டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

புல்வாமாவில் மனிதவெடிகுண்டு தாக்குதல் நடத்திய தீவிரவாதிக்கு அடைக்கலம் தந்த தந்தை- மகள் கைது

Google Oneindia Tamil News

ஶ்ரீநகர்: நாட்டை உலுக்கிய புல்வாமா தாக்குதல் சம்பவத்தில் மனித வெடிகுண்டாக செயல்பட்ட தீவிரவாதிக்கு அடைக்கலம் கொடுத்ததாக காஷ்மீரில் தந்தை மற்றும் மகள் ஆகியோரை தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

2019-ம் ஆண்டு பிப்ரவரி 14-ந் தேதி புல்வாமாவில் மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படையினர் வென்ற வாகனம் மீது மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 40 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.

NIA arrests father-daughter duo in Pulwama attack

தேசத்தையே உலுக்கியது இந்த கொடூர தாக்குதல். புல்வாமாவில் மனித வெடிகுண்டா செயல்பட்டு தாக்குதல் நடத்தியது அடில் அகமது தார் என்ற தீவிரவாதி என அடையாளம் காணப்பட்டது.

இந்த நிலையில் தீவிரவாதி அடில் அகமது தாருக்கு அடைக்கலம் கொடுத்ததாக கடந்த வாரம் ஷாகீர் மாக்ரே என்ற 22 வயது இளைஞரை தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகள் கைது செய்தனர். புல்வாமா பகுதியில் மர பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனத்தை நடத்தி வந்த ஷாகீர், தீவிரவாதி அகமது தாருக்கு பல வகைகளில் உதவி செய்ததும் தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகளின் விசாரணையில் தெரியவந்தது.

மேலும், 2018-ல் ஜெய்ஷ் இ முகமது அமைப்பு தீவிரவாதி முகமது உமர் பரூக் மூலம் அடில் அகமது தார், ஷாகீருக்கு அறிமுகமானார் என்ற தகவலும் கிடைத்தது. ஷாகீர்தான் ராணுவத்தினர் நடமாட்டம் குறித்த தகவலை மனித வெடிகுண்டு தீவிரவா அகமது தாருக்கு கூறியதும் கண்டுபிடிக்கப்பட்டது.

Recommended Video

    புல்வாமா தாக்குதல்... இன்னமும் விடை தெரியலையே..

    இந்நிலையில் பயங்கரவாதி அகமது தாருக்கு அடைக்கலம் கொடுத்ததாக தந்தை மற்றும் மகள் இருவரை இன்று தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இருவரிடமும் தொடர்ந்து விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

    English summary
    The National Investigation Agency has arrested a Pulwama resident and his daughter for allegedly harbouring the Jaish suicide bomber.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X