டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கலக்கிய ராகுல்.. கலங்க வைத்த ஹதியா.. அதிர வைத்த யோகி.. 2018ன் நியூஸ்மேக்கர்ஸ் யார் தெரியுமா?

2018ம் வருடம் முழுக்க சில முக்கிய பிரபலங்கள் தேசிய அளவில் வைரலாக இருந்தனர்.

Google Oneindia Tamil News

டெல்லி: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடங்கி நித்தியானந்தா வரை 2018ம் வருடம் முழுக்க சில முக்கிய பிரபலங்கள் தேசிய அளவில் வைரலாக இருந்தனர்.

2018ம் வருடம் முடிய இன்னும் 3 நாட்களே இருக்கிறது. பல போராட்டங்கள், சந்தோசங்கள், சோகங்கள், மாற்றங்களுடன் இந்த வருடம் முடிய போகிறது.

இந்த வருடம் முழுக்க சிலர் எப்போது செய்திகளில் டாப்பில் இருந்தனர். தொடர்ந்து இவர்கள் தேசிய அளவில் செய்திகளில் வைரலாக இருந்தனர். அதில் சில முக்கிய புள்ளிகளை குறித்து இங்கு பார்க்கலாம்.

ராகுல் காந்தி

ராகுல் காந்தி

சென்ற வருடம் வரை பப்பு என்று அழைக்கப்பட்டு வந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திதான் இந்த வருடம் அரசியலின் டாப் ஹீரோ. தேசிய அரசியலில் இந்த வருடம் ராகுல் நிகழ்த்திய சாதனைகள் பல. ரபேல், விவசாயிகள் போராட்டம், எதிர்க்கட்சிகள் கூட்டணி, ஐந்து மாநில தேர்தல் என்று ராகுல் செஞ்சுரி அடிக்காத இடமே கிடையாது. சென்ற வருடம் போல் இல்லாமல் ராகுல் இந்த வருடம் நிறைய வெற்றிகளை சுவைத்துவிட்டு, செய்தி டிரெண்டில் எப்போதும் டாப்பிலேயே இருந்தார்.

மோடி ராஜா

மோடி ராஜா

எப்போதும் நான் ராஜா என்பது போல, பிரதமர் மோடி எத்தனை எதிர்ப்புகளை சந்தித்தாலும், எத்தனை விமர்சனங்களைப் பெற்றாலும் எதாவது ஒருவகையில் எப்போதும் டிரெண்டிங்கில் டாப்பிலேயே இருந்தார். முக்கியமாக சிபிஐ பிரச்சனை, ஆர்பிஐ பிரச்சனை, மான்கீ பாத் என்று வருடம் முழுக்க மோடி நியூஸ் டிரெண்டில் பீக்கிலேயே இருந்தார்.

யோகி ஆதித்யநாத்

யோகி ஆதித்யநாத்

மோடி ராகுலை போலவே உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இந்த வருடம் முழுக்க டிரெண்டிங்கில் இருந்தார். தொடர் என்கவுண்டர்கள், பசுக்களை பாதுகாக்க டசன் கணக்கில் திட்டங்கள், ராம் பெயரில் இரண்டு டசன் கணக்கில் திட்டங்கள், பல விஷயங்களுக்கு தடைகள் என்று வரிசையாக நிறைய அதிரிபுதிரி அதிர்ச்சி திட்டங்களை விதித்துக் கொண்டே சென்றார். இதன் காரணமாகவே யோகி ஆதித்யநாத் இந்த வருடம் முழுக்க நெகட்டிவ் டிரெண்டில் இருந்தார்.

வைரல் நித்தியானந்தா

வைரல் நித்தியானந்தா

அதேபோல் இந்த வருடம் யாருமே நினைக்காதபடி வைரல் டிரெண்ட் ஆனவர் நித்தியானந்தா. இவர் வெளியிட்ட நியூட்டன் விதி குறித்த வீடியோ பெரிய வைரலானது. யாருப்பா இது நியூட்டன் விதியையே முறியடிக்கிறது என்று ஆச்சர்யமாக பார்த்தவர்களுக்கு இன்னும் பல ஆச்சர்யமான வீடியோக்கள் காத்திருந்தது. வருடம் முழுக்க இவர் உடைந்த ஆங்கிலத்தில் பேசிய அசத்தல் வீடியோக்கள் பெரிய வைரல் டிரெண்டானது குறிப்பிடத்தக்கது.

கிங் கோலி

கிங் கோலி

சென்ற வருடம் போலவே இந்த வருடமும் கிங் கோலி பீக்கில்தான் இருக்கிறார். அட இந்த மனிதருக்கு பார்ம் அவுட் ஏற்படுமா படாதா என்று எல்லோரும் ஆச்சர்யப்படும் அளவிற்கும் கோலி பலரையும் ஆச்சர்யப்படுத்தி வருகிறார். இந்த வருடம் முழுக்க கோலி ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா என்று அனைத்து மண்ணிலும் கிரிக்கெட்டில் ஆடியது ருத்ர தாண்டவம் என்றுதான் சொல்ல வேண்டும்.

ஹதியா வைரல்

ஹதியா வைரல்

கேரளாவை சேர்ந்த ஷாபின் ஜஹான் என்ற இளைஞரை திருமணம் செய்து கொண்ட அகிலா என்ற பெண் தன்னுடைய பெயரை ஹதியா என்று மாற்றிக் கொண்டார். இதற்கு எதிராக புகார் அளித்த ஹதியாவின் தந்தை கோர்ட் வரை சென்றார். இந்த வருடம் முழுக்க இந்த வழக்கு ''லவ் ஜிஹாத்'' வழக்கு என்று வைரலாக இருந்தது. கடைசியில் உச்ச நீதிமன்றம் வரை போராடி தனது காதலை நிரூபித்தார் ஹதியா.

தீபக் மிஸ்ரா

தீபக் மிஸ்ரா

ஓய்வு பெற்ற முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, இந்த வருடம் முழுக்க பெரிய அளவில் வைரலாக இருந்தார். ஒருபாலின் உறவுக்கு கம்பளம் விரித்தது, திருமணத்தை மீறிய உறவு முறையில் தவறு இல்லை என்று தீர்ப்பு அளித்தது, சபரிமலைக்குள் பெண்களை செல்ல அனுமதித்தது என்று வரிசையாக இவர் கொடுத்த தீர்ப்பு ஒவ்வொன்றும் முத்து முத்து கெத்து கெத்துதான். இதன் காரணமாகவே இந்த வருடம் முழுக்க தீபக் மிஸ்ரா லைம் லைட்டிலேயே இருந்தார்.

உர்ஜித் பட்டேல்

உர்ஜித் பட்டேல்

அதேபோல் முன்னாள் ஆர்பிஐ கவர்னர் உர்ஜித் பட்டேல் இந்த வருடம் முழுக்க செய்திகளில் பேசப்பட்டு வந்தார். மத்திய அரசுடன் ஏற்பட்ட மோதல், தொடர்ந்து குறைந்த பண மதிப்பு என்று இவர் பல சர்ச்சைகளுக்கு உள்ளானார். அதேபோல் கடைசியில் பாதியில் இவர் ராஜினாமா செய்ததும் பெரிய சர்ச்சையானது.

இன்னும் சிலர்

இன்னும் சிலர்

இவர்கள் இல்லாமல் மாயாவதி, மீ டூ புகாரில் சிக்கிய முன்னாள் பாஜக அமைச்சர் எம்.ஜே அக்பர், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நவ்ஜோத் சிங் சித்து ஆகியோர் எப்போது தேசிய அளவில் டாப்பிலேயே இருந்தனர். அதேபோல் கர்நாடக மாநில நீர்வளத்துறை அமைச்சர் டி.கே சிவக்குமார் கர்நாடக தேர்தலின் போது தேசிய அளவில் வைரலாக பேசப்பட்டார்.

English summary
NewsMakers of 2018: From Congress leader Rahul to Scientific Swamiji Nithyananda, Who made this year a viral.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X