டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கேபிள் டிவி, டிடிஹெச் சேவை கட்டணங்கள் பிப்.1 முதல் மாற்றம்.. எப்படி நிர்ணயிக்கப்படும் தெரியுமா?

Google Oneindia Tamil News

Recommended Video

    கேபிள் டிவி, டிடிஹெச் சேவை கட்டணங்கள் பிப்.1 முதல் மாற்றம்- வீடியோ

    டெல்லி: தொலைதொடர்பு ஆணையமான 'டிராய்' வெளியிட்டுள்ள புதிய விதிமுறைகள் பிப்ரவரி 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதனால் கேபிள், டிடிஹெச் சேவை கட்டணங்களில் மாற்றம் ஏற்படும்.

    இப்போது வாடிக்கையாளர்கள் தேவைக்கு ஏற்ப கட்டணம் மாறுபடும் என்பதால், வாடிக்கையாளர்கள், திறமையாக தங்களுக்கு வேண்டிய சேனலை தேர்வு செய்தால், இப்போதைவிட குறைந்த செலவில் தொலைக்காட்சி சேனல்களை கண்டுகளிக்க வாய்ப்பு ஏற்படும்.

    டிராய் உத்தரவை தொடர்ந்து, சன், ஸ்டார், ஜி, சோனி, டிஸ்கவரி உள்ளிட்ட சேனல் குழுமங்கள் தங்களது பேக்கேஜ்களை அறிவித்துள்ளன.

     அடிப்படை கட்டணம்

    அடிப்படை கட்டணம்

    ஜிஎஸ்டி வரியை தவிர்த்துவிட்டு, அடிப்படை கட்டணமாக ரூ.130 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுதவிர 'பே சேனல்களுக்கு' அந்த சேனல்கள் நிர்ணயித்துள்ள கட்டணத்தை கொடுத்து பார்த்துக்கொள்ள முடியும். டிராய் வெளியிட்டுள்ள பட்டியலில், 330 கட்டண சேனல்களாகும். 535 சேனல்கள் இலவச சேனல்களாகும்.

     100 அடிப்படை சேனல்

    100 அடிப்படை சேனல்

    தற்போது ஏர்டெல் மற்றும் டாடா ஸ்கை ஆகிய டிடிஹெச் நிறுவனங்கள், தங்களது அடிப்படை விலையை ரூ.99 என்று நிர்ணயித்துள்ளன. அடிப்படை பேக்கேஜில் 100 இலவச டிவி சேனல்கள் கட்டாயமாகும் என்பது டிராய் விதிமுறைகளில் முக்கியமானது. இந்த 100 சேனல்களே போதும் என நினைப்போர் அடிப்படை கட்டணத்தை செலுத்துவதோடு நிறுத்திக்கொள்ளலாம்.

     கூடுதல் பணம்

    கூடுதல் பணம்

    அடிப்படை பேக்கேஜிலிருந்து கூடுதலாக சேனல்களை பார்க்க வேண்டுமானால், ஒவ்வொரு 25 கூடுதல் சேனல்களுக்கும், 20 ரூபாய் கூடுதலாக செலுத்த வேண்டி வரும். இதுதவிர கட்டண சேனல்கள் வேறு எதையாவது பார்க்க வேண்டுமானால் அதற்கு கூடுதலாக கட்டணம் செலுத்த வேண்டும்.

     புது பேக்கேஜ்

    புது பேக்கேஜ்

    ஒருவேளை நீங்கள் ஏற்கனவே ஓராண்டுக்கான கட்டண பேக்கேஜில் இருந்தால், உங்கள் கட்டணங்கள் மாறாது. அந்த கால கட்டம் முடிந்த பிறகுதான், புதிய விதிமுறை உங்களுக்கு அமலுக்கு வரும். பிப்ரவரி 1ம் தேதிக்கு பிறகு, புது பேக்கேஜுக்கு மாற விரும்பினால், உங்களிடம் உள்ள பேனல்ஸ் தொகை, புதிய பேக்கேஜுக்கு ஏற்ப மாறிக்கொள்ளும். மேலும் தகவலுக்கு, டிராய் அமைப்பின் www.channeltariff.trai.gov.in வெப்சைட்டை பார்க்கலாம்.

    English summary
    Telecom Regulatory Authority of India (TRAI), has come up with a set of rules which changes plans, packages and pricing of TV channels by all operators.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X