டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வந்தாச்சுல்ல வசூலுக்கு.. ஏப்ரல் 20 முதல் டோல்கேட்களில் மீண்டும் சுங்க கட்டணம்: நெடுஞ்சாலை ஆணையம்

Google Oneindia Tamil News

டெல்லி: அரசு நாடு தழுவிய லாக்டவுனை மே 3 வரை நீட்டித்திருக்கலாம், ஆனால் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) ஏப்ரல் 20 முதல் கட்டண வசூலைத் தொடங்க திட்டமிட்டுள்ளது.

"பயனர் கட்டண வசூல் அரசின் கருவூலத்திற்கு செல்கிறது, NHAIக்கு நிதி பலத்தையும் வழங்குகிறது" என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

NHAI may resume toll collection from April 20 amid lockdown extension

மார்ச் 24 ஆம் தேதி 21 நாள் நாடு தழுவிய லாக்டவுன் அறிவிக்கப்பட்ட பின்னர் சாலை போக்குவரத்து அமைச்சகம் மற்றும் என்ஹெச்ஏஐ அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளிலும் கட்டண வசூலை நிறுத்தி வைத்தன.

சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் 11,616 செயலில் உள்ள கொரோனா வைரஸ் வழக்குகளையும், 452 இறப்புகளையும், 1,766 மீட்டெடுப்புகளையும் வெள்ளிக்கிழமை மாலை நிலவரப்படி தெரிவித்துள்ளது.

டோல் வசூல் பணியில் ஈடுபடும் ஊழியர்கள் அமைப்பை சேர்ந்த ஒருவர் இதுபற்றி கூறுகையில், தொற்றுநோய் இன்னும் கட்டுப்படுத்தப்படவில்லை. எனவே, டோல் பூத் நடவடிக்கைகள் அச்சுறுத்தல் மற்றும் ஆபத்தானது என்றார்.

அமெரிக்காவில் 7.9 லட்சம் பேருக்கு கொரோனா.. உலக அளவிலான பாதிப்பு 22,29,701ஆக உயர்வு அமெரிக்காவில் 7.9 லட்சம் பேருக்கு கொரோனா.. உலக அளவிலான பாதிப்பு 22,29,701ஆக உயர்வு

"கொரோனா வைரஸ் தொற்றுநோய் பாதிக்கப்பட்டவர்களை பரிசோதனை செய்யும் எந்தவொரு வசதியும், நெடுஞ்சாலை பயணத்தில் இல்லை. லாக்டவுன் ஏப்ரல் 20ம் தேதிக்கு பிறகு தளர்த்தப்பட்ட பிறகு, வெவ்வேறு இடங்களில் சிக்கித் தவிக்கும் மக்கள், தங்கள் சொந்த மாநிலங்களுக்கு அதிக எண்ணிக்கையில் திரும்பிச் செல்ல முயற்சிப்பார்கள். இதனால், நெடுஞ்சாலை சுங்க கட்டண வசூலிப்பாளர்களுக்கு, கொரோனா பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது" என்று அந்த ஊழியர் அமைப்பைச் சேர்ந்தவர் எச்சரித்துள்ளார்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் கடன் ஏழு மடங்கு அதிகரித்ததால் NHAI ஏற்கனவே பெரும் நிதி அழுத்தத்தில் உள்ளது. 40 நாள் லாக்டவுன் காலத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கவரி வசூல் நிறுத்தப்பட்டதால் என்ஹெச்ஏஐ ரூ .1,822 கோடி வருவாய் இழப்பை சந்திக்க நேரிடும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

அதேநேரம், தற்போது அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச் செல்லும், வாகனங்கள் டோல்கேட் கட்டணம் செலுத்தாமல், செல்வதால், விலைவாசி சற்று கட்டுக்குள் இருக்கிறது. டோல்கேட் கட்டணம் வசூலிக்க ஆரம்பித்தால், காய்கறி, பழங்கள் உள்ளிட்டவற்றின் விலை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதை மறுக்க முடியாது.

English summary
The government may have extended the nationwide lockdown till May 3, but the National Highways Authority of India (NHAI), struggling with poor financial health, is planning to start toll collection from April 20.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X