டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நல்ல வாய்ப்பு.. சிறந்த சேவை.. புற்றுநோய் பாலிசிகளில் கலக்கும் நியூ இந்தியா அசுரன்ஸ் கம்பெனி!

Google Oneindia Tamil News

டெல்லி: கடந்த பிப்ரவரி 4ம் தேதி உலகம் முழுக்க உலக புற்றுநோய் தினம் கொண்டாடப்பட்டது. இந்த புற்றுநோய் இந்தியாவிற்கு எவ்வளவு ஆபத்தானது, இந்தியாவின் சுகாதாரத்துறைக்கும், மக்களுக்கும் எவ்வளவு சவாலானது என்பதை இந்த நாள் நினைவூட்டியது.

உலக சுகாதார மையம் வெளியிட்டு இருக்கும் ரிப்போட்ர்டின்படி இந்தியாவில் 7,84,800 பேருக்கு கேன்சர் உள்ளது. அதேபோல் 2018 கணக்குப்படி 2.26 மில்லியன் பேருக்கு கடந்த 5 வருடமாக கேன்சர் இருந்துள்ளது. இந்தியாவில் 10ல் ஒருவருக்கு அவர்கள் வாழ்நாளில் கேன்சர் ஏற்பட வாய்ப்புள்ளது. 15ல் ஒருவர் இந்த கேன்சர் மூலம் பலியாக வாய்ப்புள்ளது.

New India Assurance Companys Guard Policy is all you want for your cancer treatment

இந்த நிலையில்தான் பாதுகாப்பான ஆரோக்கியமான இந்தியாவை உருவாக்க நியூ இந்தியா அசுரன்ஸ் கம்பெனி (New India Assurance Company) உதவுகிறது. உலகின் மிகப்பெரிய பொது இன்சூரன்ஸ் நிறுவனமான நியூ இந்தியா அசுரன்ஸ் கம்பெனி (New India Assurance Company) இந்தியாவில் புற்றுநோய் பாதுகாப்பு இன்சூரன்ஸ் பாலிசிகளை அறிமுகப்படுத்தி உள்ளது.

இந்த பாலிசியை யார் எடுக்க முடியும்?

3 மாத வயது உள்ள குழந்தையில் இருந்து 65 வயது வரை உள்ள யார் வேண்டுமானாலும் இந்த பாலிசியை எடுக்க முடியும். ரூ. 5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ . 15 லட்சம், ரூ.25 லட்சம் மற்றும் ரூபாய் 50 லட்சம் என்று வயதுக்கு ஏற்றபடி பாலிசி எடுக்க முடியும். மாத பிரிமியம் தொகை 600 ரூபாயில் இருந்து 34000 ரூபாய் வரை இருக்கிறது. இந்த பாலிசியை எடுக்க மருத்துவ பரிசோதனை அவசியம் இல்லை.

இந்த பாலிசியின் பயன்கள் என்ன?

இந்த பாலிசியில் மருத்துவமனை செலவு, ரூம் செலவு, மருத்துவமனை அழைத்து செல்ல பயண செலவு, அது தொடர்பான மருத்துவ செலவு அனைத்தும் அடங்கும்.

  • ரூபாய் 5, 10 மற்றும் 15 லட்சம் வரை வழங்கப்படும் - தனி ஏசி ரூம்
  • ரூபாய் 25 மற்றும் 50 வரை வழங்கப்படும் - டீலக்ஸ் ரூம்

இந்த பாலிசியில் ஆம்புலன்ஸ் செலவு, இரண்டாம் கட்ட ஆலோசனை , இரண்டாம் கட்ட அறுவை சிகிச்சை, சிகிச்சைக்கு பின்பான சோதனைகள், உடல் உறுப்பு மாற்று சிகிச்சை, இரண்டு மாத சிகிச்சைக்கு பின்பான பராமரிப்பு ஆகியவை வழங்கப்படும். எல்லா வருடமும் வழங்கப்படும் இலவச போனஸ் கிளைம் பிரி வருட பயனுடன் சேர்த்து இதுவும் வழங்கப்படும். இதில் காத்திருப்பு காலம் 90 நாட்கள்.

இதில் இன்சூரன்ஸ் எடுத்தவருக்கு 90 நாட்களில் கேன்சர் ஏற்பட்டால் உடனே பாலிசி கேன்சல் செய்யப்பட்டு, உடனே பிரிமியம் தொகை திருப்பி அளிக்கப்படும். ஆனால் பாலிசி புதுப்பித்தலுக்கு இந்த விதி பொருந்தாது.

புற்றுநோயுடன் தொடர்புடைய அனைத்து விதமான சிகிச்சைக்கும் இந்த பாலிசி பொருந்தும். அதாவது கீமோதெரபி, ரேடியோ தெரபி, இம்யூனோதெரபி, ஹோர்மோனல் தெரபி, ஓங்கோ தெரபி, ஆர்கன் டிரான்ஸ்பிளான்ட், போன்மேர்ரோ டிரான்ஸ்பிளாண்ட் ஆகியவைக்கு இந்த பாலிசி பொருந்தும். மிக முற்பட்ட ஸ்டேஜான கேன்சரின் IV ஸ்டேஜுக்கு இது பொருந்தும்.

இந்த பாலிசியில் பின் வரும் விஷயங்களை பெற முடியாது:

  • புற்றுநோய் தவிர வேறு விஷயத்திற்கு சிகிச்சை பெற முடியாது
  • புற்றுநோய்க்கு முன்பு இருக்கும் நிலையின் சிகிச்சைக்கு பாலிசி பொருந்தாது
  • முதல் 90 நாட்களுக்குள் கேன்சர் ஏற்பட்டால் சிகிச்சைக்கு பாலிசி பொருந்தாது
  • பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை, ஒப்பனை, அழகியல் சிகிச்சைக்கு பொருந்தாது
  • அல்லோபதி இல்லாத மருத்துவம் , மறுவாழ்வு மையம், ஓய்வு கவனிப்பிற்கு பாலிசி பொருந்தாது.
  • நிரூபிக்கப்படாத நோய்த்தடுப்பு சிகிச்சை / பரிசோதனை சிகிச்சை மற்றும் பரிசோதனை மருந்தியல் விதிமுறைகளுக்கு பாலிசி பொருந்தாது.
English summary
New India Assurance Company's Guard Policy is all you want now for your cancer treatment.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X