டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அடுத்த அதிரடி.. வைர வியாபாரி நீரவ் மோடியின் ரூ.330 கோடி சொத்துக்கள் பறிமுதல்.. அமலாக்கதுறை நடவடிக்கை

நீரவ் மோடியின் 329 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது

Google Oneindia Tamil News

டெல்லி: சூப்பர்.. பேங்கில் மோசடி செய்துவிட்டு, வெளிநாடு தப்பியோடிய, வைர வியாபாரி நிரவ் மோடிக்கு சொந்தமான, ரூ.330 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை அலேக்காக பறிமுதல் செய்துள்ளது.. தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகள் சட்டத்தின் கீழ், அமலாக்கத்துறை இந்த அதிரடியில் இறங்கியது.

மும்பையை சேர்ந்த வைர வியாபாரி நிரவ் மோடி... இவரும், இவரது மாமா மெஹுல் சோக்சியும் சேர்ந்து பஞ்சாப் நேஷனல் பேங்கில் 14 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கினர்.

ஆனால் அந்த கடனை திருப்பி செலுத்தவே இல்லை.. அத்துடன் வெளிநாட்டிற்கும் தப்பி ஓடிவிட்டனர். நீரவ் மோடிக்கு 48 வயசாகிறது.. மாமாவுக்கு 60 வயசாகிறது!!

தங்க கடத்தல்: சிபிஐ விசாரணை கேட்கும் எதிர்கட்சிகள் - சந்திக்க தயாரான பினராயி விஜயன்தங்க கடத்தல்: சிபிஐ விசாரணை கேட்கும் எதிர்கட்சிகள் - சந்திக்க தயாரான பினராயி விஜயன்

லண்டன்

லண்டன்

ஒரு வருஷத்துக்கு மேலாக போலீசுக்கு தண்ணி காட்டி வந்த நிலையில், கடந்த வருடம் மார்ச் மாசம் பிடிபட்டார்.. தலைமறைவாக லண்டனில் இருந்தார்... இதையடுத்து அவரை கைது செய்த பிரிட்டன் போலீசார், அங்கிரும் ஜெயிலில் அடைத்துள்ளனர். மாமா மெஹுல் சோக்ஸி, ஆன்டிகுவாவில் வசித்து வருகிறார், அதன் குடியுரிமையையும் பெற்றுள்ளார். நாடு திரும்பாததற்கு, தொற்று காரணத்தை சொல்லி வருகிறார்.

தப்பி ஓடினார்

தப்பி ஓடினார்

இதனிடையே, அவரை நாடு கடத்தும் முயற்சியில் இந்திய அரசு ஈடுபட்டதாக கூறப்பட்டது.. இது சம்பந்தமான வழக்கும் லண்டனில் உள்ள, வெஸ்ட்மின்ஸ்டர் கோர்ட்டில் நடந்து வருகிறது... கடந்த டிசம்பர் 5-ம் தேதி முதல், நிரவ் மோடியை தப்பியோடிய பொருளாதார குற்றவாளியாக மும்பை சிறப்பு கோர்ட்டும் அறிவித்தது.

முடக்கம்

முடக்கம்

இந்த சமயத்தில்தான், அதாவது கடந்த ஜுன் 8 ம் தேதி நிரவ் மோடியின் சொத்துக்களை ஒரு மாதத்திற்குள் பறிமுதல் செய்ய வேண்டும் மும்பை ஸ்பெஷல் கோர்ட் அனுமதி தந்திருந்தது.. அதனடிப்படையில் நடவடிக்கையும் துரிதமானது.. எங்கெல்லாம் நீரவ் மோடி சொத்து உள்ளதோ அவைகள் முடக்கப்பட்டுள்ளன.

அறிக்கை

அறிக்கை

குறிப்பாக, மும்பை வோர்லியில் இருக்கும் சமுத் மஹால், பீச்சில் உள்ள பண்ணை வீடு, அலிபாக்கில் உள்ள நிலம், ராஜஸ்தான் ஜெய்சால்மேரில் உள்ள காற்றாலை, லண்டனில் இருக்கும் பிளாட்டுகள், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருக்கும் அப்பார்ட்மென்டுகள், ஷேர்கள், பேங்க் பேலன்ஸ் என மொத்தத்தையும் பறிமுதல் செய்துள்ளது அமலாக்கத்துறை.. இதன் மதிப்பு 330 கோடி ரூபாய் ஆகும்.. இது சம்பந்தமான அறிக்கையையில் அந்த விவரங்களையும் வெளியிட்டுள்ளது.

பறிமுதல்

பறிமுதல்

கடந்த மாதம் ஹாங்காங்கில் இருந்தும் இவரது சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.. ரூ. 1,350 கோடி மதிப்பிலான வைரங்கள், முத்துக்கள், வெள்ளி உள்ளிட்ட விலையுயர்ந்த பொருட்கள் 108 சரக்கு பெட்டகங்களில் மும்பை கொண்டுவரப்பட்டன... அதாவது பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ், நிரவ் மோடிக்கு சொந்தமான ரூ.2,348 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்திருந்தது. மீதமுள்ள இணைக்கப்பட்ட சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கான அடுத்தக்கட்ட நடவடிக்கைகளும் நடந்து வருகின்றன!

English summary
Nirav Modi’s assets worth Rs 329 cr seized by ED under fugitive law
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X