டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அயோத்தி முடிந்தது.. உச்ச நீதிமன்றத்தில் அடுத்த வாரம் இன்னும் 4 முக்கிய தீர்ப்புகள்

Google Oneindia Tamil News

டெல்லி: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அடுத்த வாரம் 17ம் தேதி ஓய்வுபெற உள்ள நிலையில் அதற்குள் இன்னும் 4 முக்கிய முக்கிய வழக்குகளை தீர்ப்பு வழங்க உள்ளார்.

அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் மர்வு நேற்று தீர்ப்பு வழங்கியது.

இந்நிலையில் நான்கு முக்கிய வழக்குகளில் 17ம் தேதிக்கு முன்பாக தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தீர்ப்பு வழங்க உள்ளார். அவற்றின் விவரத்தை இப்போது பார்க்கலாம்.

பாஜகவுடன் மல்லுக்கட்டு... உத்தவ் தாக்கரே உக்கிரமானதுக்கு முக்கிய காரணகர்த்தாக்கள் இவுகதானாம்பாஜகவுடன் மல்லுக்கட்டு... உத்தவ் தாக்கரே உக்கிரமானதுக்கு முக்கிய காரணகர்த்தாக்கள் இவுகதானாம்

பிரதமர் மோடி அரசு

பிரதமர் மோடி அரசு

ரபேல் விமானம் கொள்முதலில் மோடி அரசு எந்த தவறும் செய்யவில்லை என உச்ச நீதிமன்றம் கடந்தாண்டு 14ம் தேதி தீர்ப்பளித்து இருந்து. இந்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீது வரும் வாரத்தில் தலைமை நீதிபதி தீர்ப்பு வழங்க உள்ளார்.

கிரிமினல் வழக்கு

கிரிமினல் வழக்கு

இதேபோல் ரபேல் வழக்கில் பிரதமர் மோடியை திருடன் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறியதற்காக அவர் மீது கிரிமினல் கண்டன நடவடிக்கை எடுக்கக் கோரி வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.

பெண்களை அனுமதிப்பது

பெண்களை அனுமதிப்பது

சபரிமலை கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக் கோரி தாக்கல் செய்த மனுக்கள் மீதான தீர்ப்பும் இந்த வாரமே வழங்கப்பட உள்ளது.

உச்ச நீதிமன்றம்

உச்ச நீதிமன்றம்

உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அலுவலகமும் தகவல் அறியும் உரிமை சட்ட வரம்புக்குள் வருவதாக டெல்லி உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்ற செயலாளர் ஜெனரல், தகவல் தொடர்பு அதிகாரி ஆகியோர் தாக்கல் செய்த மேல்முறையீடு மனுக்கள் மீது தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு இந்த வாரத்தில் தீர்ப்பளிக்க உள்ளது.

English summary
Next week 4 important verdicts in the Supreme Court include rafale deal, sabarimala, rahul gandhi
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X