டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

டீ, தண்ணீர் வேண்டாம்.. கடைசி ஆசை கூட நிறைவேறவில்லை.. நிர்பயா குற்றவாளிகளுக்கு நேர்ந்த கதி இதுதான்!

நிர்பயா குற்றவாளிகள் நான்கு பேருக்கும் இன்று கடைசி ஆசை கூட நிறைவேற்றப்படாமல் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

டெல்லி: நிர்பயா குற்றவாளிகள் நான்கு பேருக்கும் இன்று கடைசி ஆசை கூட நிறைவேற்றப்படாமல் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

Recommended Video

    நிர்பயா குற்றவாளிகளுக்கு நேர்ந்த கதி இதுதான்

    நிர்பயா குற்றவாளிகள் நான்கு பேருக்கும் இன்று தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. குற்றவாளிகள் அக்சய் குமார் சிங், வினய் குமார் சர்மா, பவன் குப்தா, முகேஷ் சிங் ஆகிய நான்கு பேருக்கும் சாகும் வரை தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

    2012 டிசம்பர் 16ம் தேதி டெல்லியில் ஓடும் பேருந்தில் நிர்பயா கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இந்த கொலை சம்பவம் நாட்டையே உலுக்கியது குறிப்பிடத்தக்கது.

    கடைசி தவிப்பு.. விவாகரத்து கோரி.. அழுதும் புரண்டும்.. கடைசிவரை கணவனை காக்க முடியாமல் விதவையான புனிதாகடைசி தவிப்பு.. விவாகரத்து கோரி.. அழுதும் புரண்டும்.. கடைசிவரை கணவனை காக்க முடியாமல் விதவையான புனிதா

    சட்ட போராட்டம்

    சட்ட போராட்டம்

    இந்த நிலையில் நிர்பயா குற்றவாளிகள் தங்களுக்கு எதிரான தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று தூக்கு மேடைக்கு செல்வதற்கு சில நிமிடத்திற்கு முன்பு வரை கூட சட்ட போராட்டங்களை மேற்கொண்டனர். அதன்படி குற்றவாளி பவன் குப்தா சார்பாக தூக்கு தண்டனையை ரத்து செய்ய கோரி டெல்லி ஹைகோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டது. அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதால், சுப்ரீம் கோர்ட்டில் நேற்று இரவே மேல்முறையீடு செய்யப்பட்டது.

    இன்று அதிகாலை

    இன்று அதிகாலை

    இந்த மனு மீதான விசாரணை இன்று அதிகாலை 2.45 மணிக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்தது. நீதிபதிகள் பானுமதி, அசோக் பூஷன், போபண்ணா ஆகியோர் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இதில் குற்றவாளிகள் சார்பாக வழக்கறிஞர் ஏபி சிங் ஆஜராகி வாதம் செய்தார். அதில் வழக்கறிஞர் ஏபி சிங் இதற்கு முன் வைத்த அதே வாதங்களை உச்ச நீதிமன்றத்தில் வைத்தார்.

    டெல்லி ஹைகோர்ட்

    டெல்லி ஹைகோர்ட்

    டெல்லி ஹைகோர்ட், பாட்டியாலா நீதிமன்றத்தில் வைத்த அதே வாதங்களை உச்ச நீதிமன்றத்தில் வைத்தார். இதை கேட்டு கோபம் அடைந்த நீதிபதிகள், புதிய வாதங்களை வையுங்கள். சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லாதீர்கள் என்று கூறினார்கள். இதையடுத்து வழக்கறிஞர் ஏபி சிங் பல்வேறு வழக்குகளை எடுத்துக்காட்டாக கூறி, இந்த தூக்கு தண்டனையை தற்காலிகமாக ஒத்தி வைக்க வேண்டும் என்று கூறினார்.

    ஆனால் என்ன

    ஆனால் என்ன

    ஆனால் இதை எதையும் நீதிபதிகள் ஏற்றுக்கொள்ளவில்லை. குற்றவாளிகள் நான்கு பேருக்கு எதிரான குற்றம் நிரூபிக்கப்பட்டது. இந்த வழக்கு முறையாக நடந்து இருக்கிறது. முறையான பாதையில் இந்த வழக்கு சென்று உள்ளது. கருணை மனு அளிக்க 4 வருடங்கள் வரை நேரம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. அதனால் அவர்களுக்கு எதிரான தூக்கு தண்டனையை ரத்து செய்ய முடியாது என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

    என்ன அதிர்ச்சி

    என்ன அதிர்ச்சி

    இதையடுத்து அதிர்ச்சி அடைந்த குற்றவாளிகள் தரப்பு வழக்கறிஞர் ஏபி சிங், குற்றவாளிகள் நான்கு பேரையும் அவர்களின் குடும்பத்தாரை சந்திக்க அனுமதிக்க வேண்டும். தண்டனையை நிறைவேற்றும் முன் அவர்களின் குடும்பத்தாரை சந்திக்க இவர்களுக்கு அனுமதி கொடுக்க வேண்டும். கடைசி ஆசையாக இதை நிறைவேற்ற வேண்டும் என்று கூறினார்.

    அங்கே கேளுங்கள்

    அங்கே கேளுங்கள்

    இதை நீங்கள் மத்திய அரசு வழக்கறிஞரிடம்தான் கேட்க வேண்டும், எங்களிடம் கேட்க கூடாது என்று நீதிபதிகள் கூறிவிட்டனர். ஆனால் மத்திய அரசின் வழக்கறிஞர் சொலிஸ்டர் ஜெனரல் துஷார் மேத்தா இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். அதில், இந்த குற்றவாளிகளை குடும்பத்தாரை சந்திக்க அனுமதிக்க முடியாது. திகார் சிறை விதிகளுக்கு இது எதிரானது என்று கூறினார். இதை கேட்டு வழக்கறிஞர் ஏபி சிங் அதிர்ச்சி அடைந்தார்.

    அதிகாலை என்ன

    அதிகாலை என்ன

    அதன்பின் இன்று அதிகாலை 5.30 மணிக்கு குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. அவர்களின் தூக்குக்கு முன் டீ மற்றும் தண்ணீர் கொடுக்கப்பட்டது. ஆனால் இதை குற்றவாளிகள் ஏற்றுக்கொள்ளவில்லை. அதேபோல் அவர்களின் கடைசி ஆசையான, குடும்பத்தை சந்திக்க வேண்டும் என்ற ஆசையும் நிறைவேற்றப்படவில்லை. அவர்கள் குடும்பத்தையே சந்திக்காமலே கடைசியில் தூக்கில் ஏற்றப்பட்டனர்.

    English summary
    Nirbhaya case: The Convicts even couldn't see their relatives before the execution today.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X