• search
டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

நெருங்கும் தூக்கு.. பதைபதைப்பில் நிர்பயா குற்றவாளிகள்.. திகார் ஜெயிலில் நடக்கப் போகும் ரிகர்சல்!

|
  நிர்பயா வழக்கில் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனையை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்- வீடியோ

  டெல்லி: "உங்க கடைசி ஆசை என்ன" என்று கேட்கும் நேரம் நெருங்கி கொண்டிருக்கிறது.. தூக்கு மேடை தயாராகிவிட்டது.. கயிறும் ரெடியாக உள்ளது.. ஹேங்மேனும் "ஐ ஆம் ரெடி" என்று சொல்லிவிட்டார்.. நிர்பயா வழக்கில் தூக்கில் தொங்க போகும் 4 குற்றவாளிகளும் பேந்த பேந்த ஜெயிலுக்குள் விழித்து கொண்டிருக்கிறார்களாம்.

  2012-ல் டெல்லியில் ஓடும் பஸ்ஸில் 23 வயது மருத்துவ மாணவி நிர்பயாவை 6 பேர் கும்பல் கூட்டாக நாசம் செய்து.. அதே பஸ்ஸில் இருந்து தூக்கி வெளியே வீசியது. டெல்லியில் நடந்த இந்த கூட்டு பாலியல் பலாத்கார சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது தொடர்பாக, அக்ஷய் சிங் தாக்கூர், முகேஷ் சிங், பவன் குப்தா, வினய் சர்மா ஆகிய 4 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.

  கீழமை கோர்ட் முதல் சுப்ரீம் கோர்ட் வரை இவர்களுக்கு மரண தண்டனையை உறுதி செய்தது. எப்போது வேண்டுமானாலும் தண்டனை விவரம் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நேற்று டெல்லி கோர்ட் தூக்கு தண்டனையை வழங்கி உத்தரவிட்டது.

  கருப்பு துணிகள்

  கருப்பு துணிகள்

  இதையடுத்து, எப்படி தூக்கில் போடுவது என்ற ரிகர்சலுக்கான ஆலோசனை நேற்று திகார் ஜெயிலில் நடந்துள்ளது.. இப்போதைக்கு தூக்கில் தொங்க விடுவதற்கான இடம் தயாராகி விட்டது. அதுவும் சுத்தம் செய்து வைத்துள்ளனர்.. 4 பேருக்கும் கயிறு, முகத்தில் மூட கருப்பு துணிகளும் வாங்கப்பட்டு விட்டன. இதையடுத்து எப்படி தண்டனையை நிறைவேற்றலாம் என்ற ஆலோசனை நடந்தது.. இதில் திகார் ஜெயில் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.. தூக்கில் தொங்க இன்னும் 2 வாரங்களே உள்ளதால், தூக்கில் இடுவதற்கான ரிகர்சல் நடக்க உள்ளது.

  தூக்கு மேடை

  தூக்கு மேடை

  அதாவது, சம்பந்தப்பட்ட இந்த 4 குற்றவாளிகளின் உடல் எடைக்கு ஏற்ப 60 கிலோ பொம்மைகள் தயார் செய்யப்படும்.. இந்த பொம்மைகளை வைத்துதான் ஒத்திகை நடக்கும்.. அப்படி நடக்கும்போது கயிறு வலுவாக இருக்கிறதா.. தூக்கு மேடை சரியாக இருக்கிறதா என்ற ஆய்வு செய்யப்படும். இப்படித்தான் ரிகர்சல் பார்ப்பார்கள்.

  தனித்தனி ரூம்

  தனித்தனி ரூம்

  அந்த 4 குற்றவாளிகளும் டெல்லி திகார் ஜெயிலில் தனித்தனி ரூமில் அடைக்கப்பட்டு இருக்கிறார்களாம்.. தினமும் 2 வேளை மெடிக்கல் செக்கப் அவர்களுக்கு நடக்கிறது.. சாப்பாடும் தனித்தனியாகத்தான் போகிறது.. யார்கூடவும் இவர்கள் பேசக்கூடாது என்று உத்தரவு போடப்பட்டுள்ளது.. வீட்டில் இருந்து சொந்தக்காரர்கள் மட்டும் வரலாம்.. அதுகூட வாரத்துக்கு 2 தடவை மட்டுமே.

  கேமிரா

  கேமிரா

  வழக்கமாக கைதிகளை பார்க்க குறிப்பிட்ட நேரம் இருக்கும்.. ஆனால் 4 பேரும் தூக்கில் போடப்போவதால் உறவினர்களுக்கு கொஞ்சம் எக்ஸ்ட்ரா டைம் தந்துள்ளார்கள். இவர்களை கண்காணிக்க ஒரு குழு அங்கேயே உள்ளது. சிசிடிவி கேமிராக்களும் பொருத்தப்பட்டுள்ளது.

  ஆய்வு பணி

  ஆய்வு பணி

  இவர்களுக்கு படிக்க ஆன்மீக புத்தகங்கள் தரப்பட்டுள்ளதாம்.. இதைதவிர பத்திரிகைகள், புத்தகங்களும் தரப்படுகின்றன. வரும் 21-ந்தேதி மாலை இறுதி கட்ட ஆய்வு பணி நடந்தபிறகு அது சம்பந்தமான சான்றிதழ்கள் தருவார்கள். இதற்கு பிறகு அதாவது மறுநாள் காலை சரியாக 7 மணிக்கு தூக்கிலிடப்படுவார்கள்.. அன்றைய தினம் இவர்களுக்கு புது டிரஸ் தருவார்கள்.. ஸ்பெஷல் சாப்பாடும் தரப்படும்.

  கால்கள்

  கால்கள்

  பொதுவாக தூக்கிலிடப்படும் குற்றவாளிகளை தனித்தனியாகத்தான் கண்களை துணியால் மூடி அழைத்து வருவார்கள்.. கைகள் பின்பக்கமாக கட்டப்பட்டு தூக்கு மேடையில் நிறுத்தி வைப்பார்கள்.. அப்போது கால்களும் கட்டப்படும்.. தலையும் மூடப்படும்.. இறுதியாக கழுத்தில் இறுக்கமாக சுருக்கு கயிறு மாட்டப்படும்.. ஜெயில் சூப்பிரண்டு உத்தரவிட்டதும் அடுத்தடுத்து தூக்கிலிடப்படுவார்கள். சரியாக 7 மணிக்கு 4 பேரையும் தூக்கில் போடுவார்கள்.

  8 கயிறுகள்

  8 கயிறுகள்

  வெறும் அரை மணி நேரத்தில் 4 பேரையும் தூக்கில் போடும் பணி முடிவடையும் என்கிறார்கள். தனித்தனியாகதான் தொங்க விடுவார்களாம்.. ஒருவேளை மாட்டும்போது, கயிறு அறுந்து விட்டால் உடனே வேறு கயிறும் தயாராக வைக்கப்பட்டுள்ளது.. 4 கயிறுகள் என்றால், 8 கயிறுகள் கையிருப்பில் வைத்திருக்கிறார்கள். இவர்கள் இறந்துவிட்டார்களா என்பதை உறுதிசெய்ய டாக்டர்கள் குழுவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

  கடைசி ஆசை

  கடைசி ஆசை

  இந்த தண்டனையை நிறைவேற்றும்போது, மாஜிஸ்திரேட்டு, திகார் ஜெயில் சூப்பிரண்டு, துணை சூப்பிரண்டு, மருத்துவ அதிகாரிகள் 2 பேர் என 5 பேர் மட்டுமே தூக்கு மேடை அருகே இருப்பார்கள். கொஞ்ச தூரத்தில் 10 போலீஸ்காரர்கள், 2 ஏட்டுகள் நிற்பார்கள்.. மற்றபடி பிற கைதிகள் எல்லாரையும் ரூமுக்குள் பூட்டிதான் வைப்பார்கள். கடைசி ஆசை என்ன என்று கேட்டு.. அதனை நிறைவேற்றுவார்கள். முக்கியமாக மத ரீதியிலான வழிபாட்டுக்கும் அனுமதி வழங்கப்படும்.

  பரிசோதனை

  பரிசோதனை

  தூக்கில் தொங்கிய பிறகு அரை மணிநேரத்துக்கு பிறகுதான் டாக்டர்கள் பரிசோதனை செய்து உறுதி செய்து.. அதன்பிறகு மெடிக்கல் சர்டிபிகேட் வழங்குவார்கள்.. பிறகு உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்படும்.. இதையடுத்து அவரவர் மத வழிபாட்டின்படி அன்றையதினமே அடக்கம் அல்லது தகனம் செய்து கொள்ளலாம்.. ஆனால் இறுதிசடங்கு செய்யகூடாது.. தூக்கில் தொங்கும் நாள் நெருங்கி வருவதால்.. 4 பேருமே ஜெயிலுக்குள் பீதியில் விழித்து கொண்டிருக்கிறார்களாம்.

   
   
   
  English summary
  nirbaya case: dummy execution conduct in tihar jail for nirbhya convicts before january 22
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X