டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

உங்கள் பணத்துக்கு நீங்கள் தான் ராஜா.. பிஎப் கணக்கில் சூப்பர் மாற்றம்.. இனி பிரச்சனை இல்லை!

Google Oneindia Tamil News

டெல்லி: EPFO வில் புதிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி PF பணம் எடுக்க விரும்புபவர்கள், முன்பு வேலை செய்து விலகிய நிறுவனத்தில் இருந்து விலகியதை ஆன்லைனில் பதிவு செய்ய முடியும். இனி இதற்காக நிறுவனங்களை சார்ந்து இருக்க தேவையில்லை. இதன் மூலம் பணியில் இருந்து விலகிவிட்டீர்கள் என்பதை உறுதி செய்ய நிறுவனத்தை நாட தேவையில்லை.

கொரோனா காலத்தில் வீடுகளில் முடங்கி கிடந்த மக்கள் பலருக்கு பெரிய அருமருந்தாக இருந்தது பிஎப் பணம் மட்டுமே. அவர்கள் சேமித்து வைத்த பணத்தை எடுத்து தங்களின் பொருளாதார தேவைகளை சமாளித்துக்கொண்டனர்.

தற்போதைய நிலையில் EPFO - அக்கவுண்டில் இருந்து பணம் எடுப்பதில் பலரும் பிரச்சனைகளை சந்தித்து வருகிறார்கள். அவர்கள் சந்திக்கும் ஒவ்வொரு பிரச்சனைகளையும் வருங்கால வைப்பு நிதியகம் சரி செய்து வருகிறது.

பணியாளர்கள் அப்டேட்

பணியாளர்கள் அப்டேட்

இப்போது டிடி, பணம் எடுப்பதில் சிக்கல் இருந்தால் வாட்ஸ்ஆப் மூலம் குறைகளை அனுப்பும் வசதியை மண்டல வாரியாக அண்மையில் அறிமுகப்படுத்தியது.
இந்நிலையில், மற்றொரு நடவடிக்கையாக முன்னாள் நிறுவனத்தில் இருந்து விலகிய தேதியை பணியாளர்களே அப்டேட் செய்யும் புதிய வசதியை வருங்கால வைப்பு நிதியகம் அறிமுகம் செய்துள்ளது.

விலகிய தேதி

விலகிய தேதி

இதற்கு முன்னர், பணியாற்றிய நிறுவனம் தான் அப்டேட் செய்ய வேண்டும் அல்லது EPFO அலுவலகத்துக்கு நேரடியாக சென்று உரிய சான்றுகளை சமர்பித்து முன்னாள் நிறுவனத்தில் இருந்து விலகிய தேதியை அப்டேட் செய்ய வேண்டும்.

நடைமுறை என்ன

நடைமுறை என்ன

ஆனால், அந்த நடைமுறையில் மாற்றத்தைக் கொண்டு வந்துள்ள வருங்கால வைப்பு நிதியகம், ஆன்லைன் மூலம் ஊழியர்கள் தாங்களாவே முன்னாள் நிறுவனத்தில் இருந்து விலகிய தேதியை அப்டேட் செய்து கொள்ளலாம். அதற்கான வழிமுறைகளை இப்போது பார்க்கலாம்.

யுஏஎண் நம்பர்

யுஏஎண் நம்பர்

முன்பு பணியாற்றி நிறுவனத்தில் இருந்து விலகிய தேதியை ஆன்லைன் மூலம் EPFO அக்கவுண்டில் அப்டேட் செய்யும் வழிமுறைகள் விவரம் வருமாறு:
Step 1: EPFO வலைதளத்துக்கு சென்று உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள UAN member எண்களை பயன்படுத்தி Login செய்ய வேண்டும். அதில் இருக்கும் Manage பிரிவுக்கு செல்ல வேண்டும்

தேர்வு செய்யுங்கள்

தேர்வு செய்யுங்கள்

Step 2: அங்கு இருக்கும் 'Mark Exit' என்ற ஆப்சனை தேர்வு செய்து அதில் இருக்கும் PF account நம்பரை தேர்வு செய்யுங்கள்
Step 3: பின்னர், நிறுவனத்தில் இருந்து வெளியேறியதற்கான காரணத்தை கொடுக்கப்பட்ட இடத்தில் பதிவு செய்யுங்கள்

ஓடிபி வரும்

ஓடிபி வரும்

Step 4: கீழே கொடுக்கப்பட்டுள்ள "I have read the below points carefully" என்பதை தேர்வு செய்துவிட்டு பின்னர் ஒருமுறை பயன்படுத்தும் பாஸ்வேர்ட் ஆப்சனை கிளிக் செய்யுங்கள்('Request OTP')
Step 5: நீங்கள் EPFO அக்கவுண்டில் பதிவு செய்த மொபைல் எண்ணுக்கு OTP வந்திருக்கும். அதனை EPFO portal -ல் அப்டேட் செய்ய வேண்டும்.

 பணம் எடுக்கலாம்

பணம் எடுக்கலாம்

Step 6: இந்த நடைமுறைகளை சரியாக செய்யும்பட்சத்தில் உங்கள் கோரிக்கை நிறைவேறியிருக்கிறது என்று உங்கள் கணிணி திரையில் தெரியும்.அவ்வளவு தான். இதன் பின்னர் நீங்கள் கணக்கில் பணம் எடுப்பது எளிதாக இருக்கும்.. ஏனெனில் பலர் இப்போது சந்திக்கும் பிரச்சனை என்னவென்றால், எப்போது பழைய நிறுவனத்தில் இருந்து விலகினார் என்ற தகவல் உடனே நிறுவனங்களால் சேரக்கப்படுவது இல்லை. இதனால் பணம் எடுக்க முடியாமல் தவித்தனர். இப்போது அந்த பிரச்சனை தீர்ந்துள்ளது.

English summary
Through EPFO’s WhatsApp helpline service, PF account holders can talk directly with the regional offices of EPFO. Now the WhatsApp helpline service has been started in all 138 regional offices of EPFO. Complainants can lodge any type of complaint related to EPFO ​​services through WhatsApp message on the helpline number of their respective regional office.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X