டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நிர்பயா அம்மாவின் சேலையை பிடித்து.. என் மகனை மன்னிச்சுருங்க.. காப்பாத்துங்க.. கெஞ்சிய முகேஷின் தாய்

நிர்பயா தாயாரிடம் முகேஷின் தாயார் கெஞ்சினார்

Google Oneindia Tamil News

Recommended Video

    நிர்பயா வழக்கில் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனையை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்- வீடியோ

    டெல்லி: "என் மகனை மன்னிச்சுருங்க.. அவனோட உயிருக்காக உங்க கிட்ட பிச்சை கேட்கிறேன்" என்று நிர்பயா அம்மாவின் சேலையை பிடித்து கெஞ்சி கேட்டார் பாலியல் பலாத்கார கொடூரன் முகேஷின் தாயார். நிர்பயா கொலையாளிகள் நான்கு பேரையும் தூக்கிலிடும் உத்தரவை டெல்லி கோர்ட் பிறப்பித்ததைத் தொடர்ந்து இப்படி கண்ணீர் மல்க நிர்பயாவின் தாயாரிடம் கெஞ்சினார் முகேஷின் அம்மா.

    நிர்பயாவுக்கு ஏற்பட்ட கொடூர முடிவை யாரும் இன்னும் மறக்கவில்லை. மனசில் ஈரம் உள்ள யாராலும் அதை மறக்க முடியாது. பெண்ணைப் பெற்ற ஒவ்வொரு மனசும், கலங்கிப் போன சம்பவம் அது. நம்ம மகளுக்கு நடந்தால் எப்படி பதறுவோமோ அப்படித்தான் ஒவ்வொரு மனசும் அன்று பதறியது.

    அப்படிப்பட்டன ஈவு இரக்கமற்ற பாவச் செயலை செய்த அந்த நான்கு கொலையாளிகளுக்கும் அதாவது முகேஷ் சிங், பவன் குப்தா, வினய் சர்மா, அக்ஷய் குமார் சிங் ஆகியோரை தூக்கிலிட நேற்று டெல்லி கோர்ட் உத்தரவிட்டது. இதைக் கேட்டு பெரும் மகிழ்ச்சி அடைந்தார் கோர்ட்டுக்கு வந்திருந்த நிர்பயாவின் தாயார்.

     நிர்வாண வீடியோ.. ஆபாச படங்கள்.. மிரட்டும் சாய்.. 11 பெண்களை நாசம் செய்த கொடுமை.. பரபர தகவல்கள்! நிர்வாண வீடியோ.. ஆபாச படங்கள்.. மிரட்டும் சாய்.. 11 பெண்களை நாசம் செய்த கொடுமை.. பரபர தகவல்கள்!

    தூக்கு

    தூக்கு

    நேற்று கோர்ட் பிறப்பித்த தீர்ப்பின்டி ஜனவரி 22ம் தேதி காலை 7 மணிக்கு இந்த நால்வரும் தூக்கிலிடப்படவுள்ளனர். இந்த தீர்ப்பைக் கேட்டு ஒரு பெற்ற வயிறு மகிழ்ச்சி அடைந்தது.. இன்னொரு பெற்ற வயிறு வேதனை அடைந்தது. அது முகேஷின் தாயார். தீர்ப்பைக் கேட்டதும் முகேஷின் தாயார், நீதிபதிக்கு கை கூப்பி கண்ணீர் மல்க கருணை காட்டுமாறு கோரிக்கை விடுத்தார்.

    இரக்கம் காட்டுங்க

    இரக்கம் காட்டுங்க

    பிறகு மனசு கேட்காமல் நிர்பயாவின் தாயாரிடம் வேகமாக சென்றார். அவரது சேலையைப் பிடித்து பிச்சை கேட்பது எனது மகனை மன்னிச்சுருங்க. அவனோட உயிர் இப்ப உங்க கையில்தான். இரக்கம் காட்டுங்க என்று அழுதபடி கெஞ்சினார். நிர்பயாவின் தாயார் எதுவும் பேசாமல் அமைதியாக நின்றிருந்தார். அவரால் எப்படி இரக்கம் காட்ட முடியும். பெற்று வளர்த்த செல்ல மகளை கோரமாக பறி கொடுத்த துயரத்தின் வடு அத்தனை சீக்கிரம் போய் விடுமா.

    முகேஷ் தாயார்

    முகேஷ் தாயார்

    முகேஷின் தாயார் தொடர்ந்து அழுவதைப் பார்த்த நிர்பயாவின் தாயார், மெல்ல வாய் திறந்து, எனக்கும் மகள் இருந்தாள். அவளுக்கு நடந்ததை அத்தனை சீக்கிரம் மறக்க முடியுமா. இந்த நீதிக்காகத்தான் நான் ஏழு வருடமாக காத்திருந்தேன் என்று கூறினார். அதைக் கேட்டு முகேஷின் தாயார் மெளனமாக அழுதபடி நின்றிருந்தார். இந்த நிகழ்வுகளால் கோர்ட்டே மயான அமைதியுடன் காட்சி அளித்தது.

    தாய்மை

    தாய்மை

    ஒரு வயிறு துடிக்கிறது.. இன்னொரு வயிறு தவிக்கிறது. மனசெல்லாம் பதறி அடிக்கிறது. மறக்க முடியாத கொடூரத்தை செய்வதற்கு முன்பு ஒரு நொடி ஒரே நொடி அந்த பாதகர்கள் யோசித்திருந்தால் இப்படி பெற்ற வயிறுகள் பதை பதைக்குமா, கதறுமா, தவிக்குமா.. யோசித்துப் பார்க்கவே முடியாத அளவுக்கு விபரீதத்தை செய்து விட்ட அந்த பாதகர்களை இப்போதும் கூட பாதுகாக்க நினைக்கிறார்களே.. அதுதான் தாய்மையின் மேன்மை.. அந்த தாய்மையும் ஒரு பெண்மை என்பதை ஆண்கள் உணர்ந்தாலே பாதி குற்றங்கள் குறைந்து விடும். இனியாவது திருந்தட்டும் ஆண் உலகம்.

    English summary
    forgive my son, urges mukesh's mother and "I had a daughter too, replies Nirbhaya’s mother
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X