டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வங்கக்கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி - ரெட் அலர்ட் கொடுத்த இந்திய வானிலை

: வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Google Oneindia Tamil News

டெல்லி: வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் கோவா, மத்திய பிரதேசம் மாநிலங்களில் அதிதீவிர கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தீவிர மழைக்கு வாய்ப்பு உள்ளதால் சில மாநிலங்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

Recommended Video

    Weather Update : வங்கக்கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி | Oneindia Tamil

    கடந்த ஜூன் மாதம் தென்மேற்குப் பருவமழை தொடங்கியது. நாடுமுழுவதும் பல மாநிலங்களில் மழை தீவிரமாக பெய்து வருகிறது. மும்பையில் கனமழை பெய்து வருவதால் வெள்ளநீர் பெருக்கெடுத்துள்ளது. மும்பை, தானே, பகுதிகளில் மழை தீவிரமடைந்துள்ளதால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

    இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் மத்திய வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அடுத்த 3 நாட்களுக்கு தென்மேற்கு பருவமழை மேலும் தீவிரமடையும்.

     மும்பையில் இன்றும் நாளையும் கனமழை.. வீட்டை விட்டு வெளியேறாதீர்.. வானிலை ஆய்வாளர்கள் வார்னிங் மும்பையில் இன்றும் நாளையும் கனமழை.. வீட்டை விட்டு வெளியேறாதீர்.. வானிலை ஆய்வாளர்கள் வார்னிங்

    எங்கெங்கு கனமழை

    எங்கெங்கு கனமழை

    காற்றழுத்த தாழ்வு நிலையால் ஆகஸ்ட் 4, 5ஆம் தேதிகளில் கொங்கன், கோவா, மும்பையில் தீவிர, அதிதீவிர கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதே போல மத்திய மகாராஷ்டிரா மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    இந்திய வானிலை ஆய்வு மையம்

    இந்திய வானிலை ஆய்வு மையம்

    குஜராத்தில் ஆகஸ்ட் 5 மற்றும் ஆறாம் தேதிகளில் அதிதீவிர கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதேபோல கடலோர கர்நாடகா, ஒடிசா, மேற்கு வங்கம் பகுதிகளிலும் அதி தீவிர கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழை

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழை

    தமிழ்நாட்டை பொருத்தவரைக்கும் மேற்குதொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் எனவும் வானிலைமையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

     கடலோர பகுதிகளுக்கு போகாதீங்க

    கடலோர பகுதிகளுக்கு போகாதீங்க

    ஆந்திரா, தெலுங்கானா, உத்தரபிரதேசத்தில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. தென்மேற்கு மத்திய மேற்கு அரபிக்கடல், தென்கிழக்கு கேரளா, கர்நாடகா, மகராஷ்டிரா மேற்கு வங்கம், அந்தமான் கடலோர பகுதிகளுக்கு மீனவர்கள் நான்கு நாட்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

    English summary
    Indian Meteorological Department has predicted A low-pressure has formed over North Bay of Bengal on Today August 4th 2020. As a resuslt the monsoon heavy to very heavy rainfall likely over konkan and Goa, Coastal Karnataka, on 4th to 7th August.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X