டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தோஸ்த் சிந்தியா பற்றி மூச்சே விடாத ராகுல்..ஒரு ட்விட் பதிவு போட்ட சில நிமிஷத்தில் எத்தனை குத்து சாமீ

Google Oneindia Tamil News

டெல்லி: காங்கிரஸில் இருந்து ஜோதிராதித்யா சிந்தியா விலகியது பற்றி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்னமும் வாயே திறக்கவில்லை. இந்த நிலையில் பஞ்சாப் முதல்வர் அமரீந்தர்சிங்குக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து இன்று ராகுல் பதிவிட்ட ட்வீட்டில் நெட்டிசன்கள் சரமாரி கேள்விகளை கொட்டி வருகின்றனர்.

Recommended Video

    ம.பியில் முதல்வர் கமல்நாத் தலைமையிலான காங். அமைச்சரவை கலைப்பு

    காங்கிரஸ் தலைவராக ராகுல் பதவி வகித்த போது அவரது தளகர்த்தர்களாக இருந்தவர்கள் ஜோதிராதித்யா சிந்தியா, சச்சின் பைலட் உள்ளிட்டோர். ஆனால் இந்த தளபதிகளுக்கான அரசியல் இடங்களைப் பெற்றுத் தருவதில் ராகுல் காந்தி வெல்ல முடியவில்லை.

    Netizens slams Rahul Gandhi on silence over Scindia issue

    ராகுல் காந்தியின் சகாக்கள் என்பதற்காகவே மூத்த தலைவர்களால் ஓரம்கட்டப்பட்டு ஒதுக்கிவைக்கப்பட்டனர் இளம் தலைவர்கள். இதனால் ஜோதிராதித்யா சிந்தியா காங்கிரஸில் இருந்து விலகியேவிட்டார். தமது தளபதி கட்சியில் இருந்து விலகியது குறித்து ராகுல் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. அவர் எங்கே இருக்கிறார் என கேள்விகள் எழுப்பப்பட்டன.

    இந்நிலையில் இன்று திடீரென ட்விட்டர் பக்கத்தில் பஞ்சாப் முதல்வர் அமரீந்தர்சிங்குக்கு ராகுல் காந்தி பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்து ஒரு பதிவு போட்டார். இந்த பதிவு போட்ட சில நிமிடங்களில் கேள்விக்கணைகள் சரமாரியாக ராகுலை நோக்கி பாய்ந்து வந்து கொண்டே இருக்கின்றன.

    போலீஸ் கஸ்டடியில் ம.பி. காங். எம்.எல்.ஏக்கள்.. பாஜகவுக்கு ஷாக் கொடுக்கும் கர்நாடகா சிவகுமார் என்ட்ரிபோலீஸ் கஸ்டடியில் ம.பி. காங். எம்.எல்.ஏக்கள்.. பாஜகவுக்கு ஷாக் கொடுக்கும் கர்நாடகா சிவகுமார் என்ட்ரி

    நேற்று எல்லாம் எங்கே இருந்தீங்க? தாய்லாந்து டிரிப் கேன்சலா? நீங்க அரசியலைவிட்டே போய்விடுங்க என்கிற எகத்தாள பதிவுகள்தான் இதில் ஏராளம். அத்துடன் சிந்தியாவே சேர்ந்துட்டார்.. நீங்க எப்ப பாஜகவுக்கு வருவீங்க? என்கிற கிண்டல் கேலிகள் இன்னொரு பக்கம்.

    அதேநேரத்தில் காங்கிரஸ் தலைமை ஏற்க வாருங்கள்.. உங்களால்தான் கட்சியை காப்பாற்ற முடியும் என்கிற கோரிக்கைகள்.. ஒரு பதிவை போட்டு ஓராயிரம் வசவுகளை வாங்கி கட்டிக் கொண்டிருக்கிறார் ராகுல் காந்தி.

    Netizens slams Rahul Gandhi on silence over Scindia issue
    English summary
    Netizens has slammed Congress former President Rahul Gandhi on silence over Jyotiraditya Scindia issue.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X