டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

முக்கோண வடிவில் புதிய விசாலமான நாடாளுமன்றக் கட்டடம்.. மாதிரி வரைப்படமும் தயார்

Google Oneindia Tamil News

டெல்லி: நாடாளுமன்றத்தில் பல்வேறு வசதிகளுடன் கூடிய முக்கோண வடிவில் புதிய கட்டடம் கட்டுவதற்கான மாதிரி வரைப்படம் தயாராகியுள்ளது.

உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு என்ற பெருமைமிக்க இந்திய நாடாளுமன்றத்திற்கு புதிய கட்டடம் கட்ட வேண்டும், மக்கள் தொகைக்கு ஏற்ப எம்பிக்களின் எண்ணிக்கையை 1000-ஆக அதிகரிக்க வேண்டும் என்ற நீண்ட கால கோரிக்கை உண்டு.

இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற பாஜக கூட்டணி அரசு முடிவு செய்துள்ளது. முதலில் நாடாளுமன்றத்திற்கு 2022-ஆம் ஆண்டுக்குள் புதிய கட்டடம் கட்டுவதில் மத்திய அரசு தீவிரம் காட்டுகிறது.

பாஜகவின் புது தல.. உபி அதிரடி வெற்றியின் நாயகன்.. வியூகம் வகுப்பதில் கில்லாடி... யார் இந்த நட்டா? பாஜகவின் புது தல.. உபி அதிரடி வெற்றியின் நாயகன்.. வியூகம் வகுப்பதில் கில்லாடி... யார் இந்த நட்டா?

கட்டுமான பணிகள்

கட்டுமான பணிகள்

சுமார் 1350 எம்பிக்கள் அமரும் வகையில் முக்கோண வடிவில் கட்டப்படலாம் என தெரிகிறது. இந்த பணியை சென்ட்ரல் விஸ்டா நிறுவனம் கட்டுமான பணிகளை கவனிக்கும் என தெரிகிறது.

துணை ஜனாதிபதி இல்லம்

துணை ஜனாதிபதி இல்லம்

இந்த திட்டத்தின்படி சவுத் பிளாக்கின் பின்புற பகுதிக்கு பிரதமரின் இல்லத்தை இடம் மாற்றுவது என்றும் நார்த் பிளாக்கின் பின்புற பகுதிக்கு துணை ஜனாதிபதியின் இல்லத்தை இடம் மாற்றுவது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றம்

நாடாளுமன்றம்

இதையடுத்து குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்த எச்.சி.பி. என்ற வரைகலை நிறுவனம் முக்கோண வடிவிலான மாதிரியை வடிவமைத்துள்ளது. தற்போதுள்ள நாடாளுமன்றத்தில் முதல் இரு வரிசையில் மட்டுமே மேஜைகள் இருக்கின்றன.

3 பேர் அமர முடியும்

3 பேர் அமர முடியும்

புதிதாக அமைக்கப்படும் வளாகத்தில் அனைத்து வரிசைகளிலும் மேஜைகள் இருக்கும்படி உருவாக்கப்படவுள்ளது. இந்த புதிய நாடாளுமன்றத்தில் ஒரு இருக்கையில் 3 பேர் அமரும் வகையில் இருக்கும்.

மாதிரி வடிவம்

மாதிரி வடிவம்

இந்த கட்டடம் 13 ஏக்கர் இடத்தில் கட்டி முடிக்கப்படும் என்று கூறப்படுகிறது. மேலும் ராஜபாதையும் மறுவடிவமைப்பு செய்யப்படும். இது குறித்த மாதிரி வடிவம் தற்போது வெளியாகியுள்ளது.

English summary
New Parliament complex will be built in next to existing complex which will be in triangular shaped.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X