் நட்சத்திரம் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த மார்ச் மாதம் சூரியனுக்கு மிக அருகில் சி/2020 எப்3 (C/2020 F3) என்ற வால் நட்சத்திரம் கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பின் இதற்கு நியோவைஸ் (NEOWISE) என்று பெயர் வைக்கப்பட்டது.

வீடியோ வெளியிட்டது

வீடியோ வெளியிட்டது

தற்போது விண்வெளியில் இருக்கும் சர்வதேச ஸ்பேஸ் ஸ்டேஷன் இதை புகைப்படம் எடுத்துள்ளது. அதோடு பூமிக்கு அருகே நியோவைஸ் (NEOWISE) வால் நட்சத்திரம் கடந்து செல்லும் வீடியோவையும் இந்த ஸ்பேஸ் ஸ்டேஷன் வெளியிட்டு இருக்கிறது. முதலில் இது பூமியில் இருந்து 200 மில்லியன் கிலோ மீட்டர் தூரத்தில் இது கண்டுபிடிக்கப்பட்டது.

செம பெரியது

செம பெரியது

இந்த வால் நட்சத்திரம் வைஸ் (Wide-field Infrared Survey Explorer - WISE) எனப்படும் தொலைநோக்கி மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் பூமிக்கு எந்த விதமான ஆபத்தும் கிடையாது. சூரிய ஒளியில் கூட அழியாத அளவிற்கு இது சக்தி வாய்ந்தது ஆகும். கடந்த 50 ஆண்டுகளில் கண்டுபிடிக்கப்பட்ட வால் நட்சத்திரங்களில் இதுதான் மிகவும் அதிக வெளிச்சம் கொண்ட வால் நட்சத்திரம் ஆகும். இந்த வால் நட்சத்திரம் வைஸ் (Wide-field Infrared Survey Explorer - WISE) எனப்படும் தொலைநோக்கி மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் பூமிக்கு எந்த விதமான ஆபத்தும் கிடையாது. சூரிய ஒளியில் கூட அழியாத அளவிற்கு இது சக்தி வாய்ந்தது ஆகும். கடந்த 50 ஆண்டுகளில் கண்டுபிடிக்கப்பட்ட வால் நட்சத்திரங்களில் இதுதான் மிகவும் அதிக வெளிச்சம் கொண்ட வால் நட்சத்திரம் ஆகும்.

English summary
NEOWISE Comet is already close to the earth and you can see it in bare eyes.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X