‘பிஏ2.75’ இந்தியாவில் பரவும் புதிய கொரோனா! இத்தனை மாநிலங்களில் பாதிப்பா? எச்சரித்த இஸ்ரேல் விஞ்ஞானி!
டெல்லி : இந்தியாவில் புதிய வகை கொரோனா வைரஸ் பாதிப்பு 10 மாநிலங்களில் பரவி இருப்பதாக இஸ்ரேலில் விஞ்ஞானி ஒருவர் கூறியுள்ள நிலையில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மத்திய அரசு முடுக்கி விட்டுள்ளது.
தென்னாப்பிரிக்காவில் முதன்முதலில் கண்டறியப்பட்ட கொரோனாவின் ஓமிக்ரான் வைரஸ், மிகவும் ஆபத்தானதாகவும், 32 வகைகளில் உருமாற்றம் அடையக் கூடியது என்றும் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்பிறகு இந்த வைரஸ் அடுத்தடுத்து பல மாறுபாடுகளை அடைந்தது.
தற்போது உலகம் முழுவதும் கொரோனாவின் மூன்றாவது அலை சரிவடைந்த நிலையில், தற்போது திடீரென நோய்த்தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அமெரிக்கா இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் மட்டுமல்லாது இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது.
இந்தியாவில் கொரோனா அதிகரித்தாலும்.. மக்களிடம் பயம் இல்லை.. 4வது அலை வரவில்லை? நிபுணர்கள் கருத்து இதோ

கொரோனா பாதிப்பு
இந்தியாவைப் பொறுத்தவரை கொரோனா பாதிப்பு ஒரு நாளைக்கு 20,000 என்ற எண்ணிக்கைக்குள்ளேயே இருந்தாலும் மாநிலங்களை பொறுத்தவரை மகாராஷ்டிரா டெல்லி கேரளா தமிழகம் என பல்வேறு மாநிலங்களில் பாதிப்பு அதிகரித்து வருகிறது கொரோனாவின் துணை மாறுபாடுகள் இந்த நோய் காரணமா என விஞ்ஞானிகள் ஒருபுறம் ஆராய்ச்சி நடத்துவரும் நிலையில் நோய் தடுப்பு நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன பல்வேறு மாநிலங்களில் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது வெளிவந்திருக்கும் தகவல் தான் மருத்துவ நிபுணர்களையும் மத்திய மாநில அரசுகளையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

BA.2.75 மாறுபாடு
BA.2.75 என்ற புதிய கொரோனா வைரஸ் மாறுபாடு குறைந்தது பத்து இந்திய மாநிலங்களில் கண்டறியப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய விஞ்ஞானி ஷே ஃப்ளீஷோன் தெரிவித்துள்ளதான் அது. அவர் வெளியிட்டுள்ள தொடர் ட்வீட்கள், மருத்துவ நிபுணர்களையும், மத்திய அரசின் அதிகாரிகளையும் திகைப்பில் ஆழ்த்தியுள்ளது. இஸ்ரேலிய விஞ்ஞானி டாக்டர் ஷே ஃப்ளீஷோன் வெளியிட்டுள்ள ட்விட்டில்," இந்தியாவில் சுமார் பத்து மாநிலங்கள் கொரோனா வைரஸின் புதிய துணை மாறுபாடான BA.2.75 கண்டறியப்பட்டுள்ளது.

10 மாநிலங்களில் பரவல்
டெல் ஹாஷோமரில் உள்ள ஷெபா மருத்துவ மையத்தில் உள்ள மத்திய வைராலஜி ஆய்வகத்துடன் இணைந்து ஆய்வு மேற்கொண்ட டாக்டர் ஷே ஃப்ளீஷோன் நீண்ட ஆய்வு மேற்கொண்டதாகவும், உலகம் முழுவதும், இதுவரை 85 வழக்குகள் கண்டறியப்பட்டுள்ளது. முக்கியமாக இந்தியாவின் 10 மாநிலங்களில் இருந்தும், 7 பிற நாடுகளில் இருந்தும் இந்த வழக்குகள் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

பாதிப்பு அதிகம்
ஜூலை 2, 2022 நிலவரப்படி, மகாராஷ்டிராவில் 27 வழக்குகள், மேற்கு வங்கத்தில் 13, டெல்லி, ஜம்மு மற்றும் உத்தரப் பிரதேசத்தில் தலா ஒன்று, ஹரியானாவில் 6, இமாச்சலப் பிரதேசத்தில் 3, 10 வழக்குகள் பதிவாகியுள்ளன என்றும், கர்நாடகாவில் ஐந்து, மத்திய பிரதேசத்தில் ஐந்து மற்றும் தெலுங்கானாவில் இரண்டு என மொத்தம் 69 வழக்குகள் BA.2.75 வைரஸ் மாறுபாட்டால் இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ளது எனக் கூறினார்.