டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எம்பி பதவியைவிட பணமும், கிரிக்கெட் கான்ட்ராக்டும் முக்கியமா.. காம்பீரை தாக்கும் நெட்டிசன்கள்

Google Oneindia Tamil News

டெல்லி: நான் ஜிலேபி சாப்பிடுவதை விட்டுவிட்டால் மட்டும் டெல்லியில் காற்று மாசு சரியாகிவிடுமா என கிழக்கு டெல்லி எம்பி தொகுதியின் எம்பியும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான கவுதம் காம்பீர் ஆவேசமாக பேசியுள்ளார். இதற்கு நெட்டிசன்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

கடந்த சில தினங்களாக டெல்லியில் காற்று மாசு பாடாய்படுத்தி வருகிறது. மக்களால் நல்ல காற்றை சுவாசிக்கக் கூட முடியாமல் ஆக்ஸிஜனை காசு கொடுத்து வாங்கி சுவாசிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் காற்று மாசு குறித்த ஆலோசனை கூட்டம் கடந்த 15-ஆம் தேதி டெல்லியில் நிகழ்ந்தது. அந்த கூட்டத்தில் டெல்லி கிழக்கு தொகுதியின் பிரதிநிதி என்ற முறையில் காம்பீர் கலந்து கொள்ளவேயில்லை.

பாஜகவுக்கு தாவிய மாஜி எம்எல்ஏ மீது செருப்பு வீச்சு.. குடும்பத்தாரும் தப்பவில்லை.. கர்நாடகாவில் ஷாக்பாஜகவுக்கு தாவிய மாஜி எம்எல்ஏ மீது செருப்பு வீச்சு.. குடும்பத்தாரும் தப்பவில்லை.. கர்நாடகாவில் ஷாக்

போஸ்டர்கள்

போஸ்டர்கள்

நாடாளுமன்றக் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் இந்தியா- வங்கதேச அணிகளுக்கிடையேயான கிரிக்கெட் போட்டியில் வர்ணனை செய்ய சென்றுவிட்டார். இதனால் இவரை கண்டித்து டெல்லியில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன.

காம்பீர் ஆவேசம்

காம்பீர் ஆவேசம்

அதில் கிழக்கு டெல்லி எம்பி கவுதம் காம்பீரை காணவில்லை. கடைசியாக இந்தூரில் ஜிலேபி சாப்பிட்டபோது பார்த்தது என அவர் ஜிலேபி சாப்பிடும் போட்டோவை போட்டு போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. இதனால் காம்பீர் ஆவேசமடைந்தார்.

காம்பீர் அதிரடி பேச்சு

இதுகுறித்து அவர் கூறுகையில் கிரிக்கெட் வர்ணனை செய்ய கடந்த ஜனவரி மாதமே நான் ஒப்பந்தமாகிவிட்டேன். நான் அரசியலுக்கு வந்தது ஏப்ரலில். எப்படி ஒப்பந்தத்தை மீற முடியும். நான் ஜிலேபி சாப்பிடுவதை நிறுத்தினால் மட்டும் காற்றின் தரம் உயர்ந்துவிடுமா என கேள்வி எழுப்பியிருந்தார்.

கிரிக்கெட் முக்கியமா

இதற்கு நெட்டிசன்கள் சரமாரியாக கேள்விகளை எழுப்பியதோடு கடும் கண்டனத்தையும் தெரிவித்துள்ளனர். நீங்கள் எம்பியாக பதவியேற்றதை விட கிரிக்கெட் ஒப்பந்தம்தான் முக்கியம் என்கிறீர்களா என்கிறார் இந்த வலைஞர்.

உண்மையாக இருங்கள்

என்ன ஆணவமான பேச்சு இது? மக்கள் உங்களை எதற்காக தேர்வு செய்தார்கள்? கொஞ்சமாவது மனிதத் தன்மையுடன் நடந்து கொள்ளுங்கள். எம்பி பதவிக்காலம் வெறும் 5 ஆண்டுகள் மட்டுமே. அதுவரையாவது மக்களுக்கு உண்மையாக இருங்கள்.

டெல்லி, தேசம்

வர்ணனை செய்ய ஒப்பந்தம் போட்டிருந்தால் என்ன அதிலிருந்து வெளியே வந்திருக்க வேண்டும். அதற்கான இழப்பீட்டை கிரிக்கெட் வாரியத்துக்கு நீங்கள் செலுத்தியிருக்கலாம். இதையெல்லாம் நீங்கள் செய்யவில்லை என நினைக்கும் போது உங்களுக்கு டெல்லி மற்றும் தேசத்தை விட பணம்தான் முக்கியம் என தோன்றுகிறது.

English summary
Netisans troll Gautham Gambhir for his reply why he was not participated in Parliament meeting which discussed about polluted air.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X