டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

முக்கிய தகவல் பெற முன்னாள் டிஎஸ்பி தேவேந்திர சிங்கை பயன்படுத்திய பாக்.. என்ஐஏ குற்றப்பத்திரிக்கை

Google Oneindia Tamil News

டெல்லி: ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் கைதான முன்னாள் டிஎஸ்பி தேவேந்திர் சிங் உள்பட 6 பேர் மீது தேசிய புலனாய்வு துறை (என்ஐஏ) ஊபா சட்டத்தின் கீழ் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.

பாகிஸ்தான் மண்ணில் இருந்து இயங்கி வரும் தீவிரவாத அமைப்ன ஹிஸ்புல்-முஜாஹிதீன் மற்றும் பாகிஸ்தான் அரசு அமைப்புகளுடன் இணைந்து தீவிரவாத செயல்களை செய்து வருகிறது.

இந்த அமைப்பிற்கு உதவியாக ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த டிஎஸ்பி தேவேந்திர் சிங் காஷ்மீரின் குல்கம் (Kulgam) மாவட்டத்தின் வான்போ (Wanpoh) பகுதிக்கு அருகிலுள்ள தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சோதனைச் சாவடியில் ஜனவரி மாதம் கைது செய்யப்பட்டார்.

புது சட்டத்தால் மாறிய தலைவிதி.. குவைத்தை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் 8 லட்சம் இந்தியர்கள்புது சட்டத்தால் மாறிய தலைவிதி.. குவைத்தை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் 8 லட்சம் இந்தியர்கள்

தீவிரவாதிகள் கைது

தீவிரவாதிகள் கைது

அவருடன் ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாதி நவேத் முஷ்டாக் என்ற நவேத் பாபு மற்றும் ரஃபி அகமது ஆகியோரும் பிடிபட்டனர். இதையடுத்து டிஎஸ்பி தேவேந்திர் சிங் சஸ்பெண்ட் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையே இந்த தீவிரவாதிகளுக்கு நிதியுதவி அளித்தாக தன்வீர் அஹமத் வாணி என்ற தீவிரவாதியும் கைது செய்யப்பட்டார். அத்துடன் இர்பான் ஷாஃபி மிர், சையத் இஃப்ரான் அகமது ஆகியோரும் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர்.

பாகிஸ்தான் அதிகாரிகள்

பாகிஸ்தான் அதிகாரிகள்

முன்னாள் டிஎஸ்பி தேவேந்திர் சிங்கிற்கு டில்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் உள்ள சில அதிகாரிகளுடன் சமூக ஊடகங்கள் மூலம் தொடர்பு இருந்ததாக விசாரணைக்கு பின் என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் தேவேந்திர் சிங் பாகிஸ்தான் அதிகாரிகள் மூலம் தீவிரவாதிகளுக்கு பண உதவி செய்ய உதவியதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

ஆயுத தடுப்பு சட்டம்

ஆயுத தடுப்பு சட்டம்

இந்நிலையில் முன்னாள் டிஎஸ்பி தேவேந்திர் சிங் உள்பட 6 பேர் மிது ஊபா சட்டத்தின் கீழ் என்ஐஏ வேழக்கு பதிவு செய்துள்ளது. இந்திய குற்றவியல் சட்டம் IPC மற்றும் 1967 ஆம் ஆண்டின் சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்பு UA (P) சட்டத்தின் கீழ் மற்றும் ஆயுத சட்டத்தின் கீழும், வெடிமருந்துகள் தடுப்பு சட்டத்தின் கீழும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படுள்ளது.

எல்லை தாண்டிய தீவிரவாதம்

எல்லை தாண்டிய தீவிரவாதம்

எல்லையைத் தாண்டி ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை கடத்துவதற்கு தேவேந்திர சிங் மற்றும் அவரது கூட்டாளிகள் உதவியதாகவும் இந்த ஆயுதங்கள் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்டதாகவும் குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது. முன்னாள் டிஎஸ்பி தேவேந்திர சிங்கை முக்கிய தகவல்களை பெற பாகிஸ்தான் அதிகாரிகள் பயன்படுத்தி உள்ளதாகவும் என்ஐஏ தெரிவித்துள்ளது.

English summary
The National Investigation Agency filed a chargesheet against six people, including suspended Deputy Superintendent of Jammu and Kashmir Police Davender Singh or alleged terror activities in the country.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X