டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

புதிய காற்றழுத்தம்: தமிழகம், ஆந்திரா, ஒடிசாவில் அடுத்த 4 நாட்களுக்கு இடியோடு மழை பெய்யும்

வங்கக்கடலில் புதிய காற்றழுத்தம் உருவாகியுள்ளதாக இந்திய வானிலை மையமும், சென்னை வானிலை மையமும் அறிவித்துள்ளது. அடுத்த நான்கு நாட்களுக்கு தமிழகம், ஆந்திரா, ஒடிசாவில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று வ

Google Oneindia Tamil News

டெல்லி: ஆந்திரா, தெலுங்கானாவில் ஏற்கனவே மழை வெள்ளத்தினால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு நிலையால் ஆந்திரா, தெலுங்கானா, ஒடிசாவில் நான்கு நாட்களுக்கு இடியுடன் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் கணித்துள்ளது. காற்றழுத்த தாழ்வுநிலையால் சென்னை, புறநகர் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.

Recommended Video

    சென்னையின் பல்வேறு இடங்களில் காலையிலேயே இடியுடன் கூடிய மழை - வீடியோ

    இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'மத்திய வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியால் தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக அரபிக்கடல் மற்றும் வங்கக்கடல் பகுதியில் நான்கு நாட்களுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது.

    கருமேகங்கள் சூழ்ந்த சென்னை... காலையிலேயே இடியுடன் வெளுத்து வாங்கும் மழை..! கருமேகங்கள் சூழ்ந்த சென்னை... காலையிலேயே இடியுடன் வெளுத்து வாங்கும் மழை..!

    எங்கெங்கு மழை

    எங்கெங்கு மழை

    அந்தமான் நிகோபார் தீவு பகுதிகள், வட கர்நாடகா, அருணாசல பிரதேசம், அஸ்ஸாம் மேகாலயா மாநிலங்களில் கனமழை பெய்யும் என கணித்துள்ளது. ஆந்திரா தெலுங்கானாவில் பெய்த கனமழையால் கடந்த சில நாட்களாக பல மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது 70க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

    பல மாவட்டங்களில் மழை

    பல மாவட்டங்களில் மழை

    வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னையில் நேற்று முன்தினம் மிதமான மழை பெய்தது. நேற்று காலையில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்தது. ஆனால் பிற்பகல் வெயில் வறுத்தெடுத்தது. மாலை நேரத்தில் மதுரை மாவட்டத்தில் மழை வெளுத்து வாங்கியது. இன்று காலை முதலே சென்னையின் பல பகுதிகளில் மழை பெய்கிறது.

    சிவகாசியில் வெளுத்து வாங்கிய மழை

    சிவகாசியில் வெளுத்து வாங்கிய மழை

    சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் நா.புவியரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று பிற்பகல் 12.30 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணி நேர நிலவரப்படி, தமிழகத்தில் அதிகபட்சமாக சிவகாசியில் 7 செமீ மழை பதிவாகியுள்ளது. இதற்கு அடுத்தபடியாக மலையூரில் 6 செமீ திருமயத்தில் 5 செமீ குடுமியான்மலை, திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் தலா 4 செமீ துறையூர், மானாமதுரை, திருப்பத்தூர், பொன்னேரி, திருப்புவனத்தில் தலா 3 செமீ சென்னை டி.ஜி.பி. அலுவலகம், செங்குன்றம், தாமரைப்பாக்கம், ராசிபுரம், மேட்டூர், கோபிசெட்டிபாளையம், மணப்பாறை, பெரம்பூர், புழல், அம்பத்தூர், ஊத்துக்கோட்டையில் தலா 2 செமீ மழை பதிவாகியுள்ளது.

    2 நாட்களுக்கு மழையை அனுபவியுங்கள்

    2 நாட்களுக்கு மழையை அனுபவியுங்கள்

    வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தில் குறிப்பாக விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, சேலம் மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கன மழையும், ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், கரூர், நாமக்கல், பெரம்பலூர், திருச்சி, கடலூர், அரியலூர் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
    நாகை, தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.

    மீனவர்கள் செல்ல வேண்டாம்

    மீனவர்கள் செல்ல வேண்டாம்

    மத்திய வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதால் இன்று வடக்கு அந்தமான் கடல் பகுதிகள், மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளுக்கும், 21, 22ஆம் தேதிகளில் தெற்கு மராட்டியம், கோவா, கர்நாடக கடலோர பகுதிகள், மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளுக்கும், 23ஆம் தேதி தெற்கு மராட்டியம், கோவா, கர்நாடகா கடல் பகுதிகளுக்கும் மீனவர்கள் செல்லவேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

    English summary
    The Indian Meteorological Department has forecast four days of thundershowers in Andhra Pradesh, Telangana and Odisha due to the recent low pressure area in the Bay of Bengal, which has already affected people in Andhra Pradesh and Telangana. A cyclonic circulation lies over central Bay of Bengal & neighbourhood and extends upto mid-tropospheric levels. Under its influence, a Low pressure area is very likely to develop over the same region during next 12 hours.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X