டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மார்ச் 20ல் தூக்கு.. நிர்பயா வழக்கு குற்றவாளி வினய் சர்மா டெல்லி ஆளுநரிடம் புதிய கருணை மனு

Google Oneindia Tamil News

டெல்லி: மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்று கோரி நிர்பயா வழக்கு குற்றவாளி வினய் சர்மா டெல்லி லெப்டினன்ட் கவர்னர் அனில் பைஜால் முன் புதிய கருணை மனு தாக்கல் செய்துள்ளார்.

டெல்லியில் துணை மருத்துவ கல்லூரி மாணவி நிர்பாய கடந்த 2012ம் ஆண்டு கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த கடுமையாக தாக்கப்பட்டார. இதில் படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.

Nirbhaya case convict Vinay Sharma files fresh mercy plea

இந்த சம்பவம் தொடர்பாக முகேஷ்குமார் (32), பவன் குப்தா (25), வினய் சர்மா (26), அக்சய் குமார் சிங் (33) ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இவர்களை நாளை அதாவது மார்ச் 3ம் தேதி டெல்லி திகார் சிறையில் தூக்கிலட வேண்டும் என்று கடந்த 17ம் தேதி டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த வழக்கில் பவன்குமார். முகேஷ் குமார் சிங், வினய் குமார் சர்மா மற்றும் அக்‌ஷய் குமார் ஆகிய நான்கு குற்றவாளிகளின் கருணை மனுக்களும் ஏற்கனவே ஜனாதிபதியால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்று கோரி நிர்பயா வழக்கு குற்றவாளி வினய் சர்மா டெல்லி லெப்டினன்ட் கவர்னர் அனில் பைஜால் முன் புதிய கருணை மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்நிலையில் டெல்லியில் பலாத்கார சம்பவங்கள் நடந்த 10 மாதத்தில் நீதிமன்றம் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதித்த போதிலும், உயர் நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் முறையீடுகள் மரணதண்டனையை நிறைவேறுவதில் இழுபறி நீடிக்கிறது.

இறுதியாக இவர்களுக்கு வரும் மார்ச் 20 தேதி காலை 5.30 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என டெல்லி நீதிமன்றம் அறிவித்துள்ளது. முன்னதாக மேல்முறையீட்டு மனுதாக்கல் காரணமாக நான்கு முறை மரண தண்டனை நிறைவேற்றம் தள்ளிவைக்கப்பட்டது.

English summary
Ahead of March 20 hanging, Nirbhaya case convict Vinay Sharma files fresh mercy plea
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X