டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இனிமே குடியரசு தலைவர் மாளிகையிலிருப்பது "முஹல்" தோட்டமில்லை.. "அம்ரித் உத்யான்" அதிரடி மாற்றம்

Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லி ஜனாதிபதி மாளிகையில் உள்ள முகல் (முகாலய) தோட்டத்தின் பெயரை மத்திய அரசு அதிரடியாக இன்று மாற்றம் செய்துள்ளது. அதன்படி முகல் தோட்டத்தின் பெயர் ‛அம்ரித் உத்யான்' என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்களின் பார்வைக்காக ஜனவரி 31ம் தேதி முதல் மார்ச் மாதம் 26ம் தேதி வரை இந்த தோட்டம் திறக்கப்படும் நிலையில் இந்த பெயர் மாற்றத்தின் பின்னணியில் உள்ள விபரம் வெளியாகி உள்ளது.

டெல்லியில் ராஷ்ட்ரபதி மாளிகை (ஜனாதிபதி மாளிகை) அமைந்துள்ளது. இதுதான் நமது நாட்டு ஜனாதிபதியின் அதிகாரப்பூர்வ இல்லமாகும். தற்போது ஜனாதிபதி திரெளபதி முர்மு இங்கு வசித்து வருகிறார்.

இந்த ஜனாதிபதி மாளிகையை சுற்றிலும் மிகப்பெரிய அளவில் கண்களை கவரும் வகையில் தோட்டம் அமைந்துள்ளது. பல்வேறு வகையான மரங்கள், பூச்செடிகள், அழகு செடிகள் என ஏராளமானவை இங்கு வளர்க்கப்பட்டு வருகிறது.

Fact Check - குடியரசு தினத்தில் பாகிஸ்தான் கொடி ஏற்றப்பட்டதா? பீகார் வீட்டு மாடியில் பறந்தது என்ன? Fact Check - குடியரசு தினத்தில் பாகிஸ்தான் கொடி ஏற்றப்பட்டதா? பீகார் வீட்டு மாடியில் பறந்தது என்ன?

முஹல் தோட்டத்தின் பெயர் மாற்றம்

முஹல் தோட்டத்தின் பெயர் மாற்றம்

இந்த தோட்டம் ‛முஹல்'(முகலாய) தோட்டம் என அழைக்கப்பட்டு வந்தது. இந்த தோட்டத்தில் உள்ள பூச்செடிகள் தங்களுக்கான சீசனில் பூத்துக்குலுங்கி கண்களை கவரும். மேலும் ஒவ்வொரு ஆண்டும் இந்த பூந்தோட்டத்தை பொதுமக்கள் பார்த்து ரசிக்கவும் அரசு சார்பில் அனுமதி வழங்கப்படும். இந்நிலையில் தான் தற்போது

டெல்லி ஜனாதிபதி மாளிகையில் உள்ள முகல் (முகாலய) தோட்டத்தின் பெயரை மத்திய அரசு அதிரடியாக இன்று மாற்றம் செய்துள்ளது.

'அம்ரித் உத்யான்' என மாற்றம்-காரணம் என்ன?

'அம்ரித் உத்யான்' என மாற்றம்-காரணம் என்ன?

அதன்படி முகல் தோட்டத்தின் பெயர் ‛அம்ரித் உத்யான்' என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முஹல் என்பது முகலாயர்களை குறித்து வந்த நிலையில் தற்போது மத்திய அரசு பெயர் மாற்றம் செய்துள்ளது. இந்தியா தனது 75வது சுதந்திர தினத்தையொட்டி ‛ அசாதி கா அம்ரித் மஹோத்சவ்' என்ற கருப்பொருளில் கொண்டாடியது. நாட்டு மக்களின் கலாச்சாரம் மற்றும் சாதனைகளின் மகத்தான வரலாற்றை கொண்டாடுவதற்கும் இந்த கருப்பொருளை மத்திய அரசு உருவாக்கியது. இந்நிலையில் ‛அசாதி கா அம்ரித் மஹோத்சவ்' கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக தான் தற்போது டெல்லி ஜனாதிபதி மாளிகையில் அமைந்துள்ள முஹல் தோட்டத்தின் பெயர் ‛அம்ரித் உத்யான்' என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பொதுமக்கள் பார்வைக்கு எப்போது?

பொதுமக்கள் பார்வைக்கு எப்போது?

இதுபற்றி ஜனாதிபதியின் துணை பத்திரிகை செயலாளர் நவிகா குப்தா ,‛‛இந்தியாவின் 75வது சுதந்திர தின ஆண்டையொட்டி ஜனாதிபதி மாளிகையில் உள்ள தோட்டத்துக்கு அம்ரித் உத்யான் என்ற பெயரை ஜனாதிபதி சூட்டியுள்ளார். அம்ரித் உத்யான் தோட்டத்தை ஜனாதிபதி திரெளபதி முர்மு நாளை திறந்து வைக்க உள்ளார். மேலும் ஒவ்வொரு ஆண்டும் இந்த தோட்டம் மக்களின் பார்வைக்காக திறக்கப்படும். அதன்படி இந்த ஆண்டு ஜனவரி 31ம் தேதி முதல் மார்ச் 26ம் தேதி வரை 2 மாதங்கள் பொதுமக்கள் ஜனாதிபதி மாளிகையின் தோட்டத்தை கண்டுரசிக்கலாம்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

600 வகை தாவரங்கள்

600 வகை தாவரங்கள்

இந்த அம்ரித் உத்யான் தோட்டம் ஒவ்வொரு ஆண்டும் செவ்வகம், நீளம், வட்டம் என மூன்று தோற்றங்களில் உருவாக்கப்படும். ஹெர்பல் கார்டன், மியூசிக் கார்டன், ஸ்பிரிட்சுவல் கார்டன் என பெயரிடப்பட்டு தனித்தனியே மலர்செடிகள் இடம்பெற்றிருக்கும். 250 ரோஜா, துலிப் மலர்கள் உள்பட மொத்தம் 600 வகை தாவரங்களை கொண்ட இந்த தோட்டம் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மார்ச் மாதங்கள் பொதுமக்கள் பார்வைக்காக திறந்து விடப்படும். அதன்படி இந்த ஆண்டும் திறக்கப்படுகிறது என்பது குறிப்பிடதக்கது.

English summary
The central government has changed the name of the Mughal (Mugalaya) Garden in the Rashtrapati Bhavan in Delhi today. Accordingly the name of the Mughal garden has been changed to Amrit Udyan''.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X