டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நிர்பயா குற்றவாளிகளை நான் தூக்கிலிடுகிறேன்.. அமித்ஷாவுக்கு ரத்த கடிதம் எழுதிய விளையாட்டு வீராங்கனை

Google Oneindia Tamil News

டெல்லி: நிர்பயா குற்றவாளிகளை தூக்கிலிடும் பணியை மேற்கொள்ள தனக்கு அனுமதி அளிக்க கோரி இந்தியாவைச் சேர்ந்த சர்வதேச துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை வர்த்திகா சிங் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு ரத்தத்தில் கடிதம் அனுப்பி உள்ளார்.

டெல்லியில் கடந்த 2012ம் ஆண்டு ஓடும் பேருந்தில் நிர்பயா என்ற பெண் ஒரு கும்பலால் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்த பெண் மருத்துவமனையில் சிகிச்சை பலன்இன்றி உயிரிழந்தார்.

நிர்பயா பாலியல் பலாத்கார படுகொலை சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.குற்றவாளிகளை தூக்கிலட வேண்டும் என்றும் அவர்களை கொல்ல வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்தது.

"உன்னை பார்த்தா டாக்டர் மாதிரி தெரியலயே.. நீயெல்லாம்.." அரசு பெண் டாக்டரை தாக்கிய 2 பெண்கள் கைது

உச்ச நீதிமன்றம் உறுதி

உச்ச நீதிமன்றம் உறுதி

நிர்பயா வழக்கை விசாரித்த டெல்லி நீதிமன்றம் குற்றவாளிகள் நான்கு பேருக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. இந்த தண்டனையை டெல்லி உயர்நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் உறுதி செய்துள்ளன.

7 ஆண்டுகள் ஆகிவிட்டது

7 ஆண்டுகள் ஆகிவிட்டது

ஆனால் நிர்பயா இறந்து 7 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் இதுவரை குற்றவாளிகள் 4பேரும் தூக்கிலப்படவில்லை, குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்ட கருணை மனு, உச்ச நீதிமன்றத்துக்கு சீராய்வு மனு உள்ளிட்ட காரணங்களால் தூக்கிலிடும் பணி இன்னமும் நடைபெறவில்லை.

குற்றவாளிகள் என்கவுண்ட்டர்

குற்றவாளிகள் என்கவுண்ட்டர்

இதற்கிடையே ஹைதராபாத்தில் பெண் கால்நடை மருத்துவர் பலாத்காரம் செய்து எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் 4பேரும் 10 நாளில் என்கவுண்டர் செய்து கொல்லப்பட்டனர். இதேபோல் நிர்பயா வழக்கு குற்றவாளிகளும் உடனே தண்டிக்கப்பட வேண்டும் என்று மக்கள் பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

வர்த்திகா சிங்

இந்நிலையில் நிர்பயா குற்றவாளிகளை தூக்கிலிடும் பணியை மேற்கொள்ள அனுமதி கோரி இந்தியாவைச் சேர்ந்த சர்வதேச துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை வர்த்திகா சிங் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு ரத்தத்தில் கடிதம் அனுப்பி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

English summary
nirbhaya case: international shooter vartika singh written a letter in blood to amit shah , she said i will give death sentence to accused of nirbhaya case
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X