டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனாவை எதிர்க்க டி செல்கள் முக்கியம்... அமெரிக்க ஆய்வில் புதிய தகவல்!!

Google Oneindia Tamil News

டெல்லி: உலகில் கொரோனா வைரசால் தினமும் லட்சக்கணக்கில் பாதித்து வருகின்றனர். ஆனால், இன்னும் வைரஸ் குறித்து ஒரு சரியான புரிதலுக்கு விஞ்ஞானிகளால் வர முடியவில்லை. இதற்குக் காரணம் இந்த வைரஸ் தனது மரபணுவை மாற்றிக் கொண்டு இருப்பதுதான்.

கொரோனா வைரஸூக்கு இந்தியாவில் இதுவரைக்கும் 52,14,678 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் தற்போது 10,17,754 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 87,372 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனாவிலிருந்து தப்பிக்க இப்படி ஒரு வழி இருக்கு பாஸ்.. சீனா அசத்தல் தகவல் கொரோனாவிலிருந்து தப்பிக்க இப்படி ஒரு வழி இருக்கு பாஸ்.. சீனா அசத்தல் தகவல்

ரத்த அணுக்கள்

ரத்த அணுக்கள்

உடலில் இருக்கும் டி செல்கள்தான் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகும் வைரஸ்களை காப்பாற்றும் என்று புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது. இது வெள்ளை ரத்த அணுக்கள் என்றும் கூறப்படுகிறது. ஆன்டிபாடிகளை விட டி செல்கள்தான் கொரோனா வைரஸ்கள் தாக்கும் செல்களை காப்பாற்றும் போர் படையைப் போன்றது என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.

ஆன்டிபாடிஸ்

ஆன்டிபாடிஸ்

இதற்கான ஆய்வை அமெரிக்காவில் இருக்கும் லா ஜொல்லா நோய் எதிர்ப்பு நிறுவனம் மேற்கொண்டது. இதுகுறித்த ஆய்வு முடிவுகள் செல் என்ற மருத்துவ இதழில் வெளியாகி இருக்கிறது. இந்த ஆய்வில், ''ஆன்டிபாடிஸ் மட்டும் கொடுப்பதாக இல்லாமல் டி செல்களுக்குமான நோய் எதிர்ப்பு சக்தியை கொடுப்பதாக கொரோனா தடுப்பு மருந்து இருக்க வேண்டும்.'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோய் எதிர்ப்பு சக்தி

நோய் எதிர்ப்பு சக்தி

மேலும், இந்த ஆய்வில், வயதாகும்போது உடலில் டி செல்களும் இருப்பு குறையத் துவங்கும். இந்த சமயத்தில் உடம்பில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியும் ஒருங்கிணைந்து செயல்படாது. இதனால்தான், வயதானவர்களை இந்த கொரோனா வைரஸ் எளிதில் தாக்கும் என்று கூறப்படுகிறது.

ரத்த மாதிரிகள்

ரத்த மாதிரிகள்

இந்த ஆய்வுக்கு 50 கொரோனா தொற்று நோயாளிகளிடம் இருந்து ரத்த மாதிரிகள் பெறப்பட்டு, நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் டி செல்கள் செயல்பாடு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில்தான், கொரோனாவை எதிர்க்க டி செல்கள் முக்கியம் என்பது தெரிய வந்துள்ளது.

நுரையீரல்

நுரையீரல்

அதேபோல் உடல் எடை அதிகமாக இருப்பவர்கள் கொரோனாவுக்கு அதிகமாக உயிரிழந்து வருகின்றனர். இவர்களது நுரையீரல் வீக்கத்தைக் குறைக்க மருந்து கொடுப்பதன் மூலம் கொரோனாவில் இருந்து இவர்களை காப்பாற்றலாம் என்று மருத்துவ இதழான இ லைப்-பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மந்தை நோய்

மந்தை நோய்

அதிக உடல் பருமன் இருப்பவர்களுக்கும் இருக்கும் ஏசிடி2 வாயிலாக கொரோனா வைரஸ் எளிதில் செல்களை தாக்கும் என்று தெரிய வந்துள்ளது. மேலும், மந்தை நோயாக கொரோனா வைரஸ் மாற்றம் அடைந்த பின்னரும், இது பருவகால நோயாக மாறும் தன்மை கொண்டது. இதனால், தடுப்பு மருந்து கண்டுபிடிக்க வேண்டியது அவசியம் என்று கூறப்படுகிறது.

English summary
New america survey says that T cells more important to fight against coronavirus
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X