டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சிரியாவில் ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் லிங்க்... தமிழ்நாடு பெங்களூருவில் இருவர் கைது!!

Google Oneindia Tamil News

டெல்லி: சிரியாவில் ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் இணைந்து பணியாற்றுவதற்காக ஆட்களை தேர்வு செய்ததாகவும், அவர்களுக்கு பயண செலவை ஏற்றுக் கொண்ட வகையிலும் தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவைச் சேர்ந்த இருவரை தேசிய புலனாய்வு முகமை கைது செய்துள்ளது.

தமிழநாட்டில் ராமநாதபுரத்தைச் சேர்ந்த 40 வயது அஹமத் அப்துல் காதர், பெங்களூரைச் சேர்ந்த 33 வயது இர்பான் நசிர் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணையின்போது இவர்களது பெயர் அடிபட்டதால் இவர்கள் இருவரையும் கைது செய்து இருப்பதாக அந்த முகமை தெரிவித்துள்ளது. சென்னையில் வர்த்த ஆய்வாளராக ராமநாதபுரத்தைச் சேர்ந்த காதரும், அரிசி வியாபாரியாக பெங்களூருவில் இர்பானும் பணியாற்றி வருவதாக என்ஐஏ தெரிவித்துள்ளது.

NIA arrests two from Chennai and Bengaluru for recruits ISIS in Syria

இவர்கள் மீதான விசாரணையில் கடந்த செப்டம்பர் 19ஆம் தேதி பெங்களூரு-ஐஎஸ்ஐஎஸ் மாடல் என்ற பெயரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் தடை செய்யப்பட்டு இருக்கும் ஐஎஸ்ஐஎஸ்/ஐஎஸ்ஐஎல் ஆகிய அமைப்புகளுடன் தொடர்பில் இருந்ததாலும், சதி செயல்களில் ஈடுபட்டதாகவும், பெங்களூரு இளைஞர்களை ஐஎஸ்ஐஎஸ்ஸில் சேருவதற்கு கட்டாயப்படுத்தியதாலும் இவர்கள் கைது செய்யப்பட்டு இருப்பதாக என்ஐஏ தெரிவித்துள்ளது.

லிபியாவில் 7 இந்தியர்கள் கடத்தல்... அந்த நாட்டு அரசுடன் இந்தியா பேச்சவார்த்தை!லிபியாவில் 7 இந்தியர்கள் கடத்தல்... அந்த நாட்டு அரசுடன் இந்தியா பேச்சவார்த்தை!

கடந்த மார்ச், 2020ல் ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த ஹினா பெக் மற்றும் ஜஹன்சாயிப் சமி இருவரிடம் விசாரணை மேற்கொண்டு இருந்தபோது இவர்களது பெயரும் வெளியே வந்துள்ளது. டெல்லியில் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடந்து வந்தபோது இவர்கள் இருவரையும் ஐஎஸ் தீவிரவாதிகளுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் டெல்லி போலீஸ் கைது செய்துள்ளது. பின்னர் இவர்களது பாதுகாப்பை தேசிய புலானாய்வு முகமை எடுத்துக் கொண்டு விசாரணை மேற்கொண்டு இருந்தது.

English summary
NIA arrests two from Chennai and Bengaluru for recruits ISIS in Syria
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X