டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

2018-19 ல் ரொம்ப அதிகம்... சிறுபான்மையினர், எஸ்.சி.க்களுக்கு எதிரான தாக்குதல்.. ஷாக் ரிப்போர்ட்

Google Oneindia Tamil News

டெல்லி: சிறுபான்மையினர் மற்றும் பட்டியலிடப்பட்ட சாதியினருக்கு எதிரான பாகுபாடு, தாக்குதல் வழக்குகளின் எண்ணிக்கையை, மாநில வாரியாக, மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

தேசிய மனித உரிமை ஆணையம் (என்.எச்.ஆர்.சி) கடந்த மூன்றரை ஆண்டுகளாக, பதிவு செய்துள்ள வழக்குகளில், வடகிழக்கு மாநிலங்களில் தான், மிகக் குறைவான எண்ணிக்கையில் வழக்குகள் பதிவாகி இருக்கிறது.

NHRC Register case: Discrimination against minorities and scheduled castes

மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவல் படி, சிறுபான்மையினருக்கு எதிரான துன்புறுத்தல் தொடர்பாக, 79 வழக்குகளையும், பட்டியல் சாதியினருக்கு (எஸ்.சி) எதிரான பாகுபாடு தொடர்பாக 672 வழக்குகளையும் என்.எச்.ஆர்.சி பதிவு செய்துள்ளது.

முந்தைய, 2017-18 ஆம் ஆண்டில் மொத்த வழக்குகள் 464 ஆக இருந்தது. இது 2016-17 ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட 505 வழக்குகளில் இருந்து சற்று குறைவு. இந்தநிலையில், இந்தியாவின் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான உத்தரபிரதேசத்தில், கடந்த மூன்று ஆண்டுகளில், அதிகப்படியான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2018-19 ஆம் ஆண்டில் மட்டும், உத்தரபிரதேசத்தில் கிட்டத்தட்ட பாதி (311) வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

திமுக என்ன சாதிக்கும்? என கேட்டோருக்கு வாய்ப்பூட்டுதான் 'தபால்துறை தேர்வு ரத்து' - ஸ்டாலின் திமுக என்ன சாதிக்கும்? என கேட்டோருக்கு வாய்ப்பூட்டுதான் 'தபால்துறை தேர்வு ரத்து' - ஸ்டாலின்

அதில், எஸ்.சி.க்களுக்கு எதிரான 99 துன்புறுத்தல் வழக்குகள் ஏப்ரல் 1 முதல் ஜூன் 15 வரை பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் 5 வழக்குகள் சிறுபான்மையினருக்கு எதிரான குற்றமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கைச் சேர்ந்த எம்.பி கே.நவாஸ்கனி எழுப்பிய கேள்விக்கு, மக்களவையில், இந்த தகவல் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

English summary
Discrimination against minorities and scheduled castes, Home Ministry Report released
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X