• search
டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

துப்பாக்கி முனையில் 7 லட்சம் கொள்ளை.. பலாத்காரம் செய்துடுவாங்களோனு அச்சம்.. அலமாரியில் ஒளிந்த நடிகை!

Google Oneindia Tamil News

டெல்லி: பிரபல இந்தி நடிகை நிகிதா ராவலிடம் துப்பாக்கி முனையில் ரூ 7 லட்சம் மதிப்பிலான நகைகள், பணத்தை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையைச் சேர்ந்தவர் நிகிதா ராவல். இவர் நடன கலைஞர், நடிகை, தயாரிப்பாளர் என்ற பன்முகங்களை கொண்டவர். அது போல் பாலிவுட் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைப்பதிலும் இவர் வல்லவர்.

இவர் அனில் கபூருடன் இணைந்து பிளாக் அண்ட் ஒயிட் எனும் படத்தில் நடித்துள்ளார். மிஸ்டர் ஹாட் மிஸ்டர் கூல், தி ஹீரோ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் தென்னிந்திய நடிகையாவார். தெலுங்கில் கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் நடித்த இவர் இதுவரை 8 விருதுகளை பெற்றுள்ளார்.

வருமானத்திற்கு அதிகமாக 654% சொத்து.. விஜிலன்ஸிடம் சிக்கிய மாஜி கே.சி.வீரமணி.. எப்ஐஆர் சொல்வது என்ன?வருமானத்திற்கு அதிகமாக 654% சொத்து.. விஜிலன்ஸிடம் சிக்கிய மாஜி கே.சி.வீரமணி.. எப்ஐஆர் சொல்வது என்ன?

டெல்லியில் அத்தை வீடு

டெல்லியில் அத்தை வீடு

இவரது அத்தைக்கு சொந்தமான வீடு டெல்லியில் சாஸ்திரி நகரில் உள்ளது. படப்பிடிப்பை முடித்துவிட்டு இங்கு தங்கினார் நிகிதா. அப்போது அங்கு முகமூடி அணிந்த கொள்ளையர்கள் அவரிடம் துப்பாக்கியை காட்டி 7 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.

4 பேர் கொண்ட கும்பல்

4 பேர் கொண்ட கும்பல்

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில் என்னால் இந்த சம்பவத்தை நம்பவே முடியவில்லை. நான் உயிருடன் இருக்கிறேனா என்பதையும் என்னால் நம்ப முடியவில்லை. நான் ஷீட்டிங் முடித்துவிட்டு அத்தையின் வீட்டுக்கு சென்றேன். அப்போது ஒரு காரில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் எனது வாகனத்தை நிறுத்தினர்.

துப்பாக்கியை காட்டி மிரட்டிய

துப்பாக்கியை காட்டி மிரட்டிய

துப்பாக்கியை காட்டி மிரட்டிய அந்த கும்பல் என்னிடம் இருந்த பொருட்கள், பணம், நகை ஆகியவற்றை கேட்டனர். அப்போது எனது வீட்டில் அத்தை இல்லை. உடனே என்னிடம் இருந்தவற்றை கொடுத்துவிட்டு வீட்டுக்குள் ஓடி சென்று என்னை காப்பாற்றிக் கொள்ள ஒரு கப்போர்டில் ஒளிந்து கொண்டேன்.

பலாத்காரம் அச்சம்

பலாத்காரம் அச்சம்

என்னை கொன்றுவிடுவார்களோ, இல்லை என்னை பலாத்காரம் செய்து விடுவார்களோ என அச்சமடைந்தேன். 10 நிமிடங்கள் என்ன நடந்தது என்பதை என்னால் வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை. இந்த வீட்டில் தனியாக இருப்பது அத்தனை பாதுகாப்பு இல்லை என்பதை உணர்ந்த நான் அடுத்த நாளே மும்பைக்கு சென்றுவிட்டேன்.

7 லட்சம்

7 லட்சம்

என்னிடம் இருந்த மோதிரங்கள், வாட்ச், காதணி, வைர நகை, பணம், ஒரு நிகழ்ச்சிக்காக கொடுக்கப்பட்ட முன்பணம் உள்பட ரூ 7 லட்சம் மதிப்பிலான பொருட்களை பறித்துக் கொண்டு சென்றனர் என்றார். மேலும் இது குறித்து யாரிடமாவது பேசுவதற்கே அச்சமாக இருப்பதாகவும் போலீஸில் புகார் தெரிவித்துள்ளாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ராஜ் குந்த்ரா விவகாரத்தில் நிகிதா பேட்டி

ராஜ் குந்த்ரா விவகாரத்தில் நிகிதா பேட்டி

பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா கைது செய்யப்பட்டதற்கு பின்னர் இந்த கொள்ளை சம்பவத்தில் நிகிதா டாக் ஆஃப் தி டவுன் ஆகிவிட்டார். ராஜ் குந்த்ரா விவகாரத்தில் இவர் கூறுகையில் வேண்டுமென்றே இந்த வழக்கில் என்னை ஷில்பா ஷெட்டி இழுத்துள்ளார். என் மீது தவறே இல்லை. நான் ராஜ் குந்த்ராவை 3 அல்லது 4 முறைதான் பார்த்திருப்பேன். ஆனால் அவரது ஆபாச வீடியோ குறித்த புகாரை கண்டு அதிர்ச்சி அடைந்தேன் என நிகிதா தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

English summary
Actress Nikita Rawal was robbed at gun point of Rs 7 lakh in her aunt's residence, Delhi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X